Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 22 - 44 minutes)
Pin It
Author: srilakshmi

04. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

வீடு திரும்பும் வழி நெடுக சிந்தனையில் கரண்.. சரணோ, இனி என்னவாகும் என்ற எதிர்ப்பார்பில் இருந்தான்.. கனத்த மௌனம் திரை போல இருவர் இடையிலே. வீட்டை அடைந்தவர்கள், அவர்களை எதிர் நோக்கி ஹாலிலேயே இருந்த அன்னை, தந்தையை எதிர் கொண்டார்கள்.

ஒன்றும் சொல்லாமல் தன் தாயருகில் அமர்ந்த கரண் தாயின் மடியில் தலை வைத்து, "இனி எல்லாம் முடிந்தது அம்மா" என்றான்.. அதிர்ந்து நோக்கிய தாயைப் பார்த்தவன், மை டேஸ் ஆர் கவுண்டட்.. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கக் கூடும்.. உங்களை எல்லாம் பிரிய வேண்டுமே என்று மனம் சஞ்சலமாக இருக்கிறது அம்மா.. என்னம்மா செய்யப் போகிறேன் நான்" என்று கண்களை மூடி சிறிது நேரம் படுத்திருந்தான்.

அவன் கூறியதை கண்ணீர் மல்க கேட்ட சியாமளா, கரணின் தலையை தடவியவாறு சரணை நோக்க, பார்வையாலேயே அதை ஆமோதித்தான் சரண்.

Nizhal nijamagirathu

சிறிது ஆசுவாசப்படுத்தி கொண்ட சியாமளா, "நம்பிக்கையை கை விடாதே கண்ணா.. நீ எப்போதும் எங்களுடன் தான் இருப்பாய்.. ஏதாவது ஒரு வழி பிறக்கும்.. சிறிது நேரம் உன் ரூமில் படுத்து ரெஸ்ட் எடு" , என்று கூறியவர், தன் துக்கத்தை மறைத்தவாறு சிறு கேவலுடன் தன் கணவனை அழைத்து கொண்டு அங்கிருந்து தங்கள் அறைக்குள் நுழைந்தார்.

கணவன் மீது சாய்ந்து .."நாம் என்ன பாவம் செய்தோம்.. நம் ரத்தம் இப்படி துடிதுடிக்கிறதே.. வாழ வேண்டிய வயதில் வாழ்வை முடிக்கச் சொல்லி ஆணை வந்து விட்டதே "என கதறினார்.

கிருஷ்ணன், "சியாமி மனம் தளர விடாதே அம்மா.. நம் ரத்தம் , உயிர் பரிதவிப்பது எனக்கும் தாளவில்லை.. ஆனால் விதி வலியது.. பார்ப்போம்..ஏதாவது செய்யலாம் என்றால் கூட எங்கு தொடங்குவது" என, தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார் மனைவியிடம்.

வெளியே அமர்ந்திருந்த கரண், தன் ரூமிற்குள் சென்று தன் மூடை மாற்றிக் கொள்ள டீவியை ஆன் செய்தான்.. அந்த சேனலில் அப்போது தான் தொடங்கியிருந்த அந்த ஆவணப் படத்தை கண்ணுற்றான்.. அது வாடகைத் தாய் வழியே குழந்தை பெற்றுக் கொள்ளும் வழி பற்றிய படம்.. ஹாஸ்பிடல்களில் இந்த முறையை சட்ட பூர்வமாக சரியே என்று கூறி, பின் பற்றி பிள்ளயில்லாதவர்களுக்குப் பிள்ளை வரம் கொடுப்பதைப் பற்றியது.. சிறிது நேரம் நிகழ்ச்சியை பார்த்தவனது மனதில் ஒரு மின்னல்.. சற்றே சிந்தித்தான்..

'ஆம் இது ஒன்று தான் வழி.. நானே சாகப் போகிறேன்.. எனக்கு என் பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்.. என் தாய்க்கு என்னை போல, எனக்கு பின் என் அடையாளமாக ஒரு பேரனோ, பேத்தியோ என் மூலம் வேண்டும் ..ஆனால்' என்று சிந்தித்தவன்....

அறையினுள் நுழைந்த சரணை கண்டவன், சரணிடம், தான் கண்ட காட்சியையும் அதைத் தொடர்ந்து தன் முடிவையும் கூறினான்.

"இதில் உன் அபிப்பிராயம் என்னடா" என்று கேட்டவனை அதிர்ந்து நோக்கினான் சரண்.

"டேய் இது என்ன விபரீதம்டா? நீயேன் இப்படி சிந்திக்கிறாய்? உன் காலத்திற்குப் பின் அந்த குழந்தையின் கதி? வாழக்கை என்ன உனக்கு விளையாட்டா? அத்தனை சுலபமா?"...

"இல்லைடா.. நான் யோசித்து விட்டேனடா? இது ஒன்று தான் வழி.. எனக்கு ஒரு வாரிசு என்ன ஆனாலும் வேண்டும்.. அதற்கு முக்கியம் "வாடகைத் தாய்." அவளை செயற்கை முறையில் கருதரிக்க வைத்து விட்டால்..பின் நான் நினைத்தது சுலபமாக நடந்து விடுமே.. ஒரு 'சான்ஸ்' எடுத்து பார்க்கிறேன்.. குழந்தை உண்டானால் அவள் பெற்று தரட்டும்.. அது வரை நான் இருப்பேனா என்பது சந்தேகமே!....

"அதனால் என்ன, என் குழந்தையை எனக்காக நீ வளர்க்க மாட்டாயா என்ன? அப்பாவிற்கும், அம்மாவிற்கும், எனக்காகவும் என்னை அடையாளம் காட்டி முன்னிறுத்த வரும் குழந்தையை என் சகோதரன் நீ வளர்க்க மாட்டாயா?" என்று அவனிடமே பந்தை தூக்கி போட்டான்.

ஒரே நாளில் அடுக்குக்கான நிகழ்வுகளில் தன் யோசிக்கும் திறனையே தொலைத்திருந்த சரண், தன் சகோதரனின் கிடிக்கிப் பிடியில் தலையை தன்னயறியாமலேயே ஆட்டினான்.

பின் " பொறுடா.. முதலில் டாக்டரிடம் இதைப் பற்றி பேசுவோம்.. இதன் சாத்தியக் கூறுகளை தெரிந்து கொண்டு பிறகு சிந்திப்போம்.. அது வரை நம் பெற்றோரிடம் கூட சொல்ல வேண்டாம்" என்றான்.

டுத்த நாளும் வந்தது.. ஹாஸ்பிடல் செல்லும் பயணமும் தொடர்ந்தது.. திரும்பவும் அதே ஹாஸ்பிடல், அதே டாக்டர்,.. இந்த முறை..

கரண் சொல்லுவதை ஆழ்ந்துக் கேட்ட டாக்டர்.."கரண் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது எனக்கு தெரியாது..ஏனெனில் நீங்கள் தற்சமயம் உட் கொள்ளும் மருந்துகளும், கீமோவும் உங்கள் உயிர் அணுக்களை செயலிழக்க செய்யும் ஆற்றல் உடையது. எனினும், காட் இஸ் கிரேட்.. முயற்சி செய்து பார்க்கலாம்.. என் மனைவி இந்தத் துறையில் இந்த ஹாஸ்பிடலில் தான் ப்ராக்டீஸ் செய்கிறாள்.. நீங்கள் சென்று பாருங்கள் என்றவர், எதற்கும் ஒரு ப்ளட் டெஸ்ட், மற்றும் உங்கள் உடற் கூறுகள் டெஸ்ட், இது சம்மந்தமான டெஸ்ட்டுக்களை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்"

"சரண் நீயும் எல்லா டெஸ்ட்டும் ஒர் முறை எடுத்து விடு.. எனெனில் நீ தானே குழந்தையை வளர்க்க வேண்டியவன்.. மற்றும், நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகளாதலால் உனக்கும் உன் உடல் நிலையை நன்கு கண்காணிக்க வேண்டும்."

கண் முன் தெரிந்த சிறு நம்பிக்கையப் பற்றிக் கொள்ளும் ஆர்வத்துடன், லேப் நோக்கி விரைந்தான் கரண்.. அவனை தொடர்ந்தான் சரண்..

அனைத்து சோதனைகளயும் முடித்து கொண்ட சகோதரர்கள், மீண்டும் டாக்டரிடம் செல்ல, டாக்டரின் மனைவி ஐ.வி.எஃப் ஸ்பெஷலிஸிட் (இன்விட் ரோ பெர்ட்டிலைசேஷன்- சோதனக் குழாய் கருதரிப்பு) டாக்டர் சுபாவும் அங்கு அமர்ந்திருப்பதை பார்த்தார்கள்.

டாக்டர் பாலாஜி தன் மனைவியிடம் அனைத்தையும் கூறி முடிக்க, தன் கணவர் கூற்றை அமோதித்த டாக்டர் சுபா,,, "இதோ பாருங்கள் கரண்.. மருத்துவம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.. சில விஷயங்கள் நம் கையில் கிடையாது.. உங்களுக்கே தெரிந்திருக்கும், உங்கள் உடல் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறதோ இன்னும் தெரிய வில்லை.. உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு சான்ஸ் எடுத்து பார்க்கலாம்..மற்றபடி விந்தணுக்கள் மோசமான நிலையில் இருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்.. அதன் தரமும் மோசமாக தான் இருக்கும்.. இது பொதுவான விஷயம்.. ஆனால் சில நவீன சிகிச்சை முறைப்படி ஒரு முயற்சி செய்து பார்ப்போம், என்று நிறுத்தியவர், பின்,

ஆனால், அதன் வெற்றி பற்றி என்னால் உறுதி கூற முடியாது.. இதற்கு சம்மதமா?" என்று கேட்டார்.

கரணோ, உடனே, "மேடம் , எனக்கு எப்படியாவது ஒரு கடைசி முயற்சி செய்ய வேண்டும்.. அட்லீஸ்ட் என் வாரிசை விட்டுச் செல்லுகிறேன் என்ற சந்தோஷத்தை தாருங்கள்"

அதற்கு டாக்டர் சுபா , "பார்ப்போம்.. முதலில் உன் டெஸ்ட் ரிபோர்ட்டுகள் வரட்டும்.. அதன் பிறகு ஒரு வாடகைத் தாய் தேவை நமக்கு.. இதற்கென்று வரும் பெண்கள் எப்படி எனத் தெரியாது. பொதுவாக, 'சரோகேட் மதரில்' , ஒரு தம்பதியின் சினை பிடித்த கருவை மட்டும் வைத்து வளர வைக்கும் இடமாகத்தான் அவர்கள் கர்பப்பைகளை யூஸ் செய்வோம்.. ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல பெண்ணின் கரு முட்டையும் தேவை.. கர்ப்பம் வளர ஒரு தாயும் தேவை.. எனவே நீங்கள் இருவரும் 'சரோகேட் மதருக்காக' ஒரு நல்ல பெண்ணை ஏற்பாடு செய்யுங்கள்.. பிறகு பார்ப்போம்"...

"ஓ இதில் இப்படி ஒரு உள் குத்து இருக்கிறதா" என்ற கரண்,

"இப்போது ஒரு நல்ல பண்பான பெண்ணுக்கு எங்கடா போவது சரண்?"

டாக்டர் பாலாஜி, "எனக்குத் தெரிந்த வழியில் நானும் ட்ரை செய்கிறேன்.. பணத்துக்காக வரக் கூடிய பெண்கள் இருந்தாலும், நல்ல குடும்ப பெண் கிடைத்தால் நலம்.. பார்க்கலாம்.. நீங்களும் முயற்சி எடுங்கள்" என்று கூறி நம்பிக்கையூட்டினார். 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

SriLakshmi

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிsrilakshmi 2015-07-16 14:26
கருத்துக்களுக்கு நன்றி.. தொடர் ஆதரவை எதிர் பார்க்கிறோம்....துளசி யாரை மணப்பாள் என்பது விரைவில் தெரிய வரும்..அதுவரை..தொடர்ந்து கதையை படித்து மகிழுங்கள்..

ஸ்ரீலக்ஷ்மி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிsrilakshmi 2015-07-16 14:23
thanks to all
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிsrilakshmi 2015-07-16 14:22
thanks
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிBhuvani s 2015-07-15 23:07
Nice n excellant epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிsrilakshmi 2015-07-16 14:22
thanks
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிchitra 2015-07-15 12:21
nalla epi, thulasi ethuthu irrupathu nalla mudivu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிmeera moorthy 2015-07-15 10:41
Super epi Srilakshma....... (y)
Thulasi oda badhil super..... :clap:
thulasi karn oda kuzhandaiye sumapala.... :Q:
appo thulasi saran kuda eppadi sera pora....... :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிKeerthana Selvadurai 2015-07-15 10:00
Excellent update Srilakshmi :clap:

Karan-Thulasi conversation sema (y) Thulasi-oda pathiladi karanukku thevai than... :yes:

Thulasi-yin vaazhvu saran-odu eppadi amaiya pogirathu ena ariya kaathirukirom...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 04 - ஸ்ரீலக்ஷ்மிThenmozhi 2015-07-14 22:52
very interesting theme Srilakshmi (y)

oru velai Karan health romba mosama irupathala Saran-oda kulanthaiyai Thulasi sumaka vendiyatha irukumo :Q: :Q:

Waiting to read more :)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top