(Reading time: 22 - 44 minutes)

"சார், இவர்களை நான் நேற்று இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பார்த்திருக்கிறேன்.. அப்பொழுது தெரியாது இவர்கள் யார் என்று?", தான் அவர்களை சந்தித்த விதத்தை டாக்டரிடம் கூறியவள், அந்த இரட்டையர்களப் பார்த்து சன்னமாக புன்னகைத்தாள்.

டாக்டர் . பாலாஜி, " சரிம்மா.. இவர்கள் இப்போது இங்கே வந்திருக்கிறார்கள்.. உன் சந்தேகம் என்னவோ அதை நேரிடையாவே கேட்டு விடு.. நான் ரவுன்ட்சுக்கு போய் வருகிறேன்".

அதற்கு அவள் , " சந்தேகமில்லை டாக்டர், அது ஒரு சிறு நிபந்தனை.. இல்லை விண்ணப்பமும் எனக் கூட வைத்துக் கொள்ளலாம்.. உங்கள் இருவர் முன்னேயே அதைப் பற்றி பேசி விடுகிறேன்.. ப்ளீஸ் எனக்காக நீங்களும் மேடமும் இங்கேயே இருங்கள் சார்".

அதற்கு டாக்டர். பாலாஜி, "இதோ பாரம்மா, உனக்கும் சரி, கரணுக்கும் சரி உங்கள் இருவரையும் ஒரு நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்திருக்கிறேன்.. இந்த விஷயங்களில் நான் கருத்து சொல்ல முடியாது.. ஆனாலும், நீ கேட்டுக் கொள்வதால் ஒரு பார்வையாளராக இங்கே இருக்கிறோம் நாங்கள்".. டாக்டர். சுபாவும் அதை ஆமோதித்தார்.

இரட்டை சகோதரர்களான கரணையும், சரணையும் நேர் பார்வையாக பார்த்த துளசி,

"நான் இதற்கு சம்மதிக்கிறேன்.. சற்று நிறுத்தியவள், வாடகைத் தாயாகி உங்கள் உயிரை சுமந்து தருகிறேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. இதை என்னால் மிஸ். துளசியாக செய்ய முடியாது".

புரியாமல் குழப்பத்துடன் பார்த்த இரட்டையர்களை , "நீங்கள் நினைப்பது சரி தான்.. எனக்கு பெயருக்காக வேணும் மனைவி என்ற அந்தஸ்து தேவை" என்று பெரிய குண்டை போட்டாள்.

இப்போது தான் "அட நாம் வாயிலில் கண்ட சாந்தமான, நல்ல பெண்ணே இதற்கு உடன் பட்டு வந்திருக்கிறாளே" என எண்ணியவாறு இருந்த கரண் சட்டென விழுந்த பதிலில் ஆடிப் போனான்.

சரணோ, "இந்தப் பெண்ணா! பார்ப்பதற்கு லட்சணமாக அமைதியாக தெரிந்தாள்.. இவளுக்கு பணத்திற்க்கு இப்படி ஒரு தேவையிருந்தாள், இப்படி வாடகைத் தாயாக சம்மத்திருப்பாள் என்று எண்ணியவன், துளசியின் வேண்டுகோளில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான்.. மனதினுள் "இவள் நாம் நினைத்ததை விட புத்திசாலி தான் போல" என்று தன் அண்ணனையும் , துளசியையும் மாறி மாறி பார்த்தான்.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட கரண், "இதோ பார்.. உன் பாட்டிக்கு வைத்திய தேவைக்காக இதற்கு சம்மதிகிறாய் என் எனக்குத் தெரியும்.. வேண்டுமானால் நீ கேட்பதைப் போல் இரு மடங்கு பணம் தர சம்மதிக்கிறேன்.. கல்யாணம் என்றால் மொத்தமும் கிடைக்கும் என கேட்கிறாயா?" என்று கேட்டு அப்போதும் சுயனலமாக சிந்தித்து துளசியின் மனதில் அம்பை எய்து காயப்படுத்தினான்.

துளசி, சட்டென்று துளிர்த்த கண்ணீரை உள்ளிழுத்தவள், "இதோ பாருங்கள் சார்.. நான் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள், நீங்கள் நினைப்பது போல திட்டமிட்டு உங்கள் பணத்தை பறிப்பது என் நோக்கமல்ல.. உங்களுக்கு ஒரு தேவை இருக்கிறது.. அது போல் எனக்கும் ஒரு தேவை.. ஆகவே தான் இதற்கு சம்மதித்தேன்.. ஆனால் என் குடும்ப சூழல் மற்றும் நான் வளர்ந்த முறை ஆகியவற்றை சிந்தித்து பார்த்ததில், பரவாயில்லை, நம் பாட்டிக்கோ வயதாகி விட்டது.. விதி விட்ட வழி என என்னால் போய் விட முடியும், " என்று நிறுத்தி,

எனக்கிருக்கும் ஒரே துணை என் பாட்டிதான்.. வேறு எவரும் இல்லை.. அவரை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தே இதை செய்யத் துணிந்தேன்.. மற்றபடி எவ்வளவு சிந்தித்தாலும், கல்யாணமாகாத கன்னிப் பெண் ஒரு குழந்தை சுமந்து தருவது என்பது பணத்திற்காக என்றாலும் , எங்கள் சூழ் நிலையில் கேலிக் கிடமாகப் போய் விடும். நீங்கள் இதில் ஒன்றை யோசிக்க வேண்டும்.. நான் என் கருவணுவையும் தானமாக தந்து, கர்பப்பையையும் வாடகையாகத் தர வேண்டும்.. ஒரு விதத்தில் பிறக்கப் போகும் குழந்தை என்னில் பாதி அல்லவா? அதை ஒரு நல்ல உறவில் விளைந்தவன்/ள் என உங்களிடம் ஒப்படைக்கத் தான் நான் விரும்பிகிறேன்.. மற்றபடி, பணத்திற்காக என்றாலும், கழுத்தில் தாலியின்றி 'இல்லெஜிடிமேட் சைய்ல்ட்" ஆக சுமக்க என் மனம் ஒப்பவில்லை" என்று நிறுத்தினாள் துளசி.

"சபாஷ்.. புத்திசாலிப் பெண்" என் மனதினுள் துளசியை பாராட்டிக் கொண்டனர், டாக்டர் பாலாஜியும், சுபாவும்.

சரணோ வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தான்.

கரணோ, "இதோ பார் பெண்ணே.. நீ கர்ப்பத்தை சுமக்கும் போது நான் இருப்பேனோ என்னவோ? நீ ஏமாற்றி விட்டு சொத்தில், மனைவி என்ற உரிமையில் பங்கு கேட்டால்?" என்றவனை,

"சை .. நீ இவ்வளவு தானா" என்று பார்த்தவளை, கரண் இடையிட்டு,

"ஒரு நிமிடம் துளசி..நீ சொல்லுவது போலவே திருமணம் செய்து கொண்டு, பின் விதவை கோலத்தில் என் குழந்தையை சுமந்து, என் வீட்டில் அமர்ந்து கொண்டு நான் அவனது மனைவி, எனக்கு இந்த சொத்திலும், குழந்தையிடமும் சம உரிமை இருக்கிறது என்று நீ குழந்தையை தர மறுத்தால்? சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதே? நானோ, இன்றோ நாளையோ என ' வீட்டில் ஒரு கால், காட்டில் ஒரு கால்' என்று இருப்பவன்.. இதில் உன்னை மணந்து கொண்டு , நான் இறந்த பின்னும் என் குடும்பத்திற்கு பிரச்சனை என் பொருட்டு எழுவதை விரும்பவில்லை."

"இதோ பாருங்கள் சார், எனக்கு பணம் மட்டும் தான் பிரச்சனை.. உங்கள் பிரச்சனையோ அதைவிட பெரியது.. கடைசியாக ஒன்று தான் என்னால் செய்ய முடியும்.. நீங்கள் சட்ட பூர்வமாக என்னை மணக்க தேவையில்லை.. பெயரளவில் ஏதோ ஓர் கோவிலோ, இல்லை எங்கேயோ ஓர் இடத்திலோ தாலியை கட்டினால் கூட போதும்.. மற்றபடி சட்டபடி ஓர் வாடகைத் தாயாக இருந்து உங்கள் குழந்தையை பெற்று கொடுப்பேன்.. மற்ற எந்த உரிமையையும் கோர மாட்டேன் என்று கையெழுத்து போட்டு தருகிறேன்.. கட்டாயம் தாலி மட்டும் அவசியம் .. பிறகு உங்கள் விருப்பம். நம்பிக்கை தான் வாழ்க்கை.. நாளை என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்.. என் குழந்தை தன் சொந்த பந்தங்களோடு சௌக்கியமாக இருக்கிறான் என்பதே போதும்.. மற்றபடி எனக்கும் உங்கள் சொத்துக்களுக்கும், எந்த சம்மந்தமும் கிடையாது.. குழந்தையை முன்னிருத்தி எதையும் கோர மாட்டேன், என்று சட்ட ரீதியாக வேணுமானால் எழுதித் தருகிறேன். மேலும், நீங்கள் சொன்னது போல் உங்களுக்கு ஏதாவது நடந்தாலும் , விதவை போர்வையில் என் கௌரவத்தையும் , தன்மானத்தையும் காபாற்றிக் கொண்டு, குழந்தையை நல்ல முறையில் உங்கள் பெயர் சொல்லும் விதமாக கௌரவக் குறைவின்றி பெற்று தருவேன்"

கரண் ஒரு கணம் பிரமிப்பில் ஆழ்ந்தான்.. "எவ்வளவு நல்ல பெண் இவள்.. இவளிடம் என் குழந்தை வளர கொடுத்து வைத்திருக்க வேண்டும்".

"சரி துளசி.. எனக்கு சம்மதம்.. சட்ட பூர்வமாக இதை நாம் அணுகலாம்." என்று தன் பதிலை, தன் சம்மதத்தை கூறினான்.

டாக்டர். பாலாஜி, சுபா மற்றும் கரண் ஆகிய மூவரும் ஒரு கணம் அப்பாடி, ஒரு பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்தனர்.. சரணின் மனமோ துளசியை பற்றியே சிந்தித்தவாறு இருந்தது.

டாக்டர்.பாலாஜி, " துளசி, நாளையே உன் பாட்டியை இங்கே அழைத்து வர ஆம்புலன்ஸ் அனுப்பி விடலாம்.. மற்ற ஃப்ரோசிஜர், லீகல் டாக்குமென்டேஷன் அனைத்தையும் உடனே செய்து விடலாம்" என்றார்.

டாக்டர்.சுபா உடனே, "துளசி, நீ என் அறைக்கு கொஞ்சம் வர வேண்டும்.. உனக்கு சில டெஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது.. பிளட் சாம்பிள் கொடுத்து விடு.. இவையனைத்தையும் இன்றே செய்து விட்டால் வசதியாக இருக்கும்"

துளசியும் , "சரி டாக்டர்' என்று கூறி கரண், மற்றும் சரணிடம் விடைபெற்று டாக்டர். சுபாவின் பின் நடந்தாள்.

இனி....

Episode # 03

Episode # 05

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.