(Reading time: 22 - 44 minutes)

'ன்ன சொல்லுகிறார் இந்த டாக்டர் ' என்று புரியாமல் பார்த்தவளை,

"துளசி ! நான் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன்.. நீ ஒரு வாடகைத் தாயாக மாற வேண்டும்.. 'சரோகேட் மதர்' என்று கேள்வி பட்டு இருப்பாயே? அப்படி பட்டது தான்!.. என்ன ஒன்று, இரத்த தானம், விந்து தானம் மாதிரி இல்லாமல் இதில் கர்ப்பதானம் செய்ய வேண்டும்.. உன் சினை முட்டையோடு மற்றவரின் விந்தணுவை இணத்து உன் கர்ப்பபையிலே செலுத்தி விடுவோம்.. நீ உன் வயிற்றிலேயே பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்று வேறொருவருக்காக தானமாக தரப் போகிறாய். .. நீ ஒரு வாடகைத் தாயாக மாற வேண்டும்".

"வாடகைத் தாயா?" என்று அதிர்ந்து விட்டாள் துளசி. "நான் எப்படி" ..என்று அந்த வார்த்தையை கூறுவதே ஏதோ அறுவறுப்பாக தோன்ற நடு நடுங்கினாள்.

"துளசி, பதறாதே! நான் சொல்லுவதை கொஞ்சம் திறந்த மனமாகக் கேள். வாடகைத் தாய் என்பது ஒன்றும் அருவறுக்கக் கூடியது அல்ல".. மெடிகல் சயன்ஸில், இது வெளி நாடுகளில் இது சர்வ சாதாரணமாக இருக்கிறது.. என்ன நம்ம நாட்டிலே தான் கொஞ்சம் லேட்.. இப்போது தான் இங்கு அங்கு என்று நடந்து கொண்டிருக்கிறது. நான் மொத்தமாக சொல்லுகிறேன், நீ நினைப்பது போல் இது தவறானதோ, கெட்ட செயலோ இல்லை. இங்கே நீ உன் கருப்பப்பையை பத்து மாதம் வாடகைக்கு விடப் போகிறாய்.. ஒரு கோடீஸ்வர இரட்டை சகோதரர்கள்.. அவர்களில் ஒருவருக்கு தீர்க்க முடியாத கேன்சர்.. அவன் பெயர் கரண்.. அவனுக்கு நாட்கள் குறிக்கப்பட்டு விட்டது.. என்ன ஒன்று தான் சாகும் முன் தன்னுடைய பிரதியாக ஒரு வாரிசை விட்டுச் செல்ல நினைக்கிறான். இனி திருமணம் முடித்து, அதற்கு ஒரு மணமகள் கிடைத்து, அதிலும் சாகப் போகிறவனை எவள் கல்யாணம் செய்வாள்? ஏதற்கும் அவகாசம் இல்லை.. அதனால் தான் மருத்துவ உதவி மூலம் ஒரு 'சரோகேட் மதர்' தேடுகிறார்கள்".

"என்ன டாக்டர் இது, தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது.. குழந்தையை பெற்று எப்படி கொடுத்து விட முடியும்?

என்றவளை, இடை மறித்த டாக்டர், "துளசி, புரிந்து கொள்.. தாய்மை ,அதன் புனிதம் , எலோருக்கும் தெரியும்.. அதனால் அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்".

"பணத்திற்காக நிறைய பேர் இந்தக் காரியத்தை செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் கரண் தன் வாரிசை சுமப்பவள் நல்ல குடும்பப் பெண்னாக இருக்க வேண்டும் என்று நினைகிறான். அவர்களுக்கு, தங்கள் குடும்ப வாரிசை சுமப்பவள்.. நல்ல சூழ் நிலையில், அன்பும் பொறுமையும் நிறைந்தவளாக வேண்டும் என எதிர் பார்க்கிறான். மற்றபடி, பாரம்பரியம் என்பது ஒரு தொடர் கதை.. இதில் நல்ல மன நிலையில், சூழலில், நல்ல குணம் படத்தை இருவர் இணையும் பொழுது நல்ல வாரிசு அமைகிறது. நேற்று, என்னை அவர்கள் கேட்டவுடனே எனக்கு உன் ஞாபகம் தான் வந்தது."

'ஆனாலும் டாக்டர் இதை எப்படி செய்ய முடியும்?"

"இதோ பார், உனக்கோ பணப் பிரச்சனை.. என்னதான் முயன்றாலும், அவ்வளவு பணம் புரட்ட முடியாது. அவர்களுக்கு நீ வாடகைத் தாயாக இருந்து உதவினால் உன் பாட்டியின் ஆபரேஷனுக்கு வேண்டிய அனைத்தையும் அவர்களே செய்து விடுவார்கள்.. இங்கேயே இந்த தனியார் மருத்துவமனையிலேயே சர்ஜரி நடத்த ஏற்பாடு செய்வார்கள்.." என்ன சொல்லுகிறாய்?"

"டாக்டர் இதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஆகுமோ?"

"இங்கே பார், துளசி.. இதனால் உனக்கு எந்த பாதிப்பும் கிடையாது.. உன் சினை முட்டையை ஊசி மூலம் எடுத்து அவரது விந்தணுக்களோடு சோதனைக் குழாயில் சேர்ப்போம்.. கரு உருவானதும் பின்னர் ஊசி மூலம் உன் கருபப்பையில் செலுத்துவோம். மற்றுமொன்று, இதில் உடல் ரீதியான எந்த தொடர்பும் இல்லை.. சோ, உன் கற்பு, புனிதம் என்று எதற்கும் பாதிப்பு கிடையாது.. இதில் நீ யாருக்காக செய்யப் போகிறாய் என்பதை தெரிந்து கொள்ள கூட வேண்டாம், உனக்கு பிரியம் இல்லை என்றால்.. ஆக்சுவலி முறைப்படி பார்த்தால் நாங்கள் இதில் சம்பந்த பட்டவர்களைப் பற்றி கூற மாட்டோம்.. ஆனால் இதில் அவசரம் இருப்பதால் தான் யார் என்று சொல்லி விட்டேன். நீ செய்யும் இந்த உதவி, அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது.. நல்ல படித்த, பண்பான, பணக்காரக் குடும்பத்திற்கே இந்த விந்து தானத்தை நீ செய்கிறாய்.. நீ செய்யப் போவது ஒரு உத்தமமான காரியமம்மா"..

திகைப்புடன் அவர் சொல்லியதை கேட்டவள், என்ன செய்வது என்று புரியாமல் உட்கார்ந்து இருந்தாள்.

"எனக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை, தலையை சுற்றுகிற மாதிரி இருக்கு.. நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்" என்றவளை இடையிட்ட டாக்டர்,

"துளசி நீ ஒரு மணி நேரம் மெல்ல யோசி.. என் பெர்சனல் ரூமிற்கு போய் உட்கார்ந்து சிந்தித்துப் பார்.. ஆனால் எனக்கு உன் முடிவு ஒரு மணி நேரத்தில் தெரிய வேண்டும்.. உன்னால் முடியாது என்று நினைத்தால் எனக்கு உடனே சொல்லி விடு.. தயங்காதே, நிலைமை வெகு அவசரம்.. வேறு சந்தேகம் கேட்க வேண்டுமானால் என் வொய்ஃப் டாக்டர் சுபா இங்கே வருவார்.. அவர் ஒரு ஐ.வி. எஃப். ஸ்பெஷலிஸ்ட்டு.. நீ அவரிடம் தயங்காமல் கேள்.. நான் இப்பொழுது ரவுண்ட்ஸ் போகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

டாக்டரின் தனி அறையில் அமர்ந்த துளசி, 'இது எப்படி சாத்தியம்? கல்யாணம் ஆகாத நான் ஒரு கருவை சுமந்தால் உலகம் என்ன பேசும்.. உலகம் பேசுவது இருக்கட்டும், பாட்டிக்கு இது தெரிந்தால், தன்னை கொலையே செய்து விடுவார். பணத்திற்காக எது வேணுமானால் செய்ய முடியுமா?.. பாட்டியா.. இல்லை..என் சுய வாழ்வா?..என்ன முடுவெடுப்பது?..

தலை வலித்தது.. "என்ன வேண்டுமானால் நடக்கட்டும்..இப்பொழுது பாட்டியின் உயிர் தான் முக்கியம்".. என்று நினைத்தவள்..

'ஆமாம், இது தான் சரி, டாக்டரிடம் சொல்லுவோம்..இதற்கு ஒத்து கொண்டால் சரி..இல்லா விட்டால்.. பாட்டியுடன் சேர்ந்து நாமும் இந்த உலகத்தை விட்டே போய் விடுவோம்' என்று முடிவெடுத்தாள்..பின் டாக்டர். பாலஜியின் ரூமிற்கு உள்ளே நுழைந்தவள் அங்கே மற்றொரு பெண் டாக்டரை கண்டாள்.

மரியாதைக்காக நின்றிருந்தவளை, புன்னகையுடன் அமரச் சொன்னவர்,

"இவள் தானா அந்த பெண்?" என்று கேள்வியாக பார்த்தவருக்கு, "ஆம்" என்று பார்வையால் பதிலளித்தார் டாக்டர் பாலாஜி,

"என்னம்மா முடிவு எடுத்தாயா?"

"டாக்டர் நீங்கள் சொன்னதை நான் யோசித்தேன்.. நான் வாடகைத் தாயாக சம்மதிக்கிறேன்.. ஆனால், ஒன்று.. எனக்கு அவரை பார்க்க வேண்டும்..அவரிடம் சில கோரிக்கைகள வைக்க வேண்டும்..அதற்கு அவர் சம்மத்தித்தால் நானும் ரெடி.."

"குட்..தாங்க்ஸ் துளசி.. இதற்கு நான் இன்னும் சற்று நேரத்தில் ஏற்பாடு செய்கிறேன்.. நீ காண்டீனுக்கு சென்று ஏதாவது உணவு உட் கொண்டு வா..நம் மீண்டும் பிற் பகலில் சந்திப்போம்"..என்றவரிடம் விடை பெற்று மருத்துவ வளாக காண்டீனை நோக்கி விரைந்தாள் துளசி..''

டாக்டரும் 'பரவாயில்லை புத்திசாலித்தனமாகத் தான் டிசைட் செய்திருக்கிறாள்' என்று எண்ணி தன் மனைவியுடன் அதை பகிர்ந்து கொண்டார்.

மீண்டும் டாக்டர். பாலாஜியின் அறைக்குள் நுழைந்த துளசி, அங்கே இருந்த சோபாவில் அமர்ந்திருந்த இரட்டையர்களை பிரமிப்போடு பார்த்தாள்.. இப்படிக்கூட ஒரு ஒற்றுமை இருக்கக்கூடுமா என எண்ணி வியந்தவாறு, டாக்டர். சுபா, மற்றும் டாக்டர். பாலாஜியை பொதுப்படையாக பார்த்து புன்னகைத்தாள்.

டாக்டர். பாலாஜி உடனே, "வாம்மா துளசி, உட்கார்.. நான் சொன்னேனே அந்த இரட்டை சகோதரர்கள் ராம் கரண் மற்றும் ராம் சரண்" என்றவர், துளசியின் அவர்களை அறிந்த பார்வையைக் கண்டு நிறுத்தினார்.. அதைக் கண்ட துளசி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.