(Reading time: 28 - 56 minutes)

"துளசி, உனக்கு கொஞ்சம் துணி மணி வாங்க வேண்டும்... தப்பாக என்னை நினைகாதே... உன்னிடம் வேண்டியது இருந்தாலும், நீயே நேற்று, பார்திருப்பாய்.. நம் குடும்ப செல்வ நிலையை.. அதற்கு தகுந்தாற்ப் போல் கொஞ்சம் உடைகள் உனக்கு ரிச்சாக வாங்க வேண்டும்.. மேலும், மேட்சிங் அணிகலங்களும் அதற்கு தகுந்ததாக வாங்க வேண்டும்.. என்னதான் இருந்தாலும், இந்த கால பேஷன் படி உனக்கு நகைகள் செய்ய விரும்புகிறேன்."

"நகைகளா?" .. என்று அதிர்ந்த துளசி, 'இவர் என்ன சொல்லுகிறார்.. ஏதோ இன்று இவர் மகன் கொஞ்சம் சிரித்துப் பேசி விட்டதனால், நான் என்ன இவர்களது உண்மையான மருமகளாகி விடுவேனா என்ன? நான் எதற்காக இங்கு வந்திருக்கிறேன் என்பதையே மறந்து விட்டாரா?.. கரணது குழந்தையை பெற்று கொடுத்து விட்டு நானே இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்... ஏதோ படிப்பு என்றால் பரவாயில்லை... நாளை அது எனக்கு வேறு வேலை தேடும் போது உதவும். இவர் என்னடா வென்றால், நான் என்னவோ, இவர் மகனுடனே எப்பவும் இங்கு இருப்பேன் போல், கரணது கப்ம்யூட்டர் கம்பெனிக்கு நான் படிப்பது உதவும் என்கிறார்,... அதுதான் போகட்டும் என்றால், நகை, உடைகள் என்று ஏதேதோ சொல்லுகிறாறே?... இந்த சரண் என்னைப் பற்றி என்ன சொல்லி வைத்திருக்கிறானோ தெரியவில்லையே?'... என்று எண்ணி சரண் முகம் நோக்க,

சரணோ இதெல்லாம் என் டிபார்ட்மெண்ட் இல்லை, யாமரியேன் பராபரமே.. என்று முகத்தை வைத்துக் கொண்டு தன் தாய் சொல்லே வேதம் என, துளசி பக்கம் வேண்டும் என்றே திரும்பாமல் அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னம்மா துளசி, என்ன யோசிக்கிறாய்? நம் தகுதிக்கு ஏற்ப நகைகள் உனக்கு வேண்டும்மா.. அதைக்கூட விடு, முதலில் நீ ஒரு வேளை கம்ப்யூட்டர் கிளாஸ் சென்றாலுமே, கொஞ்சம் பெரிய சைஸ்களில் தளர்த்தியாக உடைகள் வேண்டும்.. இறுக்கி பிடித்து உடைகள் இனி அணிய முடியாது.. ஓரெடியாக ஷாப்பிங் செய்ய வேண்டாம்.. இன்றிலிருந்து இரண்டு, மூன்று நாட்களாக செல்வோம்.. உன் ஆரோக்கியத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா?"

"எதற்கு அத்தை, இருப்பது போதுமே"... என்று இழுத்தவளை,

"இல்லை, துளசி.. உனக்கு கொஞ்சம் ஈசியாக போட்டுக் கொள்ள மெட்டர்னிட்டி கௌனும் வேறு வாங்க வேண்டும்"

"ஐய்யோ, அத்தை அதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை.. நான் கொஞ்சம் பெரிய அளவு சல்வார் கமீஸ் மற்றும் பருத்தி சேலைகள் என வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன்.. இந்த கவுன்கள் போட்டுக் கொள்ள என்னவோ போல் இருக்கும்.. நான் நைட்டி கூட அணிந்ததில்லை.. பாட்டிக்கு இதெல்லாம் பிடிக்காது".

"இதோ பார்.. துளசி.. இனி நீ இந்த சூழ்னிலைக்கு தகுந்தாற்ப் போல் உடைகளும் அணிய வேண்டும் என்று சொன்னேனே.. பாட்டி அந்த கால மனுஷி.. பாட்டி இருந்தால்கூட, உன்னை உன் புகுந்த வீட்டிற்கு ஏற்ப பழகு என்றே சொல்லியிருப்பார்கள்.. எனி வே, துளசி, இந்த மெட்டானிட்டி கவுன் எல்லாம் ஐந்து மாதம் உனக்கு ஆகும் போது போட்டால், உனக்கு கம்ஃப்ர்டெபிளாக இருக்கும்.. உடலை அதிகம் இறுக்கி பிடிக்காமல், அதே சமயம், நல்ல துணியில் உடலுக்குப் போட்டால், சுகமாக இருக்கும்.. இது பேண்ட், ஷர்ட் மாடலிலும் கிடைக்கும்.. ட்ரையல் செய்து பார்.. பின் முடிவு செய்யலாம்.... உன் மாமா அந்த காலத்திலேயே கவுன் மாதிரி எனக்கு வாங்கித் தந்தார்.. தெரியுமா.. அவருக்கு, என்னை விதவிதமான உடைகளில் பார்க்க ரொம்ப பிடிக்கும்.. நான் நல்ல ஸ்டெய்லாக இருக்க வேண்டும் என் எதிபார்ப்பார்.. என் மாமியார் கூட அவருக்கு சப்போர்ட் செய்வார்"...

"மறுக்காதே, துளசி... எனக்கு என்ன பெண் குழந்தைகளா என்ன? வரும் மருமகளுக்குத் தான் போட்டு பார்த்து அழகு பார்க்க வேண்டும் என்றிருந்தேன்.. எனக்குத்தான் வேறு யார் இருக்கிறார்கள்? சொல்லு... என்று தழுதழுத்தவர், "என்னடா சரண் நீ தான் சொல்லேன்"

'தன் உடைகள் இந்த சூழலுக்கு பொருத்தமற்றவை என்று துளசி அறிந்தே இருந்தாலும், தான் தங்கப் போகும் கொஞ்சம் நாட்களுக்கு இவ்வளவு பணம் வேஸ்ட் செய்ய வேண்டுமா? என்று நினைத்தவள், ஆனால் அந்த தாயின் கோரிக்கைக்கு மறுப்பு கூற முடியாமல், எல்லாவற்றையும் பின்னர் தான் இங்கிருந்து போகும் போது விட்டு விட்டு சென்று விடலாம் என் தீர்மாணித்து, சரண் ஒரு வேளை தன்னை தப்பாக நினைப்பானோ', சரண் எதுவும் சொல்லும் முன்,

"அத்தை, நீங்கள் சொல்லுவது சரியே.. எனது உடைகள் இந்த சூழலுக்கு சற்று பொருந்தா விட்டாலும், இன்னும் சிறிது நாட்கள் போனால், எனக்கு அவை பத்தாது.. அதனால் ஷாப்பிங்க் போகலாம்.. ஆனால் ஒன்று, நான் இந்த குழந்தையை கொடுத்து விட்டு போகும் பொழுது இவையனைத்தையும் வைத்து விட்டு செல்வேன்" என்றாள் உறுதியாக.

சட்டென்று எழுந்த சரண், ஒன்றும் பேசாமல் அவளை முறைத்து விட்டு, மாடியேறினான் தனது ரூமிற்க்குச் செல்ல.

சூழ் நிலையின் இறுக்கத்தை உணர்ந்தார் சியாமளா. ...'என்ன தப்பாக சொல்லி விட்டோம்.. உண்மையைதானே சொன்னோம்? ஏன் கோபமாக முறைத்து விட்டு செல்கிறான்'.. கண்ணிர் லேசாக எட்டிப் பார்க்க, கையை பிசைந்து நிற்கும் மருமகள் துளசியை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

"அதை எல்லாம் பிறகு பார்க்கலாம்.. எப்பொழுதும் நீ என் மருமகள் தான்.. நீ இப்பொழுது சந்தோஷமாக இரு, அது போதும்.. போ, குளித்து விட்டு வா.. நேரமாகிறது.. காலை டிபன் சாப்பிட வேண்டும்" என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

கரணின் போட்டோவை பார்த்துக் கொண்டு மாடி படிகளை கடந்த துளசிக்கு ஏனோ, காலையில் இருந்த சந்தோஷம் பறி போனது போல் தோன்றியது.. துக்கம் நெஞ்சை அடைத்தது.

நாட்கள் வேகமாகப் பறந்தன.. துளசிக்கு இப்பொழுது நான்காம் மாதம் தொடங்கி இருந்தது.. வயிறு சற்று வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருந்தது.. முதலில் சற்று, குறு குறுப்போடு பார்த்த வீட்டின் பணியாளர்கள், பின் துளசியின் நல்ல பண்பான குணத்தினால் கவரப்பட்டு, அவளை மாறி மாறி கவனித்துக் கொண்டனர்.. வேளை வேளக்கு சரியான திட்டமிட்ட உணவும், ஜூஸ்களும் அவள் அழகை மேலும் மெருகூட்ட வைத்தது.. பணியாட்கள் கூட அங்கே இங்கே என்று மசக்கைக்கு இது நன்றாக இருக்கும்.. அது வாய்க்கு சற்று உவப்பாக இருக்கும் என் மாங்காய், புளியங்காய் மற்றும் உப்பிலிட்ட நார்த்தங்காய் என எடுத்து கொண்டு வந்து சீராட்டினார்கள்.

துளசிக்கும் எல்லாம் இப்பொழுது பிடித்திருந்தது.. அன்று சரண் சொன்னபடி, கம்ப்யூட்டர் அனிமேஷன் கோர்ஸ் ஆறு மாத காலத்திற்கு சேர்திருந்தாள்.. டாக்டர். சுபா கூட 'இந்த மாற்றம் துளசியின் மன நிலைக்கு ஏற்றதே.. ரொம்பவும் ஸ்ட்ரெயின் செய்யாமல் எது செய்தாலுமே அவளுக்கு நல்லதே' என்று சொல்லி விட்டதால், கம்ப்யூட்டர் கிளாஸ் செல்லலானாள்.

அன்று காலை வழக்கம் போல சரணுடன் கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு கிளம்பி சென்றவளுக்கு, அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

"பை ராம்" என்றவளுக்கு, "துளசி.. ஜாக்கிரதை., கவனமாக மெல்ல நட.. நாம் இருவரும் இன்று மாலை அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்குச் செல்லலாம்.. இன்று எதோ முக்கியமான வெள்ளிக்கிழமையாம்.. அம்மாவும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.. முடிந்தால் நான் மதியமே வீட்டிற்கு வரப் பார்க்கிறேன்.. உனக்கு இன்று இரண்டு மணி வரை கிளாஸ் இருக்கிறது என்றாய்.. நடுவில் அம்மா கொடுத்து அனுப்பிய ஜூஸை மறக்காமல் குடி.. சரி நான் கிளம்பவா.." என்றவனுக்கு, தலையாட்டி விடை பெற்றாள் துளசி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.