(Reading time: 28 - 56 minutes)

ர்ச்சனை தட்டு, பூஜைக்கு உரிய சாமான்களை வாங்கிக் கொண்டவர்கள், துளசி அவற்றை கையில் வைத்துக் கொள்ள, "அக்கா, பூ வாங்கிக் கொள்ளுக்கா.. முழம் பத்து ரூபாய் தான். ஜாதிப் பூ நல்லா இருக்கு" என்று அழைத்த குரலுக்கு சரண் துளசியைப் பார்த்துவிட்டு, "கொடும்மா" என்று பத்து முழம் வாங்கி பாதியை பூஜை சாமான் கூடையில் வைத்து விட்டு, மீதியை சரி பாதியாக கட் செய்து வாங்கியவன், கையில் எடுத்துக் கொண்டு கோவிலின் வாசலில் நின்று கொண்டிருந்த தன் தாயிடம் ஒரு பாதியைக் கொடுத்தவன், துளசிக்கு பூவை நீட்டினான்.. கையில் அர்ச்சனைத் தட்டுடன் நின்றிருந்த துளையைப் பார்த்த சியாமளா, " நீ யே அவள் தலையில் வைத்து விடு', என்றவர் தன் தலையில் பூவை வைத்துக் கொண்டே முன்னால் செல்லும் கணவருடன் இணைந்து கொண்டார்.. திகைத்த சரண், துளசியை பார்க்க, அவள் எதுவுமே நடக்காதது போல் திரும்பி தன் தலையை காட்ட, முதல் முறையாக அவள் தலையில் கைகள் நடுங்க பூவை சூட்டினான்.. மனம் மகிழ்ச்சியில் சிறகடித்து பறந்தது.

பின்னர், மெதுவாக இணைந்து கோவிலுக்குச் சென்றவர்கள், பெருமாளையும், அஷ்ட லஷ்மிகளையும் அர்ச்சனை செய்து சேவித்து விட்டு வெளியே வந்தனர்.. சந்தான லஷ்மியை சேவிக்கும் பொழுது சியாமளா , "துளசி நன்றாக வேண்டிக் கொள்.. தாயார் அனுகிரஹத்தில் பிரசவம் நல்லபடியாக முடிந்து குழந்தையுடன் நீ இருக்க வேண்டும் என்று".... பின்னர் பிரஹாரத்தைச் சுற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்தவர்கள், கோவில் பிரசாதத்தை உண்டு விட்டு, வெளியே வந்தனர்.

துளசி, அந்த கடற்கரையைப் பார்த்துவிட்டு, சியாமளவிடம் "சிறிது நேரம் கடல் அலைகளில் காலை நனைப்போமா" என்று கேட்டாள்.

கிருஷ்ணன், தான் வரவில்லை என்று அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொள்ளுவதாக கூறி விட, சியாமளாவும் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி தானும் வரவில்லை என்று சொல்லிவிட்டு அவர்களை செல்லுமாறு கூறினார்.

கடல் அருகே சென்றனர் துளசியும் சரணும்.. அலைகளில் காலை நனைக்க எண்ணிய துளசி, தண்ணீர் படாமல் இருக்க புடவையை சிறிது உயர்த்தி பிடித்துக் கொண்டு , குனிந்து தண்ணீரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.. முகம் எல்லாம் மகிழ்ச்சி கொப்பளிக்க நின்றிருந்தவளைக் கண்ட சரண், "என்ன துளசி இதற்கு முன் பீச்சுக்கு வந்ததில்லையா..." என்றவனுக்கு, "உ. ம். நான் இதற்கு முன் பீச்சுக்கு வந்த ஞாபகமே இல்லை.. இந்த பீச், அலைகள் இதெயெல்லாம் டி.வி.யில் தான் பார்த்திருக்கிறேன்.. நிஜத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது.. எனக்கு கடல் அலைகளில் ஒடி விளையாட ரொம்ப பிடித்திருக்கிறது.. ஆனால், என் இன்றைய கண்டிஷனை நினைத்து, பேசாமல் நின்று கொண்டிருக்கிறேன்".

சரணோ, 'தன் அழகைப் பற்றி, கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் கடலை ரசித்துக் கொண்டிருந்தவளை அச்சரியத்துடன் நோக்கியவன், "சரி துளசி.. இருட்டத் தொடங்கி விட்டது பார்.. உன்னை இனி அடிக்கடி இங்கே அழைத்து வருகிறேன் என்ன", என்றவன் அவளுடன் திரும்பி தன் பெற்றோரை நோக்கி நடக்கலானன்..

அப்பொழுது எங்கிருந்தோ குழந்தைகளை ஏற்றிச் செல்லும் குதிரை ஒன்று தறி கெட்டு ஒடி வர, பயந்து போன துளசி, எங்கே அது தன்னை இடித்து தள்ளி விடுமோ என்று பயந்து பின் வாங்கியவள், கால் தடுக்கி கீழே விழப் பார்த்தாள்.. சட்டென்று கீழே விழாமல் அவளை தாங்கி பிடித்த சரண், தன் தோள்களில் அவளை சாய்த்துக் கொள்ள, "ஒன்றுமில்லை, துளசி.. பயப்படாதே.. ரிலாக்ஸ்", ஒன்றும் பேசாமல் அவன் மீது சாய்ந்து நின்றிருந்தாள் ... சரணுக்கோ, ஏதேதோ செய்தது.. முதல் முறையாக அவளை அணைத்துப் பிடித்திருந்தவன் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான்.. துளசியின் மன நிலையும் அவனை ஒத்தே இருந்தது.. இப்படி காலம் முழுவதும் நான் இவன் தோள் சாய முடியுமா?.. அதற்கு எனக்கு கொடுப்பினை இருக்குமா.. என்று எண்ணி கொண்டிருந்தவள்..

"டேய் இங்கே பாருடா ஒரு ரொமான்ஸ் சீன் நடக்கிறது" என்ற குரலுக்கு சட்டென்று நிகழ்வுக்கு வந்தவள், தன்னை சுதாரித்து சரணை விலக்கி தள்ளி நின்றாள்.. சரணுமே தங்கள் நிலை புரிந்து சின்ன புன்னகையுடன், "சாரி" என்றவன். "வா துளசி போகலாம்" என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

பெற்றோருடன் சென்று அமர்ந்து கொண்டவர்கள், "என்ன துளசி, ஏன் இப்படி வேர்த்து இருக்கிறது.. உடம்புக்கு ஒன்றுமில்லையே" என்று கேட்ட சியாமளாவுக்கு, சரண், "குதிரையை கண்டு பயந்து விட்டாள் அம்மா", என்றான்.

"ஓ.. சரி... இந்தா... சிறிது தண்ணீர் முதலில் குடி.. இந்தா .. பிறகு இந்த சுண்டலையும், மாங்காயும் சாப்பிடு.. என்று கொடுத்தவர்.. தண்ணீர் குடித்தும், சரியாகாமல் உட்கார்ந்து இருந்தவளைப் பார்த்த சரண், "ரிலாக்ஸ் துளசி.. இந்தா இந்த சுண்டலை சாப்பிடு"

ஒன்றும் பேசாமல் உண்ட துளசியைப் பார்த்தவன், "என்னம்மா.. எல்லோரும் இப்படி சைலைன்டாக இருக்கிறீர்கள். உம். இது சரியில்லை.. சரி நான் ஒரு ஜோக் சொல்லவா... என்றவன்,

"ஒரு எறும்பைக் கட் பண்ணினால் என்னவாகும்.. ஒன்றும் புரியாமல் முழித்தவர்களுக்கு, கட்டெறும்பு ஆகும்" என்றான்... முறைத்தவர்களுக்கு,

"சரி வேறு ஒன்று சொல்கிறேன்.. "டேய்.. சிகரெட் பிடித்தால் கேன்சர் வரும் என்றான் ஒருவன்.. இல்லைடா.. புகை தான் வருது"

சிரிக்காமல் அவனை முறத்தவர்களை, "அப்படி பார்க்காதீர்கள்.. சிரிப்பு வந்தால் சிரிக்க வேண்டும்".. என்றவன் "இதை கேளுங்கள்"..

"ராமர், லஷ்மணன், சீதா மூவரும் பஸ்ஸில் பிராயாணம் செய்து கொண்டிருந்தனர்.. அயோத்தியா குப்பம் ஸ்டாப் வந்தவுடன் ராமரும், லஷ்மணனும், பஸ் படிகளில் காலை வைத்து இறங்கினர்.. சீதையோ, சன்னலில் இருந்து குதித்து இறங்கினாளாம்.. ஏன் ?".... புரியாமல் முழித்தவர்களுக்கு, "சரி நானே சொல்லுகிறேன்.. ஏனென்றால் சீதா படி தாண்டா பத்தினி" என்றவுடன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கலானாள் துளசி.

அவள் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த சரண் "அப்பா,.. மேடம் இப்பொழுதுதான் சரியானார்கள்"... என்றவன் மேலும் சில கடி ஜோக்குகளை சொன்னான்.

சிரித்து சிரித்து களைத்து போன துளசியை பார்த்த சியாமளா, "டேய்.. போதும்.. எங்கே பிடித்தாய் இந்த ஜோக்குகளை" என்றவருக்கு "எல்லாம் இண்டர்னெட் உபயம்"

"நேரமாகி விட்டது.. இருட்டியும் விட்டது.. போகலாம்" என்ற கிருஷ்ணனுக்கு தலையாட்டிவிட்டு காரை நோக்கி சென்றனர்.

சிரித்துக் கொண்டே செல்லும் அந்த் குடும்பத்தை வெறித்து பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தன இரு விழிகள்.

இனி....

Episode # 08

Episode # 10

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.