(Reading time: 30 - 59 minutes)

 “பை ஜோனத்….சேஃப் ஜர்னி….நாளைக்கு என்ட்ட ஒன் டைம்மாவது பேசுங்க…” கெஞ்சலாய் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாள்.

அரண் வழியாய் விஷயம் தெரியவும் இவளிடம் பேசாதே போய்விடுவான் ஜோனத் என புதிய பயம் வருகிறது அவளுக்கு.

தற்குள் ப்ரபாத் சுதாரித்துவிட்டான். நேற்று நடந்த எங்கேஜ்மென்டே அவன் எதிர் பாராத திருப்பம் தான். அவன் நிச்சயமாக இப்படி ஒரு திட்டம் வைத்திருக்கவில்லை. அதன் ஆரம்பம் அவனது அம்மாவின் அதிரடி திட்டம் + பிடிவாதம்.  லியாவிற்கு அவளே அறியாத  ஒரு ஈர்ப்பும், நம்பிக்கையும் இவன் மீது வந்திருக்கிறது என்று அவனுக்கு தெரியும்தான். இருந்தாலும் இது டூ இயர்லி. இவன் அம்மா கேட்டதற்கு அவள் நிச்சயத்திற்கு சம்மதித்து இப்படி ஒரு நிலையை கொண்டு வருவாள் என்றெல்லாம் அவன் கற்பனை செய்திருக்கவில்லை.

ஆக இவனிடம் இவன் அம்மா “நான் அவட்ட நேத்து நைட்டே பேசிட்டேன், அவல்லாம் சரின்னு தான் சொல்றா, நீதான் அவள காரணம் காமிச்சு கத சொல்ற….என் மேல உண்மையிலே நம்பிக்கையும் அக்கறையும் இருந்தா இத நீ செய்வ….நான் அரேஞ்ச்மென்ட ஆரம்பிக்கப் போறேன்….” என்று சொன்னதும் அவளைக் காண கிளம்பி வந்தான் அத்தனை டைட் ஷெட்யூலிலும்.

அவன் மனதில் அவள் மன நிலை பொறுத்து இரு வித திட்டங்கள். அவன் மறுநாள் இரவு இங்லண்ட் கிளம்ப வேண்டி இருந்தது. ஒரு மாதம் அவளை தனியாக  விட்டுச் செல்ல வேண்டும். எதாவது மிரட்டல்கள் அவளுக்கு இருக்கும் என் ஒரு யூகம் இருந்திருந்தாலும், அனவரதன் வல்லராஜனின் மிரட்டல்களை பற்றி முந்திய நாள் அவள் சொல்லித்தான் முழுதாக அவனுக்குத் தெரியும். வல்லராஜனைப் பற்றி ப்ரச்சனை இல்லை.

அவன் வாயை அடைக்க அனவரதன் செய்த மிரட்டலே போதும், இனி வாயைத் திறக்க மாட்டான். ஆனால் அனவரதன் விஷயத்தில் இவன் அவசரப் பட விரும்பவில்லை. ஏதோ ஒரு வகையில் சங்கல்யாவின் அரண் பற்றிய ரிப்போர்ட் நடுநிலைமையாக இருக்கும் என அவர் நம்புகிறார். அதன் வழியாகவாவது அவர் தன் மகளுடன் சேரட்டுமே என்பது இவன் எண்ணம்.

சுகா தன் பெற்றோருக்காய் எத்தனை தவிக்கிறாள் என்பதும், அவள் தந்தையும் மகளுக்காய் எத்தனை ஏங்குகிறார் என்பதும் இவன் அறியாததா? இதில் அரணின் வேதனை அவன் காணாததா? ஆனால் இப்பொழுது தன் தவறை லியா உணர்ந்துவிட்டப் பின்பும் அனவரதன் பற்றிய ஒரு அழுத்தத்தில், ஒருவித பயத்தில் அவளை விட்டுச் செல்லவும் அவன் விரும்பவில்லை. ஆக அனவாரதனிடம் சற்றுப் பேசிப் பார்த்தான்.

“அந்த ரிப்போர்டர் பொண்ணுட்ட பேசுறீங்களா அங்கிள்…அவ அரணப் பத்தி, சுகா பத்தி சொல்லுவாளே….…..நீங்க பயப்படுற மாதிரி எதுவும் இல்லனு உங்களுக்கும் தெரிஞ்சிரும்…சீக்ரம் அவள அங்க இருந்து அனுப்பிரலாம்தானே “ என்று

ஆனால் அவரோ இவன் அறிவு ப்ரெடிக் செய்த படி “ரெண்டு நாள்ல என்ன தெரிஞ்சிரப் போகுது….? ஒரு மாசம் கிட்ட அவ அங்க இருக்கடும்….அவ நம்பர் குடு அவட்ட நான் அப்பப்ப கேட்டுகிறேன்…..அதோட அவ அங்க இருக்றதால எதுவும் ப்ரச்சனை ஆகாதபடிக்கு என்னால முடிஞ்சத நான் செய்திருக்கேன்….அவளே போய் கொடுத்தா கூட அந்த வல்லராஜன் இனி நம்ம பத்தி எதுவும் எழுத யோசிப்பான்…..அதனால அவள பத்தி பயம் இல்லதான்…அவ வேற பத்திரிக்கை காரங்கள பார்த்தாதான் இஷ்யூ ஆகிடும்…அதனால நீயும் அவள கன்ற்றோல்ல வைக்ற மாதிரி வேற எதாவது ஹோல்டு க்ரியேட் பண்ணுபா…”

என்ற ரீதியில் தன் திட்டத்திலிருந்து ஒரு நூலளவு கூட பின் வாங்காமல் பேசினார் அவர்.

இதற்கு மேல் அழுத்திப் பேசினால் இவ்வளவாவது இவனிடம் பேசுகிறவர் பழைய படி முறுக்கிக் கொண்டு போய்விடக் கூடும். அரணுடனும் சுகவிதாவுடனும் அவர் இணைவது கானல் நீராகவும் கூடும். ஆக அனவரதனைக் கண்டு பயப்பட தேவையில்லை, அரணுக்கும் இவள் விஷயம் முழுவதும் தெரியும் என உண்மையை வெளிப்படையாக சொல்லி லியாவை சமாதானமாகவே அரண் வீட்டில் விட்டுச் செல்ல வேண்டும் என இந்த நிச்சயதார்த்த கதை ஆரம்பிக்கும் வரை எண்ணியிருந்தான்.

அதோடு அவளை இனியும் தனியாக ஒரு வீட்டிலோ ஹாஸ்டலிலோ தங்க அனுமதிக்க அவனுக்கு மனம் இல்லை. இந்நிலையில் பொய் சொல்ல மாட்டேன் என இவனிடம் வாக்குறுதி கொடுத்த சில மணி நேரத்தில் அவன் அம்மாவிடம் நிச்சயத்திற்கு அவள் சம்மதம் சொல்லி புதிய கதையை ஆரம்பித்து வைத்திருந்ததால் அவனுக்குள் இப்பொழுது புதிய எண்ணம்.

ஒரு வேளை ஆயிரத்தில் ஒரு பங்காக அவள் முழு மனதாக இந்த நிச்சயத்திற்கு சம்மதித்து இருந்தால் அவளை  உடனே திருமணமே செய்து அழைத்துப் போய்விட ஆசை அவனுக்கு. (ஆனாலும் மிஸ்டர். சங்கு…உங்களுக்கு ஒவராத்தான் போகுது ஆசை…)

அப்படி இல்லையெனில் இவனது காதல் தவிர அனைத்து ரகசியத்தையும் அவளிடம் சொல்லி  முன்பு நினைத்தது போல் அரண் வீட்டில் அவளை நிம்மதியாகவே விட்டுச் செல்ல திட்டம். இதற்காக அன்று காலை அவன் அம்மா அவனிடம் விஷயம் சொன்னதுமே அவளைக் காணத்தான் ஓடி வந்தான்.

வன் வந்த நேரம் அவள் தோட்டத்தில் வாக்கிங் போயிருப்பதாய் கேள்விப் பட்டு அங்கு போனான். அவளோ அங்கு காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணிடம். அந்தப் பெண் என்ன சொன்னாள் என தெரியவில்லை. ஆனால் இவனை ஏதோ குறை பேசி இருக்க வேண்டும்.

சங்கல்யா வாயால் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாள் இவனுக்காக. அவள் இவனுக்காக ஒரு பெண்ணிடம் சண்டை போடுவது என்றால்? இவனுக்குள் தேமா மழை. அவளிடம் மனம் திறந்து பேசிவிட வேண்டியதுதானா? அதற்கான இடம் அவளது அறைதான். எப்படியும் வாக்கிங் முடித்து அங்கு தானே வருவாள். அவள் அறையை நோக்கிச் சென்றான். படுக்கை படு சுத்தமாய்  இருக்க, அதில் உட்கார இன்னும் வேளை வரவில்லை என்ற நினைவுடன், மேஜை அருகில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான். ஏதேச்சையாய் அதன் அருகில் இருந்த குப்பை கூடையில் கிடந்த கசக்கப் பட்ட காகித பந்துகள் கண்ணில் பட்டன.

அவள் மனதை அதில் ஓட்டி விளையாடி இருப்பாளாய் இருக்கும். அப்படி என்னதான் இருக்கின்றதாம் என்னவள் மனதில்? அவள் எதையும் எழுதி எங்கும் அனுப்பிவிடக் கூடாதென வெள்ளைப் பேப்பரோ பேனாவோ அவளுக்கு கிடைக்காதபடி ஏற்பாடு செய்து வைக்கப் பட்டிருப்பதால், அவள் செய்திதாள் துண்டுகளில் லிப்ஸ்டிக் கொண்டு ஏதோ எழுதி வைத்திருந்தாள். பிரித்துப் பார்த்தான்.

சில ஜோனத்களும் ப்ரபாத்களும் அழகாய் எழுதப் பட்டிருக்க, சங்கல்யா. P என எழுதப்பட்டு அந்த P பலமுறை அடித்து நொறுக்கப் பட்டிருந்தது. அப்படியானால்??? இவனை மணந்தால் அவள் சங்கல்யா. P ஆகி விடுவாள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. அதாவது இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை என்றுதானே அர்த்தம்?

ஆனால் இப்பொழுது இப்படி இவனுடனான திருமணத்தைப் பற்றி இவளை தீவிரமாக சிந்திக்க வைத்தது எது? வெறும் நாடகத்திற்காக நடக்கவிருக்கும் நிச்சயம் என்றால் இப்படி தனிமையில் இவள் தன் மனதை ஆராய வேண்டிய தேவை என்ன? அதோடு இவனுக்காக அங்கு சண்டை வேறு போட்டுக் கொண்டிருக்கிறாள். அம்மாவோ அவளுக்கு இவன் மீது இருப்பது உண்மையான அன்பு என்கிறார்.

அப்படியானால் ஏதோ ஒரு பொறி இவன் மீது அவளுக்கு இருக்கிறதுதான். ஆனால் முழுவதாய் இந்த பந்தத்திற்குள் வர விடாமல் ஏதோ அவளை தடுக்கிறது. அதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இவன் இந்த ஆராய்ச்சியில் இருக்க அவன் அம்மாவிடம் இருந்து அவசர அழைப்பு. அவருக்கு நெஞ்சு வலியென. அம்மா ஹார்ட் பேஷண்ட் என்பதால் பறந்துவிட்டான் அம்மாவை நோக்கி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.