(Reading time: 21 - 42 minutes)

ப்பறம் பேசலாம் என்றபடி, "தோ வரேன்னா" என்ற படி காப்பியை எடுத்து கொண்டு விரைந்தாள் ரஞ்சனி.

"ஏம்மா என் ஸ்டார் பர்த்டே கொண்டாடலைன்னா என்ன , குடியா மூழ்கிடும்.. தேவையில்லாமல் வாயை திறந்தே.. எப்படி பிளான் போடரா பாரு?" என்று மஹதி மெதுவாக தாயை கடிந்து கொள்ள,

"இதுதான் நுணலும் தன் வாயால் கெடும் என்பது" என்று சொன்ன வசந்த், "ஹாப்பி பர்த்டேக்கா" என தன் அக்காவின் கையை பாசமாக பிடித்தபடி அவளை வெளியே தோட்டத்துக்கு இழுத்து சென்றவன், அங்கே அன்று மலர்ந்திருந்த அழகிய பெரிய ஆரஞ்சு ரோஜாவை பறித்து அவள் கைகளில் கொடுத்தவன், "ஏதோ இந்த ஏழை தம்பியால் முடிஞ்ச சின்ன பரிசு" என்றவனை,

" தாங்க்ஸ் என்றவள், "போடா .. நீ வாழ்த்தினதே போதும்" என அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

"மாமா எனக்கு ரோஜாப்பூ கிடையாதா?" என அவர்கள் பின்னாலேயே வந்த குட்டி சிந்துஜா கேட்க,

அவளை தூக்கி கொண்டவன், "உனக்கில்லாததா குட்டி.. இந்த தோட்டத்திலே இருக்கிற எல்லாம் உனக்கு தான்.. எது வேண்டுமோ பறிச்சுக்கோ" என்று அவளை செல்லம் கொஞ்சினான் வசந்த்..

பாசக்கார மாமன் தான்.. என்ன செய்வது அவனுடைய நிலை அப்படி.. கூடிய சீக்கிரம் கலெக்டர் ஆகி, இந்த குழந்தைகளுக்கு எல்லாம் வாங்கி தர வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

மஹதி அவனிடம் சொல்லி கொண்டு தன் தாய்க்கு அடுப்படியில் உதவ என்று சென்று விட, வசந்த் சற்று நேரம் சிந்துஜாவிடம் விளையாடிக் கொண்டிருக்க, அங்கே வந்த சியாமும் அவன் மாமாவோட சேர்ந்து கொள்ள அந்த இடமே கலகலப்பானது.

You might also like - Ainthu... A horror genre story to scare you...

தோட்டத்தில் இருந்த சின்ன சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு பேப்பர் படித்து கொண்டிருந்த ராமமூர்த்தியுமே அவர்களை கண்டும் காணாமல் ரசித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வாசலில் ஆட்டோ சத்தம் கேட்க, கேட்டுக்கு வெளியே ஆட்டோவிலிருந்து அவரது இரண்டாவது மகள் கல்யாணி குடும்ப சமேதமாக இறங்கிக் கொண்டிருந்தாள். வாசல் கேட்டை திறந்தபடி முதலில் உள்ளே நுழைந்த கல்யாணி, தன் தந்தை சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருப்பதை பார்த்து,

"அப்பா ஐனூறு ரூபாய்க்கு சேன்ஞ் இருக்கா.. ஆட்டோக்காரருக்கு முன்னூறு ரூபாய் கொடுக்கனும்.. இதோ இருக்கற சென்ட்ரலில் இருந்து மாம்பலம் வர முன்னூறு கேட்கிறான்" என அலுத்துக் கொள்ள,

ஒன்றும் பேசாமல் வசந்த்தை பார்த்த ராமமூர்த்தி, கண்ணை காட்ட, வசந்த் உள்ளே சென்று தன் தந்தையின் பர்சை எடுத்து வர, அவர் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுக்க, "வந்து 500 ரூபாய் கொடுத்துட்டு வாங்கிக்கரேன் பா" என்றபடி வெளியே செல்லும் மகளை பார்த்து கொண்டிருந்தார்.

இது எப்பொழுதும் நடப்பது தான்.. சில்லறை இல்லை என்று ஆட்டோவுக்கு பணம் கொடுக்க வைப்பது.. பிறகு பணத்தை மாற்றி தருகிறேன் என்பது.. பிறகு அப்படியே மறந்தாற் போல நடிப்பது.. அவருக்கு இதெல்லாம் புதுசா என்ன?.. அவரது இரண்டு பெண்களின் நடவடிக்கையும் பார்த்து பார்த்து சலித்து சலித்து விட்டது.. என்ன ஒன்று கல்யாணியின் கணவன் கார்த்திகேயன் மிகவும் நல்லவன்.. சற்று அனுசரனையானவன்.. அது ஒன்றுதான் ஆறுதல்..

கார்த்திகேயன் அவன் பெற்றவர்களுக்கு ஒரே மகன்.. ரயில்வே ஆபிசராக திருவள்ளூரில் பணி புரிகிறான்.. அவர்களுக்கு சொந்தமாக அங்கே தனியாக மாடியும், கீழ் தளமுமாக வீடு இருக்கிறது.. மாடியில் அவர்கள் குடியிருக்க, கீழே வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.. கார்த்திகேயன் தன் பெயருகேற்ப அழகன்.. கல்யாணியை விரும்பி மணந்தவன்..

கல்யாணி எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்து பி.எட்டும் முடித்து சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து கொண்டிருந்தாள். உருவத்தில் தாய் சாரதாவை கொண்டிருந்தவள், அழகாக, மைதா மாவு நிறத்தில் சுருட்டை கூந்தலுடன் உயரமாக, சற்று பூசின உடல் வாகுடன் இருப்பவள்.. உருவத்தில் சாரதாவை கொண்டிருந்தவள், குணத்தில் அவருக்கு நேர் எதிராக இருப்பவள்.. எப்பொழுதும், தான் தன் சுகம் அது ஒன்று தான்.. தன் அக்கா ரஞ்சனியை அப்படியே ஒத்திருந்தாள்..

ரஞ்சனி திருமணம் முடிந்திருந்த நேரம், அவளும் படிப்பை முடித்திருக்க, தன் தாய் சாரதா பாட்டு சொல்லி தரும் ஒரு பெண்ணின் தாயின் தயவுடன் அந்த தனியார் பள்ளிகூடத்தில் தமிழாசிரியையாக சேர்ந்தவள், எடுக்கும் பொழுதே ஐந்து இலக்க சம்பளம் பெற்றாள். என்று சம்பாதிக்க தொடங்கினாளோ, அன்றிலிருந்தே, தனது சம்பாத்தியத்தில் பாதியை தனி அக்கவுன்டாக சேமிக்க தொடங்கினாள்.. பாதி பணத்தை தன் தந்தையிடம் கொடுப்பவள், தனது சேமிப்பு பின் காலத்தில் தன் திருமண செலவுகளுக்கு உதவும் என்று சொல்லி அவர்கள் வாயை மூட வைத்தவள், அடுத்த நான்கே வருடத்தில் எப்படியோ அரசாங்க உத்யோகம் கிடைக்க, திருவள்ளூரில் ஆசிரியையாக அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தாள்.

அவளது இருபத்தி ஏழாவது வயதில் அவளுக்கு கார்த்திகேயன் வீட்டு சம்மந்தம் எதிர்பாராத விதமாக தெரிந்தவர் மூலம் வர, ஒரே மகன், ஒரே இடத்தில் உத்யோகம் என எல்லாம் பொருந்தி இருக்க, அவர்கள் திருமணத்தை முடித்தார் ராமமூர்த்தி. அந்த சமயத்தில் தான் ராமமூர்த்தி ரிடையர் ஆகி இருக்க, வந்த சொற்ப கிராசுவிட்டி, பி.எஃப் எல்லாவற்றையும் வைத்து ஒரு வழியாக அவளை கரை தேற்றினார்.

கணிசமான தொகை கல்யாணியின் வங்கி சேமிப்பில் இருந்தாலும், தனது திருமண வாழ்க்கைக்கு அந்த பணம் பிறகு உதவும் , மூத்தவள், ரஞ்சனிக்கு பெற்றவர்கள் தானே பொறுப்பை எடுத்து கொண்டு அனைத்தும் செய்தார்கள், தான் எதற்கு தனது சேமிப்பை கொடுக்க வேண்டும் என்று வாதிட்டு பணம் கொடுக்க மறுத்து விட்டாள். அவள் குணம் அறிந்த பெற்றவர்களுமே, அவளை அதற்கு மேல் வற்புறுத்தாமல் தங்கள் மொத்த சேமிப்பையும் அவளது திருமணத்திற்காகவே செலவழித்து விட்டனர்.

கார்த்திகேயனைப் பெற்றவர்கள் எதுவுமே கேட்கவில்லை.. உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள், எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஆண்டவன் புண்ணியத்தில் இப்பொழுதுக்கு நன்றாகவே இருக்கிறோம்.. பெண்ணை மட்டும் அனுப்புங்கள் என்று அடக்கமாக கூறி விட, கல்யாணி மட்டும், விடாமல் அக்கா ரஞ்சனிக்கு என்ன செய்தார்களோ, அந்தளவு தனக்கும் சீர், நகை எல்லாம் வேண்டும், இல்லையென்றால் பிற்காலத்தில் ஒரு பேச்சுக்கு இடம் கொடுத்ததாகி விடும் என்று பெற்றவர்களிடம் தர்க்கம் செய்து முடிந்தவரை எல்லாவற்றையும் அள்ளி கொண்டே புக்ககம் சென்றாள்.

கல்யாணிக்கு இரண்டும் பெண் குழந்தைகள்.. பெரியவளுக்கு ஐந்து வயது, சின்னவளுக்கு நான்கு வயது.. கல்யாணிக்கு தனக்கு இரண்டுமே பெண் குழந்தைகள் என்று கழுத்து மட்டும் குறை. பிரசவத்துக்கு கூட கல்யாணியை பிறந்தகம் அனுப்பாமல், ரயில்வே ஆஸ்பத்திரியில் பார்த்து கொள்கிறோம் என்று அவளது மாமியார் கூறி விட, சாரதா பிரசவ சமயத்தில் அங்கே சென்று மகளுக்கு உதவினார்.

அதில் கல்யாணிக்கு குறையே.. தன் பிரசவ செலவை கூட பெற்றவர்கள் ஏற்கவில்லை, என்று சொல்லி சொல்லியே தன் பெண்களுக்கு, அவர்கள் அந்த செலவை ஈடு கட்ட, கூடுதலாக சீர் செய்த பின்னரே கொஞ்சம் அடங்கினாள். கார்த்திகேயன் எவ்வளவு எடுத்து சொன்னாலும், உங்களுக்கு தெரியாது, நமக்கு இரண்டும் பெண்கள் என்று சொல்லி அவன் வாயை அடைத்து விடுவாள்.. பெண்டாட்டிக்கு சற்று பயந்தவன் கார்த்திகேயன். தன் இரண்டாவது மகளை பற்றிய யோசனையில் இருந்த ராமமூர்த்தி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.