(Reading time: 9 - 17 minutes)

 சாஸ்த்ரி கூறிய தகவல் -

"ராக பாவனா , பல அடுக்குகளாக சதுர வடிவில் இருக்கும். மரப்பலகைகள் ஒன்றன்பின் ஒன்றாக இறுக்கமாக சேர்க்க பட்டிருக்கும். அந்த மரப்பலகைகளில் பல இடங்களில் நுண்ணியமாக சதுர வடிவிலான செதுக்கல்கள் இருக்கும். இந்த சிறிய செதுக்கல்களை காற்று அல்லது தண்ணீர் தொடர்பு கொல்லும்பொழுது அதிலிருந்து ஒரு வித அதிர்வலைகள் உண்டாகும். அந்த அதிர்வளைகளுக்கு நோய்களை குணபடுத்தும் ஆற்றல் உண்டு. ஆனால் நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாது ராக பாவனா பல அதிசயங்களை செய்யும் ஆற்றல் மிக்கது என்று என்னாள் உறுதியாக சொல்ல முடியும்"

"ராக பாவனாவை கொண்டு வேறு என்ன செய்ய முடியும்?" - மித்ரா

"அறிவியலால் இன்னும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை." - சாஸ்த்ரி

"தயங்காமல் தயவுசெய்து சொல்லுங்கள்." - மித்ரா.

"இல்லை. இதற்க்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது " - சாஸ்த்ரி

சாஸ்த்ரியுடனான சந்திப்பு முடிவுற்றது.

You might also like - Nanaikindrathu nathiyin karai... A fast paced romantic thriller story 

"டுத்து எங்கு செல்ல போகிறோம்" - அஷ்வின்

"மதுரை" - மித்ரா

"யாரை சந்திக்க போகிறோம்" - அஷ்வின்

"எதுவும் பேசாமல் என்னுடன் வா" - மித்ரா ஒருவித அதட்டலுடன் மிக கோபத்துடன் கூறினாள்.

இருவரும் மதுரை வந்தடைந்தனர்.

மதுரையிலிருந்து ஒரு மாட்டு வண்டி மூலம் மள்ளப்புரம் எனும் கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

"எங்கே தான் போறோம்?." - எரிச்சலுடன் கேட்டான் அஷ்வின்

"தெரியாது" - மித்ரா

"என்ன சொல்ற? தெரியாதா??" - அஷ்வின்

"ஆமா. திக்கு தெரியாமல் தான் சென்று கொண்டிருக்கிறேன். என் உள்ளுணர்வு செலுத்தும் பாதையில் செல்கிறேன். ஏன் இங்கு வந்தோம். அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று எனக்கு தெரியாது" - மித்ரா

மித்ரா ஏன் இப்படி விரக்தியில் பேசுகிறாள் என்று அஷ்வின் யோசித்து கொண்டிருந்த வேலையில் , ஒரு மூதாட்டி அங்கு இருப்பதை கண்டான் அஷ்வின்.

"பாட்டி. இரவு வந்துவிட்டது. நாங்கள் இங்கு தங்குவதற்கு ஏதாவது இடம் இருக்கிறதா?" - அஷ்வின்

"வேந்தர் பிள்ளை வீட்டுக்கு போங்க" - பாட்டி

"எப்படி போகனம்?" - அஷ்வின்

"நேரா போங்க. இடது பக்கம் முதல் வீடு" - என்றார்

இருவரும் அங்கு சென்றனர். வேந்தர் பிள்ளை இருவரையும் வரவேற்றார். உணவு உண்டபின் மூவரும் பேச தொடங்கினர்.

"நாங்க பத்திரிகையாளர்கள். இந்த இடத்தின் வரலாறு பற்றி அறிய இங்கு வந்தோம்" என பொய் கூறினான் அஷ்வின்.

"இந்த இடத்தின் வரலாறு மிக பழமையானது." - என்று ஆரம்பித்த வேந்தர் பிள்ளை அதன் வரலாறை கூற ஆரம்பித்தார். கேட்பதற்கு பொறுமையில்லாமல் பாதி தூக்கத்தில் அஷ்வினும் மித்ராவும் கேட்டனர்.

நடு இரவு 1 மணி வேலையில் திடிரென்று விழித்தாள் மித்ரா. அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அவளும் அஷ்வினும் அரை தூக்கத்தில் இருந்த சமயத்தில் வேந்தர் பிள்ளை கூறிய சில வார்த்தைகள் அவள் நினைவிற்கு வந்தது. அந்த வார்த்தைகள் -  "மாசா" , "இசையின் வாயிலாக தொடர்பு கொள்ளல்". மித்ரா அஷ்வினை எழுப்பினாள். இருவரும் வேந்தர் பிள்ளையை எழுப்பினார்கள்.

"அய்யா. நீங்கள் 'இசை','மாசா' என்று கூறியது மட்டுமே என் ஞாபகத்தில் உள்ளது. நீங்கள் கூறியதை மீண்டும் சொல்லுங்கள். " என்றாள் மித்ரா.

"நான் எனக்கு தெரிந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றி கூறினேன்." - வேந்தர் பிள்ளை

"ஆம் அய்யா. ஏதோ மாசா என்பது போல் நீங்கள் கூறியது என் நினைவில் உள்ளது. அது என்ன" - மித்ரா

"இன்றைய சமுதாயம் மருதநாயகம் பற்றிய வரலாறை மட்டுமே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது.மருதநாயகத்தின் மனைவி மாசாவை பற்றி அறிய தவறிவிட்டது." - வேந்தர் பிள்ளை

"மாசா பற்றி உங்களுக்கு என்ன தகவல்கள் தெரியும் அய்யா?" - மித்ரா

"மாசா சங்கீதத்தில் ஆழ்ந்த ஞானம் படைத்தவள். ஒரு விதத்தில் அவள் ஒரு சூன்யகாரி என்றும் சொல்லலாம். போர் காலங்களில் , சில முறைகளை கொண்டு சூன்யத்தை பயன்படுத்தி இசை மூலம் கருத்துக்களை பரிமாறிகொல்லும் யுக்தியினை அவள் செய்து வந்தாள்." - வேந்தர் பிள்ளை.

இதனை கேட்டதும் மித்ராவின் முகம் பொலிவானது.

மித்ரா அஷ்வினிடம் இவ்வாறு கூறினாள்

"பைரவியிடம் கோவிந்தம்மாள் கற்றுகொடுத்த சங்கீத ராகத்தில் ஏதோ ஒரு தகவல் இருக்கிறது. அந்த இசையில் புதைந்துள்ள தகவலை கோவிந்தம்மாள் ஏன் முடக்கத்தானுக்கு அனுப்பினார்?. கோவிந்தம்மாள் , மாசா இவர்களுக்குள் என்ன தொடர்பு."

"பைரவி கூறிய தகவலில் நீ மூழ்கி விட்டதால் , இதற்கும் , வேந்தர் பிள்ளை கூறிய கதைக்கும் தொடர்பு இருக்கிறது என்று நீ நினைகின்றாய். என்னை பொறுத்த வரைக்கும் இப்பொழுது நாம் எதனையும் உறுதியாக சொல்ல முடியாது." - அஷ்வின்

வேந்தர் பிள்ளையிடம்

"அய்யா. மருதநாயகம் பற்றிய முழு வரலாறை சுருக்கமாக எங்களுக்கு கூறுங்கள்" என்றாள் மித்ரா.

தொடரும்

Episode # 02

Next episode will be published as soon as the writer shares his next episode.

{kunena_discuss:888}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.