(Reading time: 16 - 32 minutes)

ஹதி காப்பியை கலந்து கொடுக்க, அதை அருந்தியபடியே ரஞ்சனி அமைதியை கலைக்க, "அம்மா.. என்னம்மா, நம்மாத்துக்கு இல்லாத வழக்கமா புதுசா குண்டை தூக்கி போடறா?"..

'இவ இங்கே வரும் போதெல்லாம் போடாத குண்டா!!  .. நினைத்ததை சொல்ல முடியமா!!'

"என்னம்மா சொல்லற?"  எதுவும் தெரியாதவர் போல பேசிய சாரதவை கோபத்துடன் முறைத்தாள் ரஞ்சனி..

"என்னம்மா..  என்னமோ புரியாத மாதிரி பேசறே?.. வரவர இந்தாத்துல எனக்கு பெரிய பெண் என்று கொஞ்சம் கூட மரியாதையே இல்லை!!  உங்க மனசுல என்னதான் நினைச்சிண்டு இருக்கேள்!! மூத்த மாப்பிள்ளை வந்திருக்கார்.. தட்டை மாத்திரதுக்கு முன்னாலே அவரை ஒரு வார்த்தை கேட்கனும்னு உங்க இரண்டு பேருக்கும் ஏன்மா தோணலை?? பின்ன என்னதுக்கு நாங்க இங்க வரணும்,  இதுக்கு நீங்க எங்களை கூப்பிடனம்னு அவசியமே இல்லையே?? இப்படி எங்களை கூப்பிட்டு அவமான படுத்தணும்னு தீர்மாணிச்சிட்டிங்களோ?"  என பொரிய தொடங்க,

"ரஞ்சனி, கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டியா?..  எதையாவது அசட்டுத்தனமா பேசாதே.. இப்ப யார் உங்க ஆத்துக்காரரை அவமானப்படுத்தினாளாம்.. இங்கே அவரை மாதிரி இரண்டாவது மாப்பிளையும் தான் வந்திருக்கிறார்.. இப்ப என்ன நடந்து போச்சு??.. பெத்தவா நாங்க இரண்டு பெரும் தானே இந்த விஷயத்தை தீர்மாணிக்கனும்"  என ராமமூர்த்தி கடிந்து கொள்ள,

"என்னப்பா, நீங்க பேசறதை பார்த்தா நாங்களெல்லாம் மூணாம் மனுஷா மாதிரி இருக்கு..  அப்ப எங்களுக்கு எதுவுமே இல்லையா? .. என் தங்கச்சி கல்யாணத்தை வெளி மனுஷா போல பார்த்துண்டு நிற்க சொல்லறீங்களா??"

"இங்கே பாரு ரஞ்சனி.. நீ தேவையில்லாமல் பேசாதே.. நானே டென்ஷனா இருக்கேன்.. சம்பந்தி ஆத்தவா கேட்கற டிமான்ட்ஸ் எல்லாம் எப்படி செய்ய போறேன்னு மலைப்பா இருக்கு"

அது வரை சும்மா இருந்த கல்யாணி, "ஏம்ப்பா, ரஞ்சனி கேக்கறதுல என்ன தப்பு.. ஏதோ ஆற்றாமையில சொல்லறா.. அது சரி அப்படி என்ன உசத்தி இந்த சம்பந்தம்.. எதுக்கு ஒத்துக்கனும்.. அப்புறம் இப்படி டென்ஷனில் மலைப்பா நிற்கனும்" 

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

"இதை தானேடி நானும் கேட்டேன்.. அவா கேட்கற சீர் செய்ய அப்பா கொள்ளையடிக்கதான் வேண்டும்!!..  நான் போன வாட்டி வந்தப்பவே லேசு பாசா சென்னேன்.. என் மச்சினர் கூட கல்யாணுத்துக்கு இருக்கார்ன்னு..  எங்க ஆத்து பெரியவா ஊரிலிருந்து வந்தவுடன் முறைப்படி இந்த வாரம் வந்து மஹதியை பொண்ணு கேட்கலாம்ன்னு நினைச்சோம்.. அதுக்குள்ள நேற்று ராத்திரி அம்மா போன் பண்ணரா, மஹதியை இன்னிக்கு பொண்ணு பார்க்க வரான்னு"  என்ற ரஞ்சனிக்கு,

'அய்யோ, இந்த பொண்ணுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்ததா?.. என்ன ஒரு சுயனலம்??.. இவ மச்சினன் ப்ளஸ் டூ தான் படிச்சிருக்கான்.. டிகிரி கூட இல்லை.. படிப்பு சுத்தமா ஏறலை.. எதோ ஷூ கம்பனிலே சுப்பர்வைசர்ன்னு சொல்லிண்டு திரியறான்.. போன வாட்டி வந்தப்பவே சொன்னாலே, இருக்கற அந்த வேலையும் விட்டுட்டு, அவன் அண்ணனோட சேர்ந்து புதுசா செருப்பு கடை வைக்க போறதா.. படிப்பு இல்லைன்னாலும், பார்க்கரதுக்கும், சகிக்க மாட்டானே??.. அவனை போய் மஹதிக்கு ஜோடி??.. கிளி மாதிரி என் பொண்ணை வளர்த்து குரங்கு மாதிரி இவனுக்கு பிடிச்சி கொடுக்கணுமா?'  என்று நினைத்த சாரதா,

"ஏன்டி, ரஞ்சீ  இது உனக்கே நன்னா இருக்கா?.. மஹதி நன்னா படிச்சிருக்கா.. பார்கறதுக்கும் கண்ணுக்கு லட்சணமா இருக்கா?".. எப்படி உன்னாலே இப்படி யோசிக்க முடியறது?"  என்று சாரதா ஒரு இயலாமையுடன் கேட்க,

"ஏன், மாமி என் தம்பிக்கு என்ன குறைச்சல்ன்னு இப்படி பேசறீங்க?..  கொஞ்சம் படிப்பு குறைச்சல் தான்.. ஆம்பளைக்கு அழகு என்ன வேண்டி கிடக்கு.. அவன் ஆம்பளையாய் இருந்தா போதாதா என்ன??..  விஷமமாகக் கேட்ட சிவகுமார், 

"பார்க்கத் தானே போறோம்.. எப்படி நீங்க அவா கேட்டது எல்லாம் செய்ய போறீங்கோன்னு?".. என் பெண்டாட்டி சொல்லறதுல என்ன தப்பு.. மஹதியை என் தம்பிக்கு வரன் பார்த்தால், அக்காவும், தங்கையும் ஒரே இடத்தில ஒத்துமையா இருக்க போறா.. அதோடு நாங்க ஒன்னும் அவா மாதிரி அப்படி டிமாண்ட்ஸ் எல்லாம் வைக்கலை.. அந்த டாக்டர் மாப்பிள்ளைக்கு குடுக்கற சீர்ல பாதி கூட வேண்டாம்.. எதோ பிசினஸ்க்கு ஒரு பத்து லட்சம் கொடுத்தா போதும்.. சிம்பிளா கோவில்ல கல்யாணம் பண்ணிட்டா, அந்த காசும் எங்களுக்கு பிசினசுக்கு உதவும்.. என்ன சொல்லறங்கோ"  என சிவகுமார் கேட்க,

அதிர்ந்தனர் அனைவரும்.. மஹதிக்கு கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.. "அம்மா,  யாரும் கஷ்ட பட வேண்டாம்.. எனக்கு கல்யாணமே வேண்டாம்"

"அத்திம்பேர் என்ன இது .. நீங்க பேசரது கொஞ்சம் கூட நன்னா இல்லை?.. மஹதி அக்காவுக்கு, உங்க கரி மேட்டு கருவாயன் தம்பியா?.. இதுக்கு அவளை பாழும் கிணத்துல தள்ளி விடலாம்.. நாங்களும் போனா போறதுன்னு பார்த்தா, நீங்களும் அக்காவும் பேசிண்டே போறேள்.."  என வசந்த் எகிற,

"வசந்த், நீ கொஞ்சம் சும்மா இருப்பா.. பெரியவர், மாமா பேசட்டும்"  என கார்த்திகேயன் அவனை சமாதனப்படுத்த,

"ஏன்னடா, நண்டு பையா.. ரொம்ப தான் துள்ளரே? .. நான் பார்த்து வளர்ந்தவன் நீ.. என்னையே எதிர்த்து பேசறீயா?.. உன் மனசுல என்ன நினைச்சிண்டு இருக்கே.. நீயே ஒரு வெட்டி பயல்.. உங்க அக்காவோட தயவுல இருக்கே.. மாடு மாதிரி இத்தனை வயசுக்கு வளர்ந்திருக்கே?.. ஆம்பளையா லட்சணமா சம்பாதிக்க துப்பில்லை.. என் தம்பி கருப்பு தான்.. நீ பெரிய சிவப்பு ஆணழகன் தான் ஒத்துக்கறேன்.. ஆணழகன் துப்பட்டியான்.. ஆளு நன்னா இருந்து என்ன பிரயோஜனம்.. பைசாக்கு  லாயக்கில்லை.. பெரிசா பேச வந்துட்டான்.. இதே நானா இருந்தா, மூட்டை தூக்கியாவது என் குடும்பத்தை காப்பாத்துவேன்.. கலெக்டருக்கு படிக்கிரானாம் கலெக்ட்டருக்கு??"

"ஏன் உன் அக்கா பெரிய கிளியோபாட்ராவோ?.. அவளுக்கெல்லாம் என் தம்பியே பெரிசு?"  என கத்த தொடங்க,

சிவகுமார் கத்த தொடங்கினால், வாயில் என்ன என்ன வார்த்தைகள் வரும் என்று தெரிந்த ராமமூர்த்தி,

"இங்கே பாருங்கோ பெரிய மாப்பிள்ளை, எதற்கு வீணான பேச்சு..  என் பொண்ணுக்கு என்ன செய்யனும்னு பெத்தவன் எனக்கு தெரியும்.. எல்லோரும் பேசாமல் கொஞ்சம் போறீங்களா.. நான் யார் கையையும் எதிர்பார்த்து நிற்கலை.. எனக்கு எப்படி இந்த கல்யாணத்தை நடத்தனும்னு தெரியும்.. தயவு செய்து அந்த பொண்ணு மனசு வருத்தபடறா மாதிரி யாரும் பேச வேண்டாம்.. எப்படி என் மூத்த பொண்ணுகளுக்கு அவாவா விருப்ப பட்ட வரனுக்கு திருமணத்தை முடிச்சேனோ, அதை மாதிரி, இந்த வீட்டை விற்றாவது என் சின்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுவேன்.. யாரும் இதுல தலையிட வேண்டாம்"

தொடரும்

Episode 12

Episode 14

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.