(Reading time: 35 - 69 minutes)

20. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

ன்டர்காமில் உணவை ஆர்டர் செய்துவிட்டு படுக்கையில் பக்கத்தில் பிடித்து வைத்திருந்த மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த ஜோனத் “ப்ரவிய கவனிச்சுறுக்கியா  இப்ப எப்படி இருக்கான் அவன் ….ஆனா அவனுக்கும் சின்ன வயசில கன்னா பின்னானு கோபம் வரும், கை நீளும்… 9த் படிக்றப்ப அவன் ஸ்கூல்ல 11த்  படிக்ற பையன் எதோ தப்பு செய்தான்னு அடிச்சு பக்கத்துல உள்ள ட்ரெய்னேஜ்ல தள்ளிட்டான்….அந்த பாய் மயக்கம் தெளிஞ்சு எழும்புற வரை என் சித்தி சித்தப்பால்லாம் செத்து பிழச்சுட்டாங்க……இப்ப அப்படியே மிஸ்டர் கூல்தான்…செம சேஞ்ச்…”  அவன் குரலில் தொனியில் சிறு மாற்றம்.

“ அப்படின்னு இல்லை ஜோனத்…இப்பவும் எக்‌ஸ்ட்ரீமா கோபம் வருது அவங்களுக்கு….ஒருத்தங்க கோபத்தைப் பார்த்து என் கோபமே சின்னதுன்னு தோணுதுன்னா அது அவங்களோடதுதான்…….ஆனா அவங்கட்ட அதை கல்ப்ரிட்ட மட்டும் காமிக்ற பேலன்ஸ் இருக்குது….…அவங்க ஃப்ரொபஷன்ல அது தப்பு இல்லையே…..”

“ம்…அதுதான் விஷயம்…அவன் ஐ பி எஸ் எழுதினதே அதுக்காகத்தான்….” ஜோனத்தின் தொனியில் இருந்த மாற்றத்தை இப்பொழுதுதான் கவனிக்கிறாள் இவள்.

Nanaikindrathu nathiyin karai“என்ன சொல்ல வர்றீங்கப்பா….?”

இப்பொழுது இவளை ஆழமாய்ப் பார்த்தான் ஜோனத்.

“ஹயாகுட்டி கைல இருக்றப்ப, கூட இருந்த அந்த கிரிமினல்ஸ்ட்ட கூட நீ உன் கோபத்தை காமிக்கலியே…உனக்கும் எங்க எப்ப கோபத்தை காமிக்கனும்னு கன்ட்ரோல்லாம் இப்ப இருக்குது தான் …”

அவன் சொல்வதன் உண்மை இவளுக்கும் புரிகிறதுதான்…

“நானும் ஐ பி எஸ் பண்ணணும்னு சொல்றீங்களாபா? இதுக்குமேல, படிக்க எக்‌ஸாம் எழுதெல்லாம் எனக்கு பிடிக்கலை ஜோனத்…”..சொல்லியபடி அவன் தோளுக்குள் சுருண்டாள். “உங்க கூடவே இருக்கனும்….எங்கயும் போகமாட்டேன்….” கணவனிடம் கெஞ்சலாய் சிணுங்கலாய் அதே நேரம் பிடிவாதமாய் சொன்னாலும் மனதிற்குள் இதைப் பத்தி ப்ரவிர் பேசிய விஷயம் ஊர்கிறது.

“பொறாமை, சுயநலம், சோம்பேறித்தனம், எரிச்சல் ஈகோ இதுல வர்ற கோபம்தான் தப்பு…இதை மாத்தியாகனும்...ட்ரைப் பண்ணா மாத்தவும் முடியும்….பட் நியாயமான கோபம்….நமக்கோ அடுத்தவங்களுக்கோ நடக்ற தப்பைப் பார்த்துட்டு வர்ற கோபம்...அது இன்டிக்நேஷன்…அதை ஹேண்டில் தான் பண்ண முடியுமே தவிர மாத்த முடியாது……அதை நாம எக்ஸ்‌ப்ரெஸ் செய்துதான் ஆகனும்….பட் இன் எ ச்சூசன் வே….அது பெர்சன் டூ பெர்சன் மாறும்….

என்னைவிட நீதியானவர் கடவுள்…..எனக்கே கோபம் வருதுன்னா அவர் நிச்சயமா ப்ராப்பரா பதில் செய்வார்னு தோணும்…அதனால எங்க எந்த தப்பு நடந்தாலும் ப்ரேயர்ல அதை ஒப்புகொடுத்துட்டாலே ஒரு வகையில பீஸ்க்கு வந்துடுவேன்….நெக்‌ஸ்ட் என்னோட ஸ்பேஸ்ல அதாவது க்ரிகெட்ல…பிஸினஸ்ல…நான் மூவ் பண்ற சர்கிள்ள….அந்த இன்டிக்நேஷனை கன்ஸ்ட்ரக்டிவா எக்ஸ்‌ப்ரெஸ் செய்வேன்… அது அவர்னஸ் கிரியேட் செய்றதா இருக்கலாம்… என் எல்லைக்குள்ள என்னாலான ப்ரிவென்டிவ் மெஷர்ஸ் எடுக்றதா இருக்கலாம்….விக்டிம்ஸுக்கு ஹெல்ப் பண்றதா இருக்கலாம்னு அண்ணா சொல்லுவாங்க……இந்த இன்டிக்னேஷன் மேனேஜ்மென்ட் பெரும்பாலான பேர்க்கு ஒத்து போகும்….

ஆனா எல்லோருக்கும் இது சரியா இருக்கும்னு சொல்ல முடியாது….நடக்ற தப்பை தண்டிக்க எல்லோரும் இறங்க கூடாது…..பட் சிலர் அதுக்காக அழைக்கப் பட்டிருக்காங்க….லைக் பொலீஸ்…டிஃபென்ஸ் சர்வீஸஸ்….அண்ட் அலைக்….கவர்மென்ட்டால லீகலி  அதாரிடி கொடுக்கப்பட்டவங்க டு பர்ஜ் த ஈவில். அவங்க கோபம் கூட லீகலி சரியானதா ஆகிடும்…. உண்மையிலேயே எனக்கு அப்படி கால் இருந்தா எனக்கு இந்த போஸ்ட் கிடைக்கட்டும்னு சொல்லிட்டுத்தான் நான் ஐ பி எஸ் ட்ரைப் பண்ணதே….” ப்ரவிர் சொன்ன கருத்து இவளுக்கு ஒத்துக் கொள்வதாய் தோன்றினாலும்

“ப்ரவிர்ட்ட பேசினப்பவே நானும் யோசிச்சேன்….ஆனாலும் எனக்கு வேண்டாம்…” என்றாள் தன்னவனிடம் மறுபடியும்.

“ஹேய் அவன் தன் callநு ஐ பி எஸ் எழுதுனா நீயும் அதையே செய்யனுமா…? ப்ரவிர் அடிக்கடி சொல்வான்…அண்ணி பார்ன் ஜர்னலிஸ்ட்னு… பாதிக்கப்பட்டவங்களுக்கு மீடியா மூலமா நியாயம் வாங்கித்தர எதாவது செய்……உன் 30 கையை அதுல காமி…சேனல் ஸ்டார்ட் செய்யனுமா..இல்லை நியூஸ் பேப்பரா…இல்லை என்னதுன்னு நீயே டிசைட் பண்ணு…லிசன் டு God....லிசன் டு யுவர் இன்னர் ஸ்பிரிட்……நல்லா வரும்……சும்மா காசிப்காக தேடி அலயப் போய்தான் உன் ஃப்ரொஃபஷன் உனக்கு பிடிக்காம போய்ட்டே தவிர இது நிச்சயம் உனக்கு பிடிக்கும்…உன் கோபமும் ப்ராபரா ச்சஅனலைஸ்ட் ஆகிடும்…” அவன் சொல்ல சொல்ல……அவன் தோளில் புதைந்திருந்தவள்… தன் சந்தோஷத்தை வெளிப் படுத்திய விதத்தில்….

“ஸ்ஸ்ஸ்…ஏன்டி எல்லாத்திலும் நான் -வயலன்ஸ்தானா…? ஹயா குட்டிடயா ட்யூஷன் போற” என்ற படி அவன்…..

You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story 

ங்கு தன் அறையில் தன் கையில் தூங்கிக் கொண்டிருந்த மகளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அரண்.

“ஜீவா அவள பெட்ல படுக்க வைங்கப்பா…எவ்ளவு நேரம் கைல வச்சுறுப்பீங்க நீங்க….அவளுக்கும் உடம்பு வலிக்கும்….” சொல்லியபடி அருகில் வந்து அமர்ந்த சுகாவின் கடைசி வரியில் கன்வின்சாகி பக்கத்திலுருந்த பேபி பெட்டில் ஹயாவை படுக்க வைத்தான் அவன்.

“என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் என்னப்பா?” சொல்லியபடி அவனது தோளில் மனைவி சாய அவள் சொல்லாமலே புரிகிறது அவளுக்கு ஞாபகத்தில் வராமல் இருந்த விஷயங்களும் ஞாபகத்தில் வந்துவிட்டது என.

அவளை தோளோடு அணைத்தவன் “ பாஸ்ட்ல  உன் சம்பந்தபட்ட எல்லாமே எனக்கு ஸ்வீட் மெமொரிஸ்தான்னும் உனக்கு ஞாபகம் வந்திருக்கனும்” என்றபடி அவளது பக்கவாட்டு நெற்றியில் இதழ் பதித்தான்.

“அதுக்கில்ல ஜீவா இப்ப கூட என்னை எமோஷனலா ஏமாத்திரலாம்ன்ற தைரியத்துலதான் அந்த தானா உள்ள வந்திருக்கா…” சுகாவின் குரலில் சோர்வு இருந்தது.

“அப்படி ஒரு  முட்டாளா அவள் இருந்தா அதுக்கு நீ ஏன் விதுமா வருத்தப்படுற…? வீட்ல அவளை நம்பி வேலைக்கு வச்சது நாங்க…ப்ரவிர் கூட அவள சந்தேகப்படலை….பெர்பெக்ட் நடிப்பு அவளோடது…..ஆனாலும் அவள கல்ப்ரிட்னு கண்டு பிடிச்சது நீதான்…”

தன்னவன் தோளில் சாய்ந்திருந்தவள் விழி உயர்த்தி மலர்ந்த முகத்துடன் அவன் பார்வையை ஒரு நொடி சந்தித்துவிட்டு மீண்டுமாய் கண் மூடிக் கொண்டாள்.

“நம்ம காதலோட பலம் அவளுக்கு புரியலைடா…அதை அவ பலவீனம்னு நினச்சுட்டா….காதல்ங்கிற பேர்ல ஈசியா ஏமாத்தலாம்னு….உலகமே மறந்துட்ட போதும் நம்ம காதல் மட்டும் அப்படியே இருந்துச்சு உன் மனசுல….அதுதான் நம்ம லைஃபை மீட்டும் கொடுத்துது…..முன்னால எல்லாத்துக்கும் எவ்ளவு பயப்படுவ…பால்குட்டி இன்சிடென்ட்ல எனக்கே பக்கத்துல ப்ரபு இருந்ததாலதான் ஏதோ ஹேண்டில் செய்ய முடிஞ்சுது….பட் நீ எவ்ளவு நேரம் தனியா சமாளிச்சுறுக்க….அன்புங்கிறது எப்பவுமே பலம் தான்….”

அடுத்து செமிஃபைனல்ஸ் முடிந்திருந்தது. ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்றிருந்தனர் மென் இன் ப்ளூ.

ரவு ஸ்பெஷல் டின்னர். அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் ஒரு சிறு ஹாலை புக் செய்திருந்தனர். அன்று அனவரதன் புஷ்பம் வெட்டிங் அனிவர்சரி. ஆக அரண் ப்ரபாத் குடும்பத்திற்கு மட்டுமேயான விருந்து. ப்ரவிரும் வந்து சேர்ந்திருந்தான்.

 பெரியவர்கள் அனைவரும் ஒரு டேபிளை எடுத்துக் கொண்டு  இளையவர்கள் அனைவரையும் அடுத்த டேபிள்ளுக்கு அனுப்பினர். “எங்களுக்கு சாப்பாடுல ரெஸ்ட்ரிக்க்ஷன் இருக்கும்…நீங்க என்ஜாய் பண்ணுங்க “ என்றபடி.

கிட்நாப் டைமில் உதவிய சாங்கல்யாவின் ஜர்னலிசம் க்ளாஸ்மேட் & ஃப்ரெண்ட் சரநிதாவையும் டின்னருக்கு அழைத்திருந்தனர் அன்று. ஆக இயல்பாய் தம்பதிகள் தங்கள் தங்கள் துணையுடன் அமர்ந்த விதத்தில்  ப்ரவிருக்கு அடுத்த இடத்தில் சரநிதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.