(Reading time: 35 - 69 minutes)

ச்சில் விழுங்கிய படி சென்று அமர்ந்தாள். வீட்டில் யாருமில்லை எனப் புரிகிறது இவளுக்கு.

“அந்த தடிமாடெல்லாத்தையும் அனுப்பிட்டேன்….ட்ராமா முடிஞ்சுட்டே”

இவள் மனதிற்குள் கேட்ட கேள்விக்கு வார்த்தை மாறாமல் பதில் சொன்னான்.

“இப்ப இத குடி” அவன் கொடுத்ததை கை நீட்டி வாங்கிக் கொண்டாள்.

“குடின்னு சொன்னேன்….”

“அது….ப்ரவிர்….நான் கிளம்பனும்….”

“ஹேய் என் நேம் சொல்லி கூப்டாத…”

புரியாமல் பார்த்தாள்.

“ஒழுங்கா அத்தான்னு  கூப்டு….” சொல்லியபடி கேஷுவலாய் இவளுக்கு அடுத்து நூலளவு இடைவெளியில் அமர்ந்தான்.

You might also like - Rojavai thalattum thendral... A breezy romantic story 

“ஹான்…”நெத்தி சுருக்கி திருட்டுப் பூனை முழி முழித்தாள் இவள். அவள் இதயம் கன்னா பின்னா வேகத்தில் தாறுமாறாய் துடிக்கும் சத்தம் அவன் காதில் கேட்குமோ?

தன்னை சமனப் படுத்த அவசர அவசரமாக அவன் தந்ததைக் குடித்தாள்.

“சரி இப்ப சொல்லு….”

“எ..என்ன சொல்ல?”

“நீ வந்த உண்மையான காரணத்தை….”

“நிஜத்தை தான் சொல்றேன்…”

“உன் பிஸ்டலை எடு” அவன் கேட்டான்.

“பிஸ்டலா..அதெல்லாம் உங்க டிபார்ட்மென்ட்…நான் வச்சுகிறது இல்லை”

“சோ ஒரு பிஸ்டல் உள்ள பொலீஸ்மேனை காப்பாத்த வெறும் கையோட 9 ஃப்ளோர் ஏறி ஓடி வந்துறுக்க…”

“………………………..”

“வேற யாருக்காவது இப்படி ஒரு சிச்சுவேஷன்னா என்ன செய்துறுப்ப? கைல உள்ள மொபைலை வச்சு பொலீஸைதான கூப்டுறுப்ப? எனக்குன்னா ஏன் இப்படி ஓடி வந்த?”

அவன் சொன்னதின் உண்மை இவளுக்கு இப்பொழுதுதான் உறைக்க… ஜிவ் என அவளுக்குள் ஒரு அலை….ஆனாலும்…

“நான் கிளம்புறேன்”

அவசர அவசரமாக வாசலை நோக்கி ஓட்டமும் நடையுமாய் இவள் போக..அதே நொடி வாசலில் வந்து நின்றான் ஒருவன்…

“சாரிடா மாப்ள….நிஜமாவே அந்த தமன் 50 லாக்‌ஸ் தாரேன்னான்ட்டா….உனக்கே தெரியும் என் நிலமைக்கு அது ரொம்ப பெரிய அமவ்ண்ட் ” இவனைப் பார்த்து கையிலிருந்த பிஸ்டலை நீட்டினான்….

“ஐயோ அவங்களை விட்டுடு……” என அலறிய படி , சென்றதை விட நூறு மடங்கு வேகமாய் திரும்பி பின்னால் வந்து கொண்டிருந்த ப்ரவிரை கட்டி அணைத்தாள் சரநி.

”கொல்றதுன்னா முதல்ல என்னைக் கொல்லு…” உடல் உயிரெல்லாம் நடுங்குகிறது இவளுக்கு….

“சரநிமா..ப்ளீஸ்டா….ஒன்னுமில்ல…அவன் சும்மா….” அணைத்திருந்தவளை மெல்லென அணைத்து, நனைந்த கோழிக் குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்தவளை  ஆறுதல் படுத்த ப்ரவிர் சொல்வது இவள் காதில் விழுந்து புரிய தொடங்குகிறது.

‘ஆக இதுவும் ட்ராமாவா…? இவளோட வலி அவனுக்கு விளையாட்டா இருக்காமா?’ ஒரு நொடியில் எத்தனையாய் துடித்துப் போக வைத்துவிட்டான்.  பிடித்திருந்தவனிடமிருந்து சட்டென விலகி, விட்டாள் ஒன்று அவன் கன்னத்தில்.

“எல்லாம் உங்களுக்கு விளையாட்டா இருக்கு என்ன? பணக்காரங்கதான என் வலி விளையாட்டா தான் இருக்கும்”

அதிராமல் அசையாமல் அமைதியாய் அவளைப் பார்த்தான் அறை வாங்கியவன்.

“ஐயோ சிஸ்…சாரி…இது நானா தான்…சாரி… முடிவு சொல்லாம கிளம்பி போறீங்களேன்னு  இப்படி…..வெரி சாரி…அவன் எதுவும் இப்படி செய்ய சொல்லலை….” வாசலில் பிஸ்டலுடன் நின்றவன் தான் பதறி பதறி விளக்கினான். அடுத்த நிமிஷம் அவன் ஜூட்டும் கூட

இப்பொழுது பரிதாபமாய் ப்ரவிரை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“சா சாரி…”

இன்னும் அதே அசைவற்ற அமைதிப் பார்வை அவனிடம்.

“வெல்….இதை நீ முன்னமே சொல்லியிருந்தன்னா இப்படி ஒரு தப்பு நடந்திருக்கவே நடந்திருக்காது…..” தொனியை மாற்றி அவனைப் போலவே சொல்லிக் காண்பித்தாள் இப்பொழுது. அவனை சமாதானப் படுத்தியாக வேண்டுமே…. ‘சிரிச்சுடுடா கல்குதிர…ப்ளீஸ்’ மனதிற்குள் மன்றாடினாள்…

அவன் இன்னமும் அதே பாவத்துடன்.

“நான் சாரில்லாம் கொண்டு வரலை…..பட் இது உனக்கு பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்… …” அப்படியே நேற்று அவன் சொன்னதை இமிடேட் செய்தவள்,

அவளை விட உயரமாய் எதிரில் நின்றிருந்தவன் சட்டைக் காலரைப் பிடித்து தன்னோக்கி தன் உயரத்திற்காய் இழுத்து … அவன் கன்னத்தை நோக்கி தன் இதழ்களை சரநி கொண்டு செல்ல….

இறுக்கம் போல் நின்றிருந்த அவன் முகம் அவனையும் மீறி மலர்வதும்…..அதன் அத்தனை திசுக்களிலும் ஆசை அலையாய் பரவுவதும்….சற்றும் எதிர்பார்க்காத இச்செயலால் அவன் முழுக் கண்களிலும் மகிழ்ச்சியும், ஆண்மையின் அத்தனை ஆளுகையையும் மீறி ஒரு அழகு வெட்கம் தோன்றுவதும் ….அவள் கண்ணில் பட…அரை மில்லி மீட்டர் இடைவெளி இருக்கும் போது  சட்டென விலகி

 “அஸ்கு புஸ்கு…ஆசை தோசை….நெக்‌ஸ்ட் வீக் வந்து அம்மாட்ட பொண்ணு கேளுங்க…..அடுத்த நாளே வெட்டிங்னாலும் எனக்கு ஓகே….அதுக்கப்புறமா உங்களை கவனிச்சுகிறேன்… ” ஓடியே போய்விட்டாள் அவள்.

“ஹேய்….டெய்ரி மில்க் நில்லு….உன்ட்ட கொஞ்சம் பேசனும்…”

“நான் போய்ட்டேன் ” வெளியிலிருந்து அவள் சத்தம்….

“வளராத வாலு….எதுக்காவது ரீசன் கேட்டுதான்னு பாரேன்…” அவளை மனதில் சிலாகித்துக் கொண்டான் அவன்.

தியம் மேட்ச் தொடங்கியது.

பிட்ச் முதலில் பேட்டிங்கிற்கு ஃபேவராக இருந்து பின் சற்று பவ்லிங் பிட்சாக மாறும் அதோடு டே அண்ட் நைட் மேட்ச் என்பதால் செகண்ட் இன்னிங்ஸ் ஃப்லட்லைட்ஸில் ச்சேஸ் செய்ய வேண்டி இருக்கும். ஆக டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு என்ற தகவல் அத்தனை பேர் மத்தியிலும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

இந்த ஒரு நம்பிக்கை சூழலில் டாஸ் வென்று முதலில் சவ்த் ஆஃப்ரிக்கா பேட்டிங்.

ஏதோ ஒரு ரெஸ்ட்லெஸ்நெஸ் அத்தனை மென் இன் ப்ளூ ரசிகர்களிடமும்.

சவ்த் ஆஃப்ரிக்கா 359 ரன்ஸ். அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியது.

அரண் அண்ட் ப்ரபாத்  களமிறங்கினர்.

என்னதான் பிட்ச் ஃப்ளட்லைட்ஸ் என இருந்தாலும் இன்டியன்ஸ் ஆர் பெட்டர் ச்சேஸர்ஸ் என நிரூபித்துக் கொண்டிருந்தது அவர்கள் கூட்டணி.

இப்பொழுது ஃஸ்ட்ரைக்கிங் என்டில் அரண். பால் அவனை நோக்கி எழும்ப, அஃபன்ஸிவாக இவன் ஒரு காலடி ஆஃப்சைடில் விலகி, ஆர்ம் லென்த்தில் பந்தை பேட்டால் பலமாய் எதிர்கொண்டான்…பெர்ஃபெக்ட் எலிவேஷனில் சூப்பர் சிகஸராய் முடிவடைந்தது அது. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அரங்கமே அதிர எழுந்து நின்று குதித்துக் கொண்டிருந்தவர்களில் சரநிதாவும் ஒரு நபர்.

அடுத்த பால்….க்ரீஸை விட்டு அரண்  ஒரு அடி முன்வந்து, பேட்டின் மத்தியில் பாலை எதிர்கொண்டு, ஓங்கி அடித்ததில்…. அந்த பிங்க் நிற பால் கதறிக் கொண்டு போய் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ப்ளாக்கின் ரூஃபில் விழுந்தது….. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.