(Reading time: 14 - 28 minutes)

"சுஜாதா தாங்க பேசினா..."

"ஓ.... காலையிலேயே ஃப்ரண்டோட ஃபோன் பேசின சந்தோஷத்தில் தான் எங்களுக்கு டிஃபன் செஞ்சு கொடுக்கனும்னு கூட தோனலயா..."

"நீங்க வேற... என்ன ஆச்சுன்னு தெரியாம... ஜோக் அடிச்சிகிட்டு இருக்கீங்க.... சுஜா இந்தியா வராலாம்..."

"ஹே... நிஜமாவா...??? எவ்வளவு சந்தோஷமான விஷயம் இதுக்கா மூகத்தை தூக்கி வச்சிகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்க..."

"......."

"எப்போ வராலாம்... அவ மட்டுமா... இல்ல எல்லோரும் வராங்களா... நம்ம வீட்ல தான் தங்கப் போறாங்களா..??"

You might also like - Unakkaga mannil vanthen - A romantic comedy blended with fantasy... 

"அவங்க மூனுப் பேரும் தான் வராங்காளாம்... மதுரையில அவ நாத்தனார் பொண்ணுக்கு கல்யாணமாம்... அதுக்காகத்தான் வராங்களாம்.. 2 மாசம் லீவ் எடுத்திருக்காங்களாம்... சென்னை வீட்ல தான் இருக்கப் போறாங்க..."

"ரொம்ப சந்தோஷம் மதி... எல்லோரையும் பார்த்து எவ்வளவு வருஷமாச்சு.."

"ஆனா என்னால சந்தோஷப் பட முடியலங்க..." என்று சொல்லி சுஜாதா பேசிய விஷயங்களை செந்திலிடம் கூறினாள் வளர்மதி.

"ஓ.... அதான் காரணமா...?? இப்படி நீ உம்முன்னு இருக்கறதுக்கு..."

"என்னங்க.... பிருத்வியோட காதலைப் பத்தி சுஜாதாக்கிட்ட எப்படிங்க சொல்றது..."

"என்ன மதி... இத சொல்லாம இருக்க முடியுமா..?? இது நாம சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல... பிருத்வியும் யுக்தாவும் சம்பந்தப்பட்ட விஷயம்... பிருத்வி வேற ஒரு பெண்ணை காதலிக்கும் போது இந்த கல்யாணத்தை எப்படி நடத்த முடியும்.... சுஜாதாக்கிட்ட சொல்லித்தான் ஆகனும்..."

"எப்படிங்க சொல்றது... சுஜாதா எப்படி எடுத்துப்பாளோ...??? எனக்கு பயமா இருக்குங்க..."

"பயப்படாதே மதி... சுஜாதா நம்மல தப்பா நினைக்க மாட்டா... முதலில் அவ வரட்டும்... அந்த கல்யாணம் முடிஞ்சதும் தானே இதப் பத்தி பேசுவாங்க... அப்ப நாம பக்குவமா சுஜாதாக்கிட்ட பேசிக்காலாம்..."

"......."

"இங்கப் பாரு கொஞ்ச நேரத்துல பிருத்வி ஆஃபிஸ் கிளம்பிடுவான்... போ போய் டிஃபன் பண்ணு.."

"ம்... சரிங்க..."

நியூயார்க்...

ஏனோ இன்னும் தூக்கம் வராமல் படுத்துக்  கொண்டிருந்தாள் யுக்தா, எத்தனையோ இரவுகள் அவளுக்கு தூங்கா இரவுகளாக இருந்திருக்கிறது.... அம்மா அப்பா அருகில் இருந்தாலும் கவியின் அருகாமையை அவள் மனம் அதிகம் நாடியிருக்கிறது, ஏனோ தினம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் இரவு அவளுடன் இருக்க வேண்டும் என்று தோன்றும்..

ஆனால் இப்போது மனம் முழுவதும் சந்தோஷம், கவியை பார்க்கப் போகிறாள்... இன்னும் ஒரு வாரம் கழித்து அவளுடனே இருக்கப் போகிறாள்... ஆனால் இன்றும் ஏன் தூக்கம் வரவில்லை,

அதற்கும் அவளுக்கு காரணம் தெரியும்... அவள் கவியை மட்டும் பார்க்கப் போவதில்லை... அவனையும் தான் பார்க்கப் போகிறாள்... 12 வருடங்களுக்கு பிறகு அவனை பார்க்க போவதை நினைக்கும் போது தூக்கம் கூட வர மறுக்கிறது.

அவள் கவியை எவ்வளவு மிஸ் பண்றாளோ... அதேப் போல் அவனையும் ரொம்ப மிஸ் பண்றா... கவியோடு சேர்ந்து உறங்க அவள் எவ்வளவு ஏங்குகிறாளோ அதேப் போல் அவனுடன் வெகுநேரம் பேசிவிட்டு உறங்கிய நாட்களையும் அவள் எதிர்பார்த்திருக்கிறாள். கவி அருகில் இல்லாததை தினம் அவளோடு கொஞ்ச நேரம் பேசியாவது தீர்த்துக் கொள்வாள்... ஆனால் இவன் ஞாபகம் வரும் போது அதை கூட அவளால் செய்ய முடியாது... அந்த நேரங்களில்...

இதோ அந்த கரடி பொம்மையை எடுத்துக் கொண்டாள்... இதுக்கூட அவன் கொடுத்தது தான்...

இருவருக்காகவும் ஏங்கி தனிமையில் தவித்த அந்த தூங்கா இரவுகளில் அந்த தனிமையை போக்கியது இந்த பொம்மை தான்...

இது பொம்மையில்லை... இது அவன் தான்... அவனுடைய பெயரை வைத்து தான் இதை அழைப்பாள்... அவனே அதைதானே சொல்லியிருக்கிறான்...

நானோ கவியோ உன் கூட இல்லைன்னு நீ நினைக்கும் போது இந்த பொம்மை தான் நான்... இதுக்கிட்டத் தான் நீ எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கனும்னு சொல்லி அவன் இதை இவளிடம் கொடுத்த அன்றிலிருந்து இந்த பொம்மையிடம் தானே இவள் பேசிக் கொண்டிருக்கிறாள்.

இல்லையில்லை அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.... அவளின் பிருத்வியிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.