(Reading time: 14 - 28 minutes)

"னக்கு புரியுதுங்க... சுஜாவும் புரிஞ்சிக்கிட்டா நல்லா இருக்கும்"

"கவலைப்படாத மதி... சுஜாதாவும் புரிஞ்சிப்பா.."

ஆனால் யுக்தாவின் மனதில் பிருத்வியின் நினைவுகள் நீங்காமல் இருக்கிறது என்பது இவர்களுக்கு தெரிய வருமா..??

You might also like - Katrinile varum geetham... A family oriented romantic story 

ப்னா பிருத்விக்காக ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தாள், அவன் இன்னும் வரவில்லை, நேற்று இரவே ஃபோன் பண்ணி காலையில 10 மணிக்கு பார்க்கனும் பிருத்வின்னு அவனிடம் சொல்லியிருந்தாள்.... ஆனால் அவன் இன்னும் வரவில்லை...

அங்கங்கே காதலிக்காக காதலன் தான் வெய்ட் பண்ணிட்டிருப்பான் ஆனா இங்க எல்லாம் தலைகீழ்... அவனுக்காக இவ வெய்ட் பண்றா.... இது இன்றைக்கு மட்டுமல்ல அடிக்கடி நடக்குது... ஒரு நாள் சப்னா, பிருத்வி லேட்டா வந்ததுக்கு கோபித்துக் கொண்டாள்...

ஆனா பிருத்வி சப்னாக்கிட்ட சாரியெல்லாம் கேக்கல... எனக்கு உன்ன லவ் பண்றத தவிர வேற வேலையில்லயா..?? இப்படியெல்லாம் நீ செஞ்சா நாம இதோட லவ் பண்றத நிறுத்திக்கலாம்னு சொல்லி விட்டான்,

அதுக்கப்புறம் சப்னா அந்த தப்பை செய்யறதே இல்ல... அவனை லவ் பண்ண வைக்கவே அவ ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருந்தது... உடனே ப்ரேக் அப் ன்னா.... அதனால அவன்கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா நடந்துப்பா...

ஆனா இப்படிப்பட்ட ஒருத்தனை ஏன் லவ் பண்றோம்னு சப்னாக்கு அடிக்கடி தோன்றும்... அவன் இவளை விட வசதியானவன் கிடையாது... இவன் நடத்துற இந்த ஒரு கம்பெனியை போல் நாலஞ்சு வச்சு நடத்தறாரு இவளோட அப்பா... அழகா இருக்கான் ஆனா ரொமான்டிக்கானவன் இல்லை.... ஆனாலும் இவனை காதலிக்கனும் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு உந்துதல் இவளுக்கு...

இப்பல்லாம் சப்னாவுக்கு ஒரு புது பயம் இவங்க காதல் கல்யாணத்துல முடியுமான்னு... ஏனோ இதுக்கு அவளுக்கு காரணம் தெரியல... ஆனா பயமா இருக்கு... இவளும் பிருத்விக்கிட்ட சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டு தான் இருக்கா... ஆனா அவன் தான் இப்ப என்ன அவசரம்னு சொல்லிட்டு இருக்கான்.

இதுல இவ அம்மா வேற படிப்பு முடிஞ்சிடுச்சே ஊருக்கு வா என்று கூப்பிட்டுகிட்டு இருக்காங்க... இவன் கூட இருக்கும் போதே இவன் இப்படி இருக்கான்... இதுல ஊருக்கு எப்படி போகறது...

ஆனா இன்னிக்கு ஊருக்கு போக முடிவுப் பண்ணிட்டா. இப்போ படிப்பு முடிஞ்சாச்சு... ஒரு மாசம் தங்கியிருந்து பிருத்வியப் பத்தி சொல்லி அப்பா, அம்மாவ இங்க கூட்டிட்டு வந்து பிருத்வி அப்பா அம்மாக்கிட்ட பேச சொல்லனும்... அப்போ பிருத்வியும் ஒத்துக்கிட்டு தானே ஆகனும்...

சப்னா பிருத்விக்காக காத்து கொண்டிருக்கும் போது இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது பிருத்வி அங்கு வந்தான்..

"ஹாய் சப்னா... வெய்ட் பண்ண வச்சுட்டனா... சாரி எழுந்ததே லேட்... வரும் போது பிரணதிய வேற அவ ப்ரண்ட் வீட்ல ட்ராப் பண்ணிட்டு வரேன்.. அதான் லேட்.."

"இட்ஸ் ஓகே பிருத்வி... நா இப்போ தான் வந்தேன்..."

"எதுக்கு காலையிலேயே என்ன வரச் சொல்லியிருக்க... சப்னா"

"பிருத்வி... நான் இன்னைக்கு மும்பை போறேன்... அம்மா ஃபோன் பண்ணி என்னை வரச் சொல்றாங்க... 1மன்த் அங்கத் தான் இருக்கப் போறேன்..."

"அப்படியா சரி போய்ட்டு வா சப்னா..."

"என்ன பிருத்வி... இப்படி கூலா போய்ட்டு வான்னு சொல்றீங்க... என்ன நீங்க மிஸ் பண்ண மாட்டிங்களா..."

"இதுல மிஸ் பண்ண என்ன இருக்கு... இப்போ இருக்கறது இண்டர்நெட் உலகம்... உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் காண்டாக்ட்ல இருக்க முடியும்... தெரியுமா..??"

"எனக்கு புரியுது பிருத்வி... ஆனா உங்களுக்கு தெரியாது பிருத்வி... இப்பல்லாம் என் மனசுக்குள்ள ஒரு பயம் நம்ம காதல் கல்யாணத்துல முடியுமான்னு... இதுல உங்களை விட்டு நான் எப்படி தூரமா போவேன்..."

"இதுல என்ன பயம்... எங்க அப்பா, அம்மாவோட சம்மத்தத்தோட தான் நான் உன்னை லவ் பண்றேன்... உங்க வீட்லயும் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கன்னு நீ சொல்ற... அப்புறம் என்ன..??"

"......"

"இங்கப் பாரு சப்னா... எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு என் வாழ்க்கையில் ஒருத்திக்கு தான் இடம்... அவள மட்டும் தான் காதலிக்கனும்... கல்யாணம் செஞ்சுக்கனும்... ஆயுள் முழுக்க அவக் கூட வாழனும் இப்படி தான் நான் வாழனும்னு நினைச்சிட்டு இருக்கேன்..."

"........"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.