(Reading time: 14 - 28 minutes)

தோ அவனுடன் பேச ஆரம்பித்துவிட்டாள்...

"பிருத்வி.... நான் இந்தியா வரப் போறேன்... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா...?? நான் உன்னை பார்க்கப் போறேன்...

நான் இந்தியா வரப் போறேன்னு உனக்கு தெரியுமா பிருத்வி... தெரிஞ்சிருக்கும்... நான் கிச்சனக்கு தண்ணி குடிக்கப் போனப்போ அம்மா வளர்மதி அத்தைக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்தேன்...

அத்தைக்கிட்ட அம்மா சொல்லியிருப்பாங்க... நாங்க அங்க வரப்போறத... அத்தை உன்கிட்ட சொல்லியிருப்பாங்க...

நா வரப்போவதை நீ எதிர்பார்ப்பியா பிருத்வி..?? என்னப் போல நீயும் என்னை நினைச்சிட்டு இருப்பியா பிருத்வி..??

எனக்கு தெரியும்.. என்னைப் போல நீயும் என்னை மறக்க மாட்ட... என்னோட ஞாபகம் உனக்கு இருக்கும்..

உன்னை பார்க்க போற நாளுக்காகத் தான் நான் காத்திருக்கேன் பிருத்வி... "

அவள் லேப்டாப்பில் இருந்த அந்த போட்டோவை எடுத்தாள், அது பிருத்வியின் குடும்ப போட்டோ, மதி அத்தை ஒரு நாள் சுஜாதாவுக்கு மெயில் அனுப்பியது, அதை இவள் லேப்டாப்பில் காபி பண்ணிக் கொண்டாள், 12வருடங்களாக கரடி பொம்மையை பிருத்வியாக நினைத்து பேசிக் கொண்டிருந்தவளுக்கு பிருத்வியின் இப்போதைய அடையாளத்தை அறிந்து கொள்ள ஒரே வழி இந்த போட்டோ மட்டும் தான்...

அதை கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்துவிட்டு அவனிடம் அவள் வருகையை தெரியப்படுத்திய நிம்மதியில் உறங்கி விட்டாள் சம்யுக்தா.

You might also like - Manam koithaai Manohari... A family oriented romantic story!

சென்னை...

காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்த காரணத்தால் அவசர அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்பி கீழே இறங்கி வந்தான் பிருத்வி, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் செந்தில் அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் வளர்மதி.

"குட் மார்னிங் அம்மா.. குட்மார்னிங் அப்பா.. என்னப்பா நான் தான் இன்னிக்கு லேட்டா சாப்பிட வந்திருக்கன்னு பார்த்தா நீங்க லேட்டா சாப்பிடறீங்க"

"அதுவா இன்னிக்கு உங்கம்மா ஹேப்பி மூட்ல நமக்கெல்லாம் டிஃபன் செய்ய மறந்துட்டா..."

"அம்மா முகத்தை பார்த்தா ஹேப்பியா இருக்க மாதிரி தெரியலயே... கவலையா இருக்க மாதிரி தெரியுது.."

"அப்படியெல்லாம் எதுவும் இல்ல பிருத்வி... நா எப்பவும் போலத் தான் இருக்கேன்... உங்கப்பா என்ன கிண்டல் பண்றாரு..."

"பிருத்வி காலையில சுஜாதா ஃபோன் பண்ணா... அவக்கூட பேசிட்டு வச்சதக்கப்புறம் அப்படியே உட்கார்ந்து கிட்டு இருந்தா உங்க அம்மா... கேட்டா சுஜாதா இந்தியா வரப் போறாளாம்... அப்போ உங்கம்மா சந்தோஷத்துல தானே இருக்கா..."

"குட் மார்னிங் கைஸ்... என்ன எல்லாரும் 10 மணிக்கு சாப்பிடறீங்க... அம்மா எனக்கும் இட்லி வைங்க..."

"ஏ பிரணா... நீ என்ன கம்ப்யூட்டர் கிளாஸ் போகலயா..??"

"இல்லண்ணா... இன்னிக்கு ஈவ்னிங் தான் போகனும்... ஆமாம் நான் வரும்போது எதோ பேசிகிட்டு இருந்தீங்களே... அம்மா உங்க பிரண்ட் வராங்களா... நியூயார்க்ல இருக்காங்களே சுஜாதா அத்தை அவங்கத் தானே..."

"ஆமாம் பிரணதி... சுஜாதா வரா.. அவமட்டுமில்ல அவ புருஷன், அவப் பொண்ணு யுக்தாவும் வரா....

பிரணதி உனக்கு ஞாபகம் இருக்கா... சுஜாதாவும் யுக்தாவும் இங்க இருந்தப்ப நீ சுஜாதா கூடவே இருப்ப..."

"இல்லம்மா... எனக்கு அதெல்லாம் ஞாபகம் இல்ல... நீங்க சொன்னாத்தான் எனக்கு அவங்களப் பத்தி தெரியுது...

அண்ணா உனக்கு ஞாபகம் இருக்கா அவங்க இங்க இருந்தப்போ நடந்ததெல்லாம்..."

"இல்ல பிரணா... எனக்கும் ஏதோ லைட்டா தான் ஞாபகம் இருக்கு.."

"என்னண்ணா... நா அப்போ சின்னப் பொண்ணு.. ஆனா உனக்கு என்னோட நாலு வயசு ஜாஸ்தியில்ல.. உனக்கு கூடவா ஞாபகம் இல்ல.."

"என்னப் பிரணா.. அதுக்கப்புறம் எவ்வளவு வருஷம் போயிடுச்சு.. எவ்வளவு விஷயங்கள் மாறியிருக்கு... நடந்திருக்கு... எல்லாமே ஞாபகம் வச்சுக்க முடியுமா...

ஓகேப்பா எனக்கு டைம் ஆச்சு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு அதை முடிச்சிட்டு நா அப்படியே ஆஃபிஸ் போறேன்... எல்லாருக்கும் பை..."

"அம்மா நானும் ப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டு வரேன்.. அண்ணா நானும் உன் கூட வரேன்.... போற வழியில என்ன ட்ராப் பண்ணிடு"

இருவரும் சென்ற பின் "பார்த்தியா மதி.. இவங்களுக்கு அப்போ நடந்தது கூட ஞாபகம் இல்ல... யுக்தாவும் அப்படித்தான் இருப்பா..

இவங்க கல்யாணத்தை பத்தி பேசினா அது புதுசா பேசற மாதிரி ஆயிடும்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.