(Reading time: 17 - 34 minutes)

" டேய் இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிக்கல உனக்கு இருக்கு " என்று தம்பியை மிரட்டி, அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு சுபாஷை அறைக்குள் அனுப்பினான் ..

சுபாஷ் உள்ளே வரும் நேரம் "அம்மா " என்று அலற தொடங்கி இருந்தாள் சைந்தவி ..

" சைந்து என்னமா ?" என்று அவன் பதற, வலியில் சத்யாவின் கையை அழுத்தி பிடித்து " அம்மா " என்று அலறினாள் அவள் .. அவளது பிடியில் விழிகள் அசைய லேசாய் முகம் சுளித்தாள் சாஹித்யா .. ஒரு பக்கம் சாஹித்யாவின் அசைவு இன்னொரு பக்கம் சைந்தவிக்கும் பிரசவ வலி வந்துவிட , டாக்டர் என்று கூவிக்கொண்டே ஓடி வந்தான் சுபாஷ் .. அவன் குரலில் மொத்த குடும்பமும் அறைக்குள் நுழைந்தது ..

சுபாஷ் சைந்தவியை அழைத்து செல்ல முயல , " அவ கண்ணு திறக்கட்டும் .. நான் பார்க்கணும் " என்று பற்களை கடித்து கொண்டே பேசினாள் சைந்தவி ..

" வேணாம் சைந்தவி பிடிவாதம் பிடிக்காத" என்று அனைவரும் வலியுறுத்த , அவர்களை அதிகம் சிரமம் செய்யாமல் விழிகளை திறந்தாள் சாஹித்யா .. அவள் கண்களில் முதலில் பட்டது அவளது தந்தை அர்ஜுன்தான் .. அவரை தொடர்ந்து சந்தோஷை பார்த்தாள் .. மீண்டும் விழிகளை மூடி கொண்டவளுக்கு தனது என்ன நடந்தது என்று நினைவு வந்தது .. சத்தமே எழாத குரலில்

" சாரி " என்றாள் சந்தோஷை பார்த்து .. அவனோ கண்ணீர் மல்க விழி மட்டும் அசைத்தான் .. " ஆஅ" என்று சைந்தவி அலறவும் சாஹித்யா வலதுபுறம் திரும்ப

" அக்கா " என்றாள்

" சத்யா " என்று சைந்தவி பேச முயலவும்

" உங்க பாச பிணைப்பை அப்பறமா வெச்சுகோங்க .. அடியே என் பேச்சை கேளு " என்ற சுபாஷ் தாதியரின் உதவியோடு சைந்தவியை தூக்கி கொண்டு சென்றான் .. அனைவரையும் பார்த்தாள் சத்யா .. ' சந்தோசம், ஆனந்த கண்ணீர் , நிம்மதி ' இத்தனை உணர்வுகளுக்கு மத்தியில் உயிரே இல்லாமல் ஏக்கத்துடன் நின்றாள் வானதி .. அவளது பார்வை போன திசையை பார்த்த சாஹித்யா அதிர்ந்தே விட்டாள் ..

" அருள் .. " என்றாள் விழி அகல .. வலுவிழந்த அவள் குரல் கூட சற்று வேகமாய் தான் ஒலித்தது ..

" அருள் .. அருளுக்கு என்ன ... டேய் அருள் .... " என்று தன்னால் முயன்றவரை குரல் கொடுக்க , மெல்ல கண்விழித்தான் அருள் .. சாஹித்யா கண்விழித்தபோது ஆச்சர்யபட்டவர்கள் கூட அருளை சாரு விநோதமாய் தான் பார்த்தனர் ..ஏதோ தூக்கத்தில் இருந்து வெளிப்பட்டவன் போல கண் விழித்தான் அவன் .. அப்போதுதான் அவன் கன்னத்தில் இருந்த கண்ணீர் கோடுகளை கவனித்தான் சித்தார்த் ..

" லூசு என்னடி இப்படி மிரட்டிட்ட? " என்றான் ..

" அருள் நீ .. நீ " என்று பேச முடியாமல் வானதி குரல் கொடுக்க அவளை அருகில் வருபடி கண் அசைத்தான் அவன் .. அவனுக்கு மிக அருகில் அவள் நெருங்க அவள் கணத்தில் முத்தமிட்டு , காலைல நீ வந்து பேசும்போதே கண் விழிச்சிருப்பேன் .. ஆனா சத்யாவும் கண் விழிக்கலன்னு நீ சொன்னதும் நடுங்கிட்டேன் .. அதுக்கு பிறகு அம்மா அப்பா ஒவ்வொருத்தர் பேசுறதும் எனக்கு கேட்டுச்சு .. சத்யா இப்படி இருக்கான்னு எனக்கு உணரவே முடியல .. அவ இல்லாத இடத்துல நான் எப்படி இருக்க முடியும் நதி ? அவ விழிச்சிருவான்னு வேண்டிக்கிட்டே படுத்து கிடந்தேன் " என்றான் அருள்மொழிவர்மன் ..

" ராஸ்கல், எது எதுல நடிக்கனும்னு அளவில்லையா " என்ற அவன் முகத்தில் லேசாய் சந்தோஷ் அறைய

" சந்தூ , அதெல்லாம் நீங்க அடிக்க வேணாம் .. எல்லாத்தையும் நானும் வானதியும் பார்த்துக்குறோம் " என்றாள் சத்யா .. அனைவரின் முகத்திலும் அப்போதுதான் புன்னகையே வந்தது ..

" நோ நோ .. ரெண்டு குரங்குங்களையும் சித்து தான் கவனிக்கணும் " என்று தீர்ப்பு வழங்கினாள் ஹரிணி ..

" அண்ணா சாரி அண்ணா " என்று அருள் கூறும்போதே

" டேய் , நீ குணம் ஆகி வாடா எது சாரி எது வேஷ்ட்டின்னு காட்டுறேன் .. மவனே உனக்கு இருக்கு " என்று மிரட்டினான் சித்தார்த் ..

" சரி சரி .. சீக்கிரம் எல்லாரும் வெளில போங்க .. " என்று நர்ஸ் கூறவும் ஒவ்வொருத்தராய் பேசவிட்டு வெளியில் சென்றனர் .. சந்தோஷ் அவள் நெற்றியில் முத்தமிட்டு

" லவ் யூ டா " என்றான் ..

" உன் லவ் எனக்கு ஒன்னும் வேணாம் .. போயி முதலில் ஷேவ் பண்ணு " என்று அன்பு கட்டளையிட்டாள் சாஹித்யா ..

வானதியோ அருளை பார்த்து

" ஒரு ரோடு சரியா க்ராஸ் பண்ண தெரியல .. உனக்கு ஒரு சோடாபொட்டி கண்ணாடி கேட்குதா ?" என்று முறைத்தாள் ..

" இனிமே இந்த மாதிரி நாடகம் போட்ட, கொன்னுருவேன் " என்று மிரட்டினாள் அவள் ..

" டேய் மச்சான் , நம்ம குடும்பத்துல பெண்கள் அணி ரொம்ப ஸ்ட்ராங் டா " என்று சிரித்தான் அருள் .. சந்தோஷோ

" டேய் என் மச்சியை ஏதும் சொன்ன அடி வாங்குவ " என்றான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.