(Reading time: 17 - 34 minutes)

" ன் மச்சியா ? யாரு டா ?"

" வேற யாரு வானதிதான் "

"தோ , பாருடா " என்று சாஹித்யாவும் அருளும் ஒரே நேரம் கூறி கொண்டாலும், ஹை 5 கொடுத்து கொள்ளும் நிலையில் இல்லை .. அவர்களை பார்த்து கேலியாய் புன்னகைத்து சந்தோஷும் வானதியும் ஹை 5 கொடுத்து கொண்டனர் ..

த்து ஆண்டுகளுக்கு பிறகு ...

அருளின் தோளில் சாய்ந்தபடி நின்றாள் சாஹித்யா .. ( எத்தனை வருஷம் ஆனாலும் நமக்கு நட்புதான்பா முக்கியம் ..சோ ஓபனிங் சீன் இங்க தான் .. )

" அருள் "

" என்னடீ "

" வானதி எங்க ?"

" சைந்தவி அக்கா , மதுரா அக்காவோடு பசங்களை அலங்காரம் பண்ணுறா "

" உனக்கு எப்படி தெரியும் ?"

" ஹா ஹா எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் , என் கண்ணு என் ஆளை கரெக்டா ஸ்கேன் பண்ணிடும் "

" ஹும்கும் ஒரு காலத்தில் சைட் அடிக்கவே தெரியாதவன் நீ .. இப்போ என்னமாய் டைலாக் விடுற " என்று சிரித்தாள் சாஹித்யா ..

" சந்தோஷ் எங்க டீ ?"

" ம்ம்ம்ம் அவனுடைய அன்புதோழி , அதான் உன் ஆளு ஏதோ பூஜைக்கு திங்க்ஸ் வாங்க சொன்னாளாம் .. அதுக்காக கடைக்கு போயிருக்கான் "

" அம்மா , அப்பா எல்லாம் சுட சுட ஜிலேபி ஜாங்கிரி லட்டு எல்லாம் செய்யுறாங்க ... கொண்டுவரவா டீ "

" ப்ச்ச்ச் வேணாம் டா "

" ஏன் அம்மு ?"

" நான் ரொம்ப குண்டாகிட்டேனாம் சந்தோஷ் சொல்லுறான் "

" நீ எப்போ டீ ஒல்லியா இருந்த ?"

" இப்போ நீ மரண அடி வாங்க போற "

" ஹா ஹா சரி சரி விடு .. "

" அருள் "

" என்ன டீ "

" ரொம்ப சந்தோஷமாய் இருக்கு டா .. இந்த மாதிரி இந்த நாளை கொண்டாடனும்னு நான் எவ்வளவு கனவு கண்டேன் .. இப்போ பாரேன் கண் முன்னாடி நடக்குது " என்று அவள் சுட்டி காட்டிய இடத்தில்

வண்ணமலர்களின் நடுவில்

விளக்குகளின் ஒளியில்

முத்து மணிகளின் அலங்காரத்தில்

கம்பீரமாய் நின்றிருந்தான் கோகுலக்கண்ணன் .. !

அன்று கோகுலஷ்டமி ..

ஒவ்வொரு வருடமும் கோகுலஷ்டமி அன்று சாஹித்யா கூறும் ஒரே ஆசை " ஒரு கோகுலஷ்டமி ஆச்சும் நிறைய குழந்தைகளோடு நாம கொண்டாடனும் " என்பதுதான் .. இதோ இன்று அது கண் முன் நிறைவேறியது .. வீட்டில் பூஜைக்கான வேலைகள் தடபுடலாய் நடந்தது .. கிரிதரன் , சுபாஷ் ,சந்தோஷ் பொருட்களை எல்லாம் ஏற்பாடு செய்ய, சிவாவும் அவன் மனைவி நம்ம டாக்டர் மயூரி யும் கண்ணனை அலங்கரிக்க வீடே திருவிழா காணும் ஊரை போல ஜொலித்தது .. " உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கே " என்று வானதி கூறி இருந்ததால் அவள் வரவுக்காகவே காத்திருந்தான் ஆள் .. பெரியவர்கள் அனைவரும் ஒன்று திரண்டிட எல்லா வேலையும் முடித்துவிட்டு சந்தோஷும் சாஹித்யாவின் பக்கம் நின்று கொண்டான்...

" அடடே , நாங்க இவ்வளவு வேலையை முடிச்சிட்டோம் .. இந்த பொண்ணுங்க மூணு பேரும் என்னதான் பண்ணுறாங்க " என்று குரல் கொடுத்தான் சித்தார்த் ..

" இருடா .. வருவாங்க ..எதுக்கு எடுத்தாலும் அவசரம் " என்று காதை கடித்தாள் ஹரிணி ..

" அப்படியா ? என் அவசரம் என்னனு அப்பறமா காட்டுறேன் " என்று சித்தார்த் கண்சிமிட்ட , அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு

" நாங்க எல்லாம் பேச மாட்டோம் , ஒன்லி ஆக்ஷன் " என்று சிரித்தபடி ஓடினாள் ..

" சரி நம்ம கிருஷ்ணன் ராதை எல்லாரும் வர போறாங்க ..ரெடியா ?" என்று வானதி குரல் கொடுக்க அனைவரும் ஆர்வமாய் வாசலை பார்த்தனர் ..

முதலில் கிருஷ்ணன் வேடத்தில் வந்தவன் நம்ம ஜீவவேல் .. அவன் கைகளை பிடித்து கொண்டே வந்தாள் அவனது செல்ல தங்கை ஜீவனா ...

" ஹே ஏன்டீ என் பொண்ணு ராதை மாதிரி இல்லை ?" என்று கிரி கேட்க

" அதை ஏன் கேட்குறிங்க ? பாசமலர் தங்கச்சி அவங்க அண்ணனுக்கு தங்கையாய் சுபத்திரை மாதிரிதான் வேஷம் போடுவாளாம் " என்றாள் கவிமதுரா ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.