(Reading time: 17 - 34 minutes)

ங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்

எங்கிருந்தோ வந்தான்

" என்ன தவம் செய்து விட்டேன் ?" உள்ளம் ததும்ப கண்ணீர் மல்க அவள் பாடிட

" அம்மா அழாதே " என்று முதலில் ஓடி வந்தாள் நதிமொழி .. அவள் அவளது கண்ணகளை துடைத்துவிட்டு கழுத்தை கட்டிக்கொண்டு முத்தமிட

" நாங்களும் நாங்களும் " என்றபடி மற்ற குழந்தைகளும் ஓடி வர

" டேய் எனக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க டா " என்ற சந்தோஷின் புலம்பலுக்கு அனைவரின் சிரிப்பே பதிலானது .. அந்த இன்பமான தருணத்துடன் நாமும் விடைபெறுவோம் .. இன்று போல் என்றும் " என்ன தவம் செய்து விட்டேன் " என்று எண்ணியே இன்பத்தில் திளைக்கட்டும் அனைவரும் ..

-முற்றும் –

" என்ன தவம் செய்து விட்டேன் " ... ஆண் பெண்ணின் நட்பிற்காக என் சமர்ப்பணம் இது .. எந்த அளவிற்கு இவர்களின் நட்பின் உங்கள் கண்முன் நிறுத்தினேன் என்று அறியவில்லை .. ஆனால் , கடந்த பதிவின் கருத்துகளை படித்து நிம்மதி பெற்றேன் ..

ஆண் பெண் நட்பு கதைகளில் மட்டும் தான் சாத்தியமா ? ஒரு கணவனுக்கு மனைவியை இருக்கும் பெண் நல்ல தோழியாய் இருக்க முடியாதா ? ஒரு மனைவிக்கு கணவனை இருக்கும் ஆண் , தனது தோழிக்கும் வழிகாட்டுதலாய் இருக்க கூடாதா ?

உரிமை போராட்டம் , சந்தேகம் , எதார்த்தம் என்று நட்பினை பிரிக்கத்தான் எத்தனை எல்லை கோடுகள் ? அத்தனையும் தாண்டி ஜீவநதியாய் பெருக்கெடுக்கட்டும் நல்ல நட்பு உறவுகள் ..

சில்சீயை அறிமுகப்படுத்தி வைத்த தோழி " மீரா ராம் " முக்கு எனது நன்றி ..

தொடர்கதை எழுத ஊக்கிவித்த தோழி " பாலாவுக்கு " நன்றி .. ( பாலா .. உங்களினால் தான் நான் எழுத தொடங்கினேன் .,.இதோ இரண்டாவது கதையும் முடித்துவிட்டு , உங்களை இன்னமும் தேடி கொண்டே இருக்கிறேன் )

என் பதிவுகளை பொறுமையுடன் பெற்றுக்கொண்ட சில்சீ அட்மினுக்கும் நன்றி .. மற்ற வாசகர்கள் ...இல்லை தோழிகள், உங்கள் அனைவருக்கும் நன்றி ..

முக்கியமான மூவரின் மரணம் என்னை முற்றிலுமாய் அசைத்து பார்த்துவிட்டது ..அதனால்தான் நடுவில் கதைகளை சரிவர எழுத முடியவில்லை .. இருப்பினும் அம்மூவருமே என்னோடுதான் இருப்பதாய் உணர்கிறேன் ..

இந்த கதையை , இயற்கை எய்திவிட்டு , இப்போது எனது இதயத்தில் அமர்ந்திருக்கும் சகோதரன் " கமல் " லுக்கு சமர்பிக்கிறேன் .. மேலும் நல்ல கதைகளுடன் சந்திக்கிறேன் ... பாய் பாய் ..

Episode # 24

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.