(Reading time: 23 - 45 minutes)

"ல்யாணம்கிறது, வெறும் காமத்துக்காக செய்துகரதுக்கு மாத்திரம் இல்லை.. வாழ்கையில் பரஸ்பரம் நம்பிக்கை, நன்னா புரிஞ்சுகிறது, விட்டுக் கொடுக்கரது, ஒருத்தருக்காக ஒருத்தர் வாழறது, அவா சுக துக்கத்துல பங்கு எடுத்துகிறது, இது எல்லாம் கலந்து வர காதல்ல முடியர கல்யாணம் என்னிக்கும் நிலைச்சு இருக்கும்.. அதைத்தான் நான் அவ கிட்ட ஏதிர்பார்த்தேன்.. நான் முதல்ல காதலித்ததே தப்புதான்.. ஆனா என்னை பொறுத்தவரைக்கும், காதல் என்கிறது எப்போ வேணால், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.. ஆனா எல்லா காதலும் வெற்றி அடையுமான்னு சொல்ல முடியாது.. அது அவவா விதி.. எனக்குள்ளேயும் காதல் மலர்ந்தது.. ஆனா அது தப்பான ஒருத்திகிட்ட வந்தது என்னோட துரதிர்ஷ்டம்"..

"கவிதா இத்தனை நாளா காதலிச்சாளா எனக்குத் தெரியலை.. மே பீ அவளுக்கு ஒரு அட்ராக்ஷனா கூட அது இருக்கலாம்.. நான் கஷ்டப் பட்டபோது கொஞ்சம் கூட என் மேலே நம்பிக்கையே அவ வைக்கலை.. என் கஷ்டத்துல பங்கெடுத்துக்கலைன்னாலும் பரவாயில்லை, என்னை ஒரு பொருட்டாவே நினைக்கலை.. ஏன் ஒரு சக மனுஷன்னு கூட அவளுக்கு தோணலை.. என்னமோ நான் ஒரு வேஸ்ட் என்றே நினைத்து பேசுவாள்..  கொஞ்ச நாளா அவாத்துலேயே நான் வேலைக்கு போனேன்.. அவ அம்மா, வேலைக்காரனை விட கேவலமா என்னை விரட்டுவா.. உண்மையிலேயே அவளுக்கு என் மேலே காதல் இருந்தால், அதை பார்த்து அவள் உள்ளம் பதறதா?.. இவனெல்லாம் ஒரு மனுஷனா, என்று கண்டு கொள்ளாமல் இரண்டு மாசமா இருந்தா.. ஆனந்த் சாரும், மாமாவும் எவ்வளவோ எனக்கு உதவியிருக்கா.. என் மேலே அவளுக்கு நம்பிக்கையே இல்லையே"..

"இரண்டு நாளைக்கு முன்னால கூட டாக்டர் விஜய் கூட சம்மந்தம் அவளுக்கு வந்த போது கூட வாயை திறக்காமல், இரண்டு நாள் கழிச்சி பதிலை சொல்லரேன்னு அவ, அவாகிட்ட சொன்னா..  எதுக்கு?.. ஒரு வேளை நான் செலக்ட் ஆயிட்டா, என்னை கன்சீடர் பண்ணரது, இல்லைன்னா அந்த டாக்டரை கரெக்ட் பண்ணறது.. அதுதான் அவளோட நோக்கம்.. அவளுக்கு வேண்டியது என்னோட காதல் இல்லை.. கலெக்டர் பெண்டாட்டின்னு சொல்லிக்க ஒரு பெருமை.. ஜம்பா சொல்லிக்கனும்.. கொஞ்ச நாள் அது அலுத்தவுடன், அந்த வேலையை விட்டுட்டு, நான் வீட்டோட அவாத்து மாப்பிளையா இருக்கனும்.. அவளுக்கு கூஜா தூக்கனும்"..

"சாரி,  என்னை எல்லோரும் மன்னிக்கனும்.. எனக்கு இதுல இஷ்டம் இல்லை.. நான் கடைசிவரை, என் அப்பா, அம்மாவோடு இருந்து, என் சுய மரியாதையை காப்பாற்றி கொண்டு, அவா பார்கற பெண்ணை கல்யாணம் செய்துண்டு இருக்கத்தான் ஆசைப்படறேன்..  உங்காத்துக்கு நான் ஏத்த மாப்பிள்ளை இல்லை.. கவிதா நீயும் என்னை மன்னிச்சிக்கோ.. உனக்கு ஏற்றா மாதிரி, உன் ஸ்டேசசுக்கு தகுந்தா மாதிரி பாரு.. அதான் உனக்கும் நல்லது.. இந்த பீச்சில் பத்து ரூபாய்க்கு சுண்டல் வாங்கி தர வசந்த் வேண்டாம்" என்று  வசந்த் சொல்லி முடித்தான்.

"ஏன்.. அதோ உங்களை வைச்ச கண்ணு வாங்கமா பின்னால நின்னு பார்த்திண்டு இருக்காளே, அந்த பைரவி அவ கிடைச்சுட்டாளா இப்போ?.. என்ன தான் இருந்தாலும் நான் லோக்கல் தானே..  அமெரிக்கா அமெரிக்கா தான்.."  கவிதா கத்த தொடங்க,

முதலில் அதிர்ந்தவன் ஆனந்த் தான்.. "கவிதா.. என்ன பேச்சு இது" என கண்டிக்கத் தொடங்க,

அஜய்யும் அதுவரை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன்,  "மிஸ்.கவிதா.. கன்ட்ரோல் யுவர் டங்க்.. என்னோட பிரண்டை பற்றி இன்னுமொரு வார்த்தை சொன்னால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது"  என்று கர்ஜித்தவன்,

"ஆனந்த்.. ப்ளீஸ், உன் தங்கையை முதலில் இங்கிருந்து அழைத்து போ.. அவ எதையாவது பேசி தன்னையே கேவலப் படுத்துகிரதுக்கு முன்னால் இங்கேயிருந்து அழைச்சுண்டு போ.. அது தான் எல்லோருக்கும் நல்லது"

“ஏன் என் பொண்ணு சொல்லறதில என்ன தப்பு??..  காதலிச்ச புள்ளையாண்டவன் இப்ப அவ வேணாம்னா என்ன அர்த்தம்?? ஒரு வேளை எங்க கவி சொல்லறாப்ல இந்த பையன் அந்த பொண்ணைக்காக என் பெண்ணை வேணாம்னு சொல்லறானா??.. இதுல என்னை பத்தி வேற குத்தம் சொல்லறான்.. நன்னாயிருக்கு நியாயம்??” பத்மா கத்த தொடங்க,

அதற்குள் நிலமையை சரியாக புரிந்து கொண்ட ஆனந்தின் தந்தை, தன் பெண்ணையும், மனைவியையும் ஒரு பார்வையாலேயே அடக்கி விட்டு,  "சாரி.. மிஸ்டர் ராமமூர்த்தி.. நாங்க உங்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்துட்டோம்.. முதல்லேயே உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருக்கனும்.. என் பொண்ணை நம்பி வந்தேன்..  அவ பேசினது தப்புதான்.. உங்க பையன் சொன்னது போல இவள் உங்க குடும்பத்துக்கு சரி வர மாட்டாள்.. என் மனைவிக்காகவும், பொண்ணுக்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"  என்றவர்,

தன் குடும்பத்தை கூட்டிக் கொண்டு வெளியேறினார் அந்த மரியாதை பட்ட மனுஷர்.

ஆனந்த், "சாரி"  என்று பொதுவாக சொல்லி விட்டு, வசந்திடம் மீண்டும் தன் வாழ்த்துக்களை சொல்லி விட்டு பிறகு சந்திக்கலாம் என்றவன், பைரவியிடம் கண்களாலேயே மன்னிப்பை யாசித்தபடி தன் குடும்பத்தினருடன் வெளியேறினான்.

Episode 22

Episode 24

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.