(Reading time: 19 - 38 minutes)

08. காதல் பின்னது உலகு - மனோஹரி

நிலு கொஞ்சம் யோசிச்சு பேசு நிலு….. கொண்டல்புரத்துலயும் உனக்கு சொந்தகாரங்க இருப்பாங்க….அவங்க முன்னால போய் கன்னா பின்னானு சுத்த மாட்டேன்….. என் அப்பாவுக்கு மனசு கஷ்டபடுற மாதிரி எதையும் செய்யமாட்டேன்னு சொல்லிட்டு இது என்ன இப்ப போய் மாடு திருட போற வேலை…… நீ அதை பிக்னிக்னு சொல்லுவ…. ஆனா ஊர் அப்டி சொல்லாதே….”

நிலவினியின் திட்டத்தைக் கேட்டவுடன் அவளை  கொண்டல்புரம் போகாமல் தடுப்பது எப்படி எனதான் முதலில் பவிஷ்யா யோசித்தாள். அதனால் இப்படி கேட்டும் வைத்தாள் முதலில்….

ஆனால் அதற்கெல்லாம் அசரும் நபரா நம்ம நிலுபொண்ணு??

Kadhal pinathu ulagu

அதெல்லாம் நாங்க அப்பமே யோசிச்சட்டுமாங்கும்…..அதுக்கு ஐடியா ரெடி….. நாம நம்ம மாதிரி போனதான ப்ரச்சனை….. நாம உள்ளூர்காரங்க மாதிரியே போவோம்….

“அதென்ன உள்ளூர்காரங்க மாதிரி….?”   ரெஜினாகேட்டுக் கொண்டிருக்கும் போதே

“டொன்ட டொய்ங்….” என்றபடி நிலு எடுத்துகாமித்தது வேஷ்டி  சட்டை….

“வாட்…?” பவிஷ்யா பயந்தே போனாள்.

“யெஸ்…யெஸ் யெஸ் நாம இந்த காஸ்ட்யூம்ல தான் போக போறோம்….அப்பதான் தனியா ட்ராவல் செய்றப்பவும் நம்மட்ட யாரும் வம்பு பண்ணமாட்டாங்க…..கொண்டல்புரத்துலயும் யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது…. அதோட அங்க உள்ள ஆடு மாடு குறிப்பா டாக்ஸெல்லாம்  நம்ம சல்வாரைப் பார்த்து சங்கடபட்டு சத்தியாகிரகம் எதுவும் செய்துட்டுன்னா சீனாகிப் போகும்ல….” நிலு ‘எப்பூடி’ என்ற வகையில் ஒரு லுக் விட

அதுவரை பவிஷ்யாவின் அம்மாவுடன் அரட்டை அடித்துவிட்டு அப்பொழுதுதான் அங்கு வந்த ரெஜினா….

“இம்புட்டு அறிவ எங்கிட்டு கண்ணு ஒளிச்சு வச்சுகிட்டு இருந்த…..?” ஆச்சர்ய படுவது போல்  கிண்டாலாய் ஜாலியாய் நிலவினி கூற்றை ஏற்றபடி….நிலு கையிலிருந்த வேஷ்டி சட்டையை வாங்கி தன் மேல் வைத்துப் பார்க்க….. பவிஷ்யா பதறிப் போனாள்.

“ஏய் நிலு….மாப்ள ஊருக்கு இப்டி போய் நிப்பேன்னு….இது என்ன வேலை….?” அவள் அதட்டினாள்

“பவி…என்ன நீ…இதுதான் பின்னால நிறைய ஸ்வீட் மெமோரீஸ்லாம் கொடுக்கும்….. நம்ம நிலுவ  யவி அண்ணா இப்டி பார்க்கிற மாதிரி கற்பனை பண்ணிப்பாரு….  புரிஞ்சுக்கோ பவி….. இதெல்லாம் வேணும் வாழ்க்கையில….. எல்லா நேரமும் ஃபார்மலாவே வாழ்ந்துட்டு போக கூடாது….” ரெஜினா அவளது பார்வையை சொல்ல, நிலு எப்படியாவது பவி இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே என முழிக்க……. 

“சரி போவோம்…..ஆனா நான் சேலை கட்டிட்டுதான் வருவேன்….” என தடாலடியாக சம்மதித்தாள் பவிஷ்யா. அப்பொழுதுதான் அவளுக்கு யவ்வனைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்று உறைத்ததே காரணம். யவ்வனைப் பார்த்து பேசிவிட்டால் ப்ரச்சனைக்கு தீர்வு இருக்கும் என்பது அவளது நம்பிக்கை….

அடுத்ததாய் ஒப்பனை படலம். இம்மட்டுக்கும் சம்மதித்தாளே என நிலுவும் பவிஷ்யாவை புடவை கட்ட தடை சொல்லவில்லை.

ஆக பவிஷ்யா பாங்காய் புடவை உடுத்தி கிளம்பி வரும் போது…. இயற்கையில் சற்று ஓங்கு தாங்கான உடலமைப்பு கொண்ட ரெஜினா…. அவள் போட்டிருந்த சல்வார் மீதே வேஷ்டி சட்டை அணிந்து, முன்பு ஒரு நாடகத்திற்காக வாங்கிய ஒட்டு மீசை பவிஷ்யா வீட்டில் கிடைத்ததென அதையும் ஒட்டி…. வெயிலுக்கு பயந்து விவசாயிகள் தலையில் கட்டும் வகையில் ஒரு தலைப்பாகை கட்டி, பக்கத்தில் பார்க்க வித்யாசமாய் தெரிந்தாலும்…..சற்று தூரத்தில் வைத்துப் பார்த்தால் அம்சமான ஆண் என ஒத்துக்கொள்ளும் அளவிற்கு நின்றிருந்தாள்.

ஆனால் நம்ம நிலுவோ அவளது அதே சல்வாரில்

“அம்மா சாப்ட சொன்னப்பல்லாம் ஒழுங்கா சாப்டாம போனது தப்பா போச்சு…..வேஷ்டி கட்டின ஒட்டடை குச்சி போல இருக்கேன்…..ஒழுங்கா இப்போ எனக்கு உன்ட்ட இருந்து ஒரு பத்து செட் சல்வார் தா…” என்றாள் அவள் இவளைப் பார்க்கவும்…..

பவிஷ்யாவிற்கு மனதில் தெரிந்த ஒட்டடை குச்சி கோலத்தில்…..பல் தெரிய சிரிக்க கூட பயம்….. அப்றம் யார் நிலுவ சமாளிக்கிறதாம்…..? வாட்ரோபிற்குள் மண்டையை நுழைத்துக் கொண்டு வாய்விட்டு சிரித்தாள் பவிஷ்யா….பாவம் ஏதோ அவளால முடிஞ்சது….

அடுத்த சில மணி துளிகளில் பத்து செட் சல்வார்….அதன் மீது கட்டி அணிந்த வேஷ்டி சட்டை… தலைப்பாகை…. ஒரு குட்டி ஒட்டு மீசை…. என நிலுவும் இப்போது தயார்….

ரிகர்சல் எல்லாம் திருப்தியாய் தெரிய….. மீண்டுமாய் நிலுவும் ரெஜியும் ஒற்றை சல்வாருக்கு மாற…. வேற வழி பவிஷ்யா வீட்டிலிருந்து இவர்கள் எப்படி வேஷ்டி சட்டையில் வெளியேற…..

ஆக அந்த ஆன்னீஸ் போய்….அங்கு கொஞ்ச நேரம் செலவிட்டு….அதன் பின் அதன் அருகிலிருந்த  தோப்பின் பம்புசெட் பக்கத்திலிருக்கும் அறைக்குள் போய் ஆடை மாற்றி…

இப்போது இரு வேஷ்டிகட்டு வீர்ர்கள் அவர்களுடன் ஒரு புடவைப் பொண்னு என்ற ரீதியில் ரெஜினா பைக் ஓட்ட….. அடுத்து நம்ம நிலவினி அமர, அவளுக்கும் பின்னாய் பவிஷ்யா என தொடங்கியது பயணம் ஜோராய்….

கொண்டல்புரம் நோக்கி சென்ற பாதையின் இரு பக்கமும் மரங்களும்….. வேலி போல் வளர்ந்திருந்த புதர்களுமாய் ….. அங்கங்கு சிறு சிறு நீர் தேக்கங்களும்…… வயல்வெளிகளுமாய்…. அழகு…

இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் தெரிய ஆரம்பிக்கின்றன……

த ஃபார்ம்…. என்ற அடையாளக் குறி போர்டு தெரிய, ஊரைவிட்டு விலகிச் செல்லும் அந்த பாதையில் பைக்கை திருப்பியபடி

“ஹேய் நிலு உன் ஊர் சூப்பர்டி….யவி அண்ணாட்ட சொல்லிடு….சும்மா நச்சுன்னு இருக்குது…… முடிஞ்சா நமக்கும் இங்கயே ஒரு சீட் போட சொல்லி கேட்கலாம்தான்….ஆனா இப்படி ஒரு கோலத்துல வந்த பொண்ணை யாரு கட்டிப்பா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.