(Reading time: 19 - 38 minutes)

ரெஜினாவுக்கு நிலவினி ஏதோ யவ்வனிடம் சீண்டி விளையாடப் போகிறாள்….சீக்ரெட்டாய் அவனை சைட் அடிக்கப் போகிறாள் என்பதே புரிதல்….. ஆக அவளறிந்த வகையில் ஜாலியாய் பேசிக் கொண்டு வந்தாள் அவள்…..

யவ்வனின் விசிடிங் கார்டில் இந்த “த ஃபார்ம்” தான் அவனுடையது என்றிருந்தது. இப்பொழுது பகல் ஒன்றரை மணி….தெரு வெறிச்சோடி கிடந்தது….. பொதுவாக வயலில் வேலை செய்யும் மக்களை தவிர,  இந்நேரம் எல்லோரும் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு சென்றிருப்பார்கள்.  ஒரு குட்டி தூக்கத்திற்குப் பின் 3 மணி அளவில் தெருவில் ஆள் நடமாட்டத்தைப் பார்க்கலாம்….

ஆக இந்த நேரம் தான் மாடை தள்ளிட்டுப் போக சரியான நேரம்…..அதோட என்னதான் விசிடிங் கார்டுலாம் போட்டு மாடு வளர்க்கிறதை மார்டனா காமிச்சுகிட்டாலும்……. மாட்டுக்கு துணைக்கு பகல்ல யாரும் பக்கத்துல நிக்க போறது இல்லை….. இவளுக்கு தெரியுமே காலைலயும் நைட்டும்தான் பால் கறப்பாங்கன்னு…… நிலவினி மனம் இப்படியாய் போய்க் கொண்டு இருக்க…..

“ஆமா அதுக்குத்தான் ஒழுங்கா பொண்ணா லட்சணமா வரனும்…..” பவிஷ்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வேஷ்டி ஐடியா விருப்பம் இல்லை என்பதால்  ரெஜினாவின் வார்த்தைகளுக்கு இப்படியாய் பதில் சொன்னாள் அவள்.

“ஓகோ….இப்பதான் புரியுது…….பொண்ணு ஏன் புடவையிலதான் வருதுன்னு…. முத வேலையா அண்ணாட்ட சொல்லி பவிக்கு இங்க ஒரு பையான பார்க்க சொல்லு நிலு…. ஹனிமூன் பிஸில இதை நீ மறந்துடாத….” ரெஜினாதான்…..

அவ்வளவுதான் ஹனிமூனா….. இந்த யவ்வனோடா…… ரெஜினாவின் வார்த்தைகளுக்கு சட்டென ஒரு அடி அவள் தலையில் பதிலாக வைத்தாள் நிலவினி…. அவளால வாகா அங்கதானே அடிக்க முடிஞ்சுது……

அதே நேரம்…ஆமாம் அதே நொடி….பவிஷ்யாவும் “உனக்கு வாய் ஓவரா போகுது….”. என்றபடி எக்கி, நீட்டி தன் கையால் தொடமுடிந்த ரெஜினாவின் கையில் ஓர் அடி….ரெஜினாவுக்கும் பவிஷ்யாவுக்கும் இடையில் நிலவினி உட்கார்ந்திருக்கிறாளே…. ஆக இதுதான் இவளால் முடிந்தது….. பவி மனதிற்குள் அந்த அவனின் முகம்…. “ப்ச்” என்று இருந்தது…..யார் எவன்னு தெரியாத அவனை எங்க போய் தேட….?  இப்டி இங்க வச்சு எதிர்ல வந்து நின்னுடமாட்டானான்னு கூட ஒரு ஏக்கம்…..கூடவே அவன் வந்து நின்னா கூட என்ன ப்ரயோஜனம் என்று ஒரு சலிப்பு…. அவ்வளவுதான் தெரியும் பவிஷ்யாவுக்கு…..

புல்லட் சரிய…அதோடு அவளும் சரிய….. வள் வள்…. அய்யோ நாய் நாய்….. இப்படி என்னமெல்லாமோ கேட்க….. அவள் சரிந்து  அந்த சிமெண்ட் ரோட்டிற்கு அருகிலிருந்த புதரில் விழுந்து உருண்டு கொண்டிருந்தாள்…..

பின்ன என்னவாம்? என்னதான் பக்காவா பைக் ஓட்ற பார்டியா இருந்தாலும்…..ஒரே நேரத்தில் அதுவும் ரெஜினா எதிர்பாராத நேரத்தில் அவள் தலையில் நிலவினி அடிக்க..…அதில் அவிழ்ந்த தலைப்பாகை ரெஜினாவின் பார்வையை மறைத்துக் கொண்டு சரிய….அதே நேரம் பவிஷ்யா வேறு அவள் கையை தட்டி பேலன்சை காலி செய்ய….. இடபக்கம் வலபக்கம் என ஒரு விதமாக ஆட்டம் காட்டிய புல்லட்…. இறுதியாக ரோட்டின் பக்கவாட்டில் இருந்த ஒரு அரையடி உயர அடையாள கல்லில் இடித்து சாய்வாக சரக் சரக் என சரிந்தது…..

புல்லட் வெயிட் என்ன சாதாரண வெயிட்டா? சட்டென பிடிச்சு நிறுத்த….அதோட அதுக்கு மேல இருக்கிறது மூனு பொண்ணுங்க….ஆக தடை ஏதும் இல்லாமல் அது தரையில் விழுந்தது…. ஊருக்குள்ள வந்தாச்சு இனிமே மெதுவா போகனும் என வேகம் குறைத்து ரெஜினா வரப் போய் இந்த விழுதல் சிறு சிராய்ப்புகளுடன் முடிந்து போயிருக்கலாம்தான்….. ஆனால் போகலையே…

ஏன்னா ரோட்டுக்கு பக்கத்தில் பள்ளம் தோண்டி… அதில் படுத்தபடி பகல் பொழுதை  நாகரீகமாய் கழித்துக் கொண்டிருந்த நாய் குழுமத்தில போய் நல்ல படியா விழுந்தாங்களே நம்ம நிலவினியும்…..ரெஜினாவும்…..

ஒரு பக்கமாக கால் போட்டு உட்கார்ந்திருந்ததால் பவிஷ்யா அடுத்த புறமாக புல்லுக்குள் உருண்டாள்….

அவ்வளவுதான் “அய்யோ நாய் நாய்…பிடி அதை ……” என்றபடி ரெஜினா ஒரு பக்கமும் ஒன்னுமே சொல்லாமல் அடுத்த நாய்க்கு  பயந்து நிலவினி இன்னொரு பக்கமும் தலை தெறிக்க ஓட்டம்….

ஆமா என்னதான் நல்ல நாய்கள்னாலும் அவங்க ஆனந்த சயனத்துல இருக்கிறப்ப திடுதிப்புன்னு டிஸ்டர்ப் செய்தா சும்மா விடுவாங்களாமா? அதோட அசலூர் குடுகுடுப்பகாரனாட்டாம் இருக்குதுகளே இதுக என்ற நினைப்பு வேறு  அந்த நாய்களுக்கு….

சும்மா துரத்து துரத்துன்னு துரத்துச்சுங்கல்ல…..

கையை காலை தேய்த்துக் கொண்டே பவிஷ்யா எழுந்து நின்று பார்க்கும்போது அவள் பார்வைக்குள் கூட இல்லை பைக் ஓட்டி வந்த பைங்கிளியும்…..அப்படி வர காரணமான நிலவினியும்….

இப்ப இவ என்ன செய்யனும்?? எங்க போகனும்???  கொஞ்சம் டென்ஷானாய் முழித்தபடி இவள் திரும்பி திரும்பி பார்க்க எதிரில் வந்து கொண்டிருந்தான் அவனே அவன். அவள் மனதிற்குள் அடிக்கடி மையம் கொள்பவன்….

கண்களை கசக்கிக் கொண்டாள் அவள் தன்னையும் மீறி….. வழக்கமா வர்ற மாதிரி கற்பனைதானோ இது?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.