(Reading time: 19 - 38 minutes)

னால் அந்த அவன் பிம்பம் இப்பொழுது சின்னதாய் மென்மையாய் சிரித்து “ஹலோ……நீங்க எங்க இங்க….? நிஜமாவே நான் தான்” என்றதும் அடிவயிறு வரை காய்ந்து போனது ஆனந்த படபடப்பில் அவளுக்கு….. ஓ இது நிஜம்…..

ங்கு தன்னை துரத்திய நாய்க்கு முன்னால் ஓடிய நிலவினி சற்று மேடாகிக் கொண்டே போன அந்த சாலையில் கண் மண் தெரியாமல் மூச்சிளைக்க ஓடியவள்…. ஒரு கட்டத்தில் சாலை முடிவில் எதிரில் குறுக்காக தெரிந்த ஒரே சுவரில், நடுவில் இருந்த இரும்பு கதவில், எப்படி கால் வைத்து எப்படி ஏறினாள் என்றெல்லாம் தெரியாது, அதை தாண்டிக் குதித்திருந்தாள். துரத்திய வாள் வள் வித்யாசமாக இருக்கவும் இப்பொழுதுதான் இவளுக்கு புரிகிறது இவள் கேட்டை தாண்டிவிட்டாள்…. நாயால் இனி உள்ள வர முடியாது என….

ஹப்பா…..என்று நினைத்து முடிக்க கூட முடியாமல் மூச்சிளைக்கிறது இவளுக்கு……

நெஞ்சை பிடித்துக் கொண்டு இளைக்க இளைக்க இரு எட்டு எடுத்து வைத்தால்…………. வைத்தால் என்னாச்சாம்???

ஐயையோ!!!! ஐயையோ….!!!!!

 எதிரில் இரண்டடி உயரத்துக்கு நிற்கிறது ஒரு க்ரேடன் வகை நாய்… உர் உர் என்றபடி…..இவ்ளவு நேரம் துரத்தின நாய் இது முன்னால சுண்டெலிக்கு சமானாம்….

ஓ மை காட்……துள்ளி ஓடத் துவங்கினாள் அவள்…. எங்க ஓட? ஒரு நீள காங்க்ரீட் ஷெட்….. அதுதான் அவள் ஓடத் துவங்கிய திசையில் இருந்தது…. அவளை துரத்திக் கொண்டு அங்கும் அந்த க்ரேடன் தாவி வந்தது……ஷெட்டின் முடிவுக்கு வந்து விட்டாள் இனி ஓட வழியே இல்லை……இப்போ இவ தான் நாய்க்கு லஞ்ச்…..கடவுளே காப்பாத்து…..ஐயோ அம்மா பயமாருக்கே….

ஓடி வந்து கொண்டிருந்தவள் கண்ணில் எப்படி தெரிந்தது என தெரியவில்லை…… மேலிருந்து சுவரின் பாதி உயரத்திற்காய் தொங்கிய அந்த ஏணி…..

விலங்குகள் எதுவும் ஏறிவிடக் கூடாது என்பதற்காகவே அமைக்கப் பட்ட ஏணி போலும்….. வந்த வேகத்தில் கைகளை தலைக்கு மேலாக உயர்த்தியபடி எவ்வி அந்த ஏணியின் இறுதிப் படியைப் பற்றியவள்……

தன் கால்களை நாய்க்கு லெக் பீஸாக்க விருப்பமின்றி……முழு பயம் தந்த மொத்த பலத்தில் காலை சுழற்றி ஏணியில் ஏறி……. இப்போது காலைக் குறி வைத்து தொவ்விய நாயின் வாயோடு போயிற்று இவளது வேஷ்டி…….

அதான் பத்து சல்வார் பாட்டம் போட்டிருக்கிறாளே…….ஆக அதைக் கண்டு கொள்ளாமல் அந்த ஷெட்டின் மேல் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த அந்த பரண் போன்ற சிலாபுக்கு சென்றேவிட்டாள்…..

பயம் பயம் என்கிறது இதயம்….நாயின் குரைப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது….. இரு காதையும் கைகளால் பொத்தி…..கிடுகிடுவென நடுங்கிய படி……அந்த பரணில் இவள் குப்புற படுத்திருக்க…..

இப்பொழுது காதில் விழுகிறது “ஏய் ரோவர்……ரோவர் பாய்… கூல் டவ்ண் மேன்” என்ற சத்தம்…. நிமிர்ந்து பார்க்காமலே தெரிகிறது வந்திருப்பது யாரென்று இவளுக்கு….. யவ்வன்!!!

‘தெய்வமே இவன்ட்டயா வந்து நான் மாட்டனும்…..’ என்றெல்லாம் அவளுக்கு தோன்றவே இல்லை அப்போது…..

துள்ளி எழுந்தவள் “எனக்கு ரொம்ப பயமா இருக்கு…ப்ளீஸ் அந்த நாய அந்த பக்கமா கூட்டிட்டுப் போய்டுங்களேன்….ப்ளீஸ்.” என்றாள் அழுகையினூடே….

அவ்வளவுதான் எழுந்து நின்ற அவளைப்  பார்த்து குதித்து குதித்து குரைத்தது அந்த க்ரேடன்.

“ஹேய் வினி அது ஒன்னும் செய்யாதுமா இதுக்கு போய் ஏன் அழுற…?”  இவளுக்கு சமாதானம் சொல்ல முயன்றவன்…

“நிறுத்து ரோவர்…. நிறுத்துன்னு சொன்னேன்” என அவனது நாயை அதட்டினான்… ஆனால் அவன் குரலுக்கு அடங்காமல் இவளைப் பார்த்து அது இன்னும் குறைக்க……

இவளை நிமிர்ந்து பார்த்தவன்…..”உன் ட்ரெஸ்கோடைப் பார்த்து அது டென்ஷனாகுது போல….” என்றான் இவள் மீது பார்வையை ஓட்டியபடி….

அப்பொழுதுதான் தன்னை குனிந்து பார்த்தாள் நிலவினி சல்வார் பாட்டம்…மேல பல சல்வார் டாப்ஸ் அதுக்கும் மேல பட்டன் போட்ட டாக்டர் கோட் மாதிரி வெள்ளை சட்டை…தலையில் தலைப்பாகை… முகத்தை தடவிப் பார்த்தாள் மீசையைக் ஏற்கனவே காணோம்….

அவசர அவசரமாக அந்த தலைப்பாகையை உருவி எடுத்து பக்கத்தில் வைத்தாள். இப்பொழுது தலை முடி அவிழ்ந்து சரிந்தது…...

க்ரேடன் ஒருவிதமாய் லுக் விட்டு பின் குறைக்கும் அளவை குறைத்தது….அதாவது யோசித்து யோசித்து குறைத்தது….

“அதை இப்பயாவது போக சொல்லுங்க…” சற்று சிணுங்கலாய்….ஒற்றைக் காலால் தரையை ஓங்கி மிதித்து பிடிவாதமாய் இவள் சொல்ல…. அந்த பரணில்  கிடந்த வெட்டபட்ட வைக்கோல் போன்ற தூசிகளில் பட்டு இவள் கால் வழுக்க, ஸஸ்ஸ்…..  கைகளை காற்றில் ஆட்டி கால்களை எப்படியேல்லாமோ அசைத்தும்….ம்ஹூம் நடக்க இருந்ததை நிறுத்தவே முடியலையே……

 அவளை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் மேல் வந்து மொத்தென விழுந்து அவனை மெத்தென சாய்க்க….எதிர்பாரா இந்த நிகழ்வில் அவனும் இவளோடு சேர்ந்து சரிய…..அவன் தரையில்…. அவன் மேல் இவள் என விழுந்து சேர்ந்தாள்….

பார்த்துக் கொண்டிருந்த க்ரேடன் சும்மா இருக்குமா என்ன…..? இவள் நடந்ததை உணரும் முன்னமும் கூட….அது வள் என்றபடி பாய்ந்து அவள் மேல் கால் போடப் போக…..பின்னே தன் எஜமானனை அடிச்சுட்டே இந்த அபூர்வ ஜந்துன்னு அது நினைக்கும்ல….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.