(Reading time: 22 - 43 minutes)

வள் எல்லா வகையிலும் பாதுகாப்பாய்… நிம்மதியாய் இருக்க வேண்டும் என்று  இவனுக்குள் ஏன் இப்படி ஒரு தகிப்பு??

இவனது சரியாவிற்கு சம்மதமாய் மெல்ல தலை அசைக்கிறாள் அவள்.

‘நேத்து கேட்ட சாரி  இன்னைக்கு குடம் நெளிஞ்சதுல முடிஞ்சிட்டு….…..இப்ப இந்த சாரிக்கு ஆயுசு எது உடையுறதுலன்னு நினைக்குதோ வெள்ளகோழி?......இவனை நட்பு என  நம்புவாளா அவள்?

‘அவளை இவனிடம் இலகுவாக உணர வைத்து, அதன் பின்  அந்த ஏர்போர்ட் விஷயத்தைப் பத்தி  பேசனும்…. அதுவும் இப்ப இவன் இங்க இருந்து கிளம்புறதுக்குள்ள…..சும்மா சும்மால்லாம் இங்க வந்து நிக்க முடியாது….’ மனதிற்குள் எண்ணியவன்

“உன்ட்ட ஒன்னு சொல்லனும் …..இப்டி நீ வீட்டுக்கு பின்னால நிக்றப்ப…முன் பக்க கதவை பூட்டி வை…. யார் வர்றா போறான்னே உனக்கு தெரியலை பாரு….” ‘இப்ப இவன் உள்ள வந்த மாதிரி வேற யாரும் உள்ள வந்தால் என்னாகும்?’

  இதெல்லாம் சொல்லியே ஆக வேண்டிய விஷயம் என்பதாலும்….. இவனுக்கு அவள் மீது அக்கறை இருக்கிறது என்ற எண்ணம் அவளுக்கு வரும் என்ற நம்பிக்கையிலும் முதலில் இதை சொன்னான்.

அதோடு இவன் போய் உருண்டு கிடந்த அந்த குடத்தையும் தூக்கி நிமிர்த்தி வைத்தான்.

“ஓ….அது….கதவை பூட்டி பூட்டி வச்சா….யாரும் நம்மட்ட நல்லா பழக மாட்டாங்கன்னு ஆன்டி சொன்னாங்க…..ஆன்டி இங்க வந்த பிறகு அவங்கட்ட பேச பழகன்னு ஆட்கள் வந்து போய் இருந்தா தான அவங்களுக்கு நல்லா இருக்கும்….?....எப்டியும் பகல்ல நான் வேலைக்கு போகனுமே…..ஆனாலும் இனிமே இப்படி நான் பின்னால இருந்தா கண்டிப்பா லாக் பண்ணிடுறேன்….” இப்படியாய் அவள் இவன் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல

‘வேலையா?’ இவன் ஆச்சர்யமாய் நிமிர்ந்து பார்க்கிறான். ஆனால் இங்கயே குடி ஏறப் போகிறாள் என்ற பட்சத்தில் அவள் சொல்வது சரிதானே….. இங்க இருந்து எல்லோரும் யூஎஸ் போக…..அங்க இருந்து இங்க வந்து என்ன செய்யப் போறா இவ? என்ன வேலை செய்வா அதுவும் இந்த கிராமத்துல?

“இந்த விஷயத்துல உங்கட்டதான் உதவி கேட்கனும்னு நினைச்சேன் தீபன்….” இவன் முகத்தை பார்த்தபடி நிறுத்தினாள் அவள். எதிர்பார்ப்போடு ஒரு கெஞ்சல் பார்வை….

இவன் இதுக்கு எப்படி நோ சொல்வதாம்?

“என்ன விஷயம் அனு….ஈ விசா வாங்கனுமா……?” அவள் வேலை என்று சொன்னதால் இவன் மனம் அவளுக்கு அதற்கு தேவையான எம்ப்ளாய்மென்ட் விசாவில் போய் நின்றது.

“அதெல்லாம் நான் பார்த்துப்பேன் தீபன்…… இது வேற…..”  அவளோ அதை மறுத்ததும் இல்லாமல் இவனை எத்தனையாய் ஏமாற்றப் பார்க்கிறாள் என்பதை அக்கு வேர் ஆணிவேராய் உணர வைத்தாள்.

“இங்க கனி ஆன்டி மாமனார்க்கு நிறைய இடம் உண்டுன்னு கேள்விபட்டிருக்கேன் தீபன்….. அதோட டாகுமென்ட்ஸ்….அப்றம் இந்த வீட்டோட டாகுமென்ட்ஸ்லாம் எனக்கு வேணும்….. அந்த லேண்ட்லாம் எங்கெங்க இருக்குன்னும் எனக்கு டீடெய்லா தெரியனும்….. இந்த வீட்ல அந்த டாகுமென்ட்ஸ்லாம் தேடிட்டேன்….எதுவும் இல்லை…. ஒரிஜினல் கிடைக்கலைனா கூட ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல அப்ளை பண்ணி அடுத்த காபி வாங்கலாமாமே…..எனக்கு அதுல உதவி பண்ண முடியுமா?.....நீங்களே செய்து தரனும்னு இல்லை….இந்த மாதிரி வேலை செய்ற யாரையாவது அறிமுக படுத்தி வச்சிங்கன்னா கூட போதும்…. ஆனாலும் லேண்ட் எங்கெல்லாம் இருக்குன்னு உங்க வீட்ல உள்ளவங்களுக்குத்தான தெரியும்?” அவள் கேட்டுக் கொண்டு போக

அதிபன் மனக் கண்ணில் முன்பு அவள் அந்த வீட்டை தன் கைகளால் ஏதோ பொக்கிஷத்தை தடவுவதைப் போல் தடவிப் பார்த்த கோலம் ஞாபகம் வருக்கிறது….

சே….கடைசியில் எல்லாம் இதுக்குத்தானா???? என்ன நாடகம்..?????

 அன்னைக்கும் இவன் கார்ல அப்பாவி மாதிரி நடிச்சுத்தான் இவன் மோதிரம், அவன் அம்மா செயினையெல்லாம் திருடிட்டா….இன்னைக்கு ஏதோ உருகி உருகி உதவிக்கு வந்து, பெருசா தியாகமெல்லாம் செய்ற மாதிரி சீன் போட்டு……இவன்ட்டயே இந்த சொத்த திருட வழி கேட்கிறா…… ஈ விசா அவ பார்த்துப்பாளாம்……. அது வாங்கிற ஐடியா இருந்தா தானே இவன்ட்ட கேட்பா….. சொத்தைப் பத்தி மட்டும் இவன்ட்ட கேட்பாளாம்…..இங்கயே இருக்கப் போற மாதிரி கதை சொல்லி இவன நம்ப வச்சு… சொத்தை அடிச்சுட்டு ஓடவா? இவன் அவளிடம் இளகுகிறான் என்றதும் எவ்வளவா நாடகம் ஆடுது இந்த கிரிமினல் கோழி…

“இங்க பாரு அனு….நீ தலை கீழ நின்னாலும் நீ சொல்ற லேண்ட்….இந்த வீடு எதுவும் உன் கைக்கு வரவிடமாட்டேன்….  இது எல்லாத்தையும் எனக்குன்னு எழுதி வச்சுட்டு போய்ருக்காங்க பூங்காவனத் தாத்தா….அதான் உன் கனி ஆன்டியோட மாமனார்…. …. நீ என்ன ட்ராமா போட்டாலும்…எப்டில்லாம் சென்டிமென்டா பேசினாலும்….. அதுல இருந்து ஒரு செங்கல்லை கூட தரமட்டேன் உனக்கு …….. நீ சொல்ற கனி ஆன்டி நிஜத்துலயே இருந்தாங்கன்னா….அவங்கள பத்தி டீடெய்ல்ஸ் கொடு…..நானே யூஎஸ் போய் அவங்களை கூட்டிட்டு வந்து எப்டி பார்த்துகிடனுமோ  அப்டி பார்த்துக்கிறேன்….ஆனா அவங்க பேர்ல கூட ப்ராப்பர்டிய மாத்தி தரமட்டேன்…… அவங்கள ஏமாத்தி பிடுங்கலாம்னு கனவு கண்டுகிட்டு அலையாத…..ஒழுங்கா ஊர் போய் சேர வழியப் பாரு…....” அவனுக்குள் அள்ளி எரிந்த அத்தனை கோபம், ஏமாற்றம் எல்லாவற்றையும் இதழுக்கும் பல்லுக்கும் இடையில் அடக்கி…… எத்தனை கோபம் வந்தாலும்….ஏனோ அவள் பயந்து நடுங்கி முழித்த முழியின் ஞாபகத்தில் அதை அடக்கி…..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.