(Reading time: 22 - 43 minutes)

வர்கள் கிளம்பவும் அவர்களுடன் சேர்ந்து நடக்க தொடங்கி இருந்த அபயனின் காதில் இது விழாமல் இருக்க அவன் என்ன காதை கடனுக்கு அடகு வச்சிருந்தானாமா என்ன?

“ஹேய்….அண்ணி வந்திருக்காங்களா….” அவனது கேள்வியில் அல்டாப்பு பல்ப் பாவம் கொடுத்தது இப்ப ரெஜினா….’ அண்ண்ணியா???....இதெல்லாம் நீ முதல்லயே சொல்ல மாட்டியா தம்பி….’ அப்படியே அசையாமல் நின்று போனாள் அவள். ‘அட ஆதங்க சக்கரவர்த்தி ரெஜினா…..இப்படி நிலுவ போட்டு கொடுத்திட்டியே நீ….’

இதுக்கு மேல ஓடி ஓடி ஒளிஞ்சு மட்டும் என்னவாம்…..பவிஷ்யாவும் நின்றுவிட்டாள். ஒரு சொய்ங் பாவத்துடன்…. சுத்தமா சொதப்பிட்டியே ரெஜி….

“அப்ப அந்த ஃபார்ம் ரோட்ல போயிருக்காங்கன்னு சொன்னீங்களே அது அண்ணியா….? ஒன்னும் பயப்படாதீங்க…..யவி அண்ணா அங்க தான் இருக்கான்…..அவன் கூட ஃபார்ம்குள்ள போயிருப்பாங்களா இருக்கும்…. நான் அந்தப் பக்கம் போய் பார்த்தேன்…ரோட்ல யாரும் இல்ல…..” இது அக்கறையான விளக்கம் தான் அபயனைப் பொறுத்தவரை….. ஆனால் பவிஷ்யாவுக்கோ கடவுளே கடவுளே என்றிருந்தது.

பவிஷ்யாவை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிவிட்டு, அவன்  அவள் காட்டிய திசைகளில் ஒரு ரவுண்டு அவள் சொன்ன ரெண்டு பொண்ணுங்களை தேடிச் சென்றிருந்தான். அங்கு தான் அவன் ஒரு சுவர் மேல் ஏறி நின்று வேஷ்டியை கையில் வைத்து நாய்க்கு வெள்ளைக் கொடி ஆட்டிக் கொண்டிருந்த ரெஜினாவைப் பார்த்தது.

அவனைப் பார்க்கவும் வாலாட்டிக் கொண்டு வந்த நாய்களை சமாளித்து அனுப்பிவிட்டு……அவளை ஹாஸ்பிட்டலுக்கு வர வழி சொல்லிவிட்டு வந்திருந்தான். அடுத்த பொண்ணை தான் அவன் சென்ற வழியில் காண முடியவில்லையே…..

இப்பொழுது பவிஷ்யா முழிக்கும் முழியில் இவனுக்கு சிரிப்பும் வருகிறது…பரிதாபமாயும் இருக்கிறது….. அவள் ரகசியம் இவனுக்கு தெரிந்துவிட்டதற்கா இந்த முழியும் இத்தனை பாடும்….

“நான் ஒன்னும் இதெல்லாம் தப்பா நினைக்க மாட்டேன் பவி…..மத்த யார்ட்டயும் சொல்லவும் மாட்டேன் ஓகேவா…..அவங்க என் அண்ணி….எப்ப யவிக்கு அவங்கன்னு நிச்சயம் ஆச்சுதோ அப்பவே அவங்க எங்க வீட்டுப் பொண்னு…..யார்ட்டயும் எதுக்காகவும் விட்டுகொடுத்துட மாட்டேன்……” அருகில் நின்றவளை கண்ணோடு கண் பார்த்து காதல் புனலாய்….  நீ என் வீட்டுக்கு வந்தாலும் அப்படித்தான் பார்த்துப்பேன்…. என அவள் உள் உயிர் நனையும் வண்ணம் இவன் சொல்ல….பவிஷ்யாவிற்குள் காந்தப் புலம் கண்ணெதிரில் நிற்பவன் புறமாக….மீண்டுமாய் மெய் மறந்த நிலை….

ஆனால் ரெஜினா முழு நினைவில் நிற்கிறாளே…… அவளுக்கு அபயனால் நிலுவுக்கு ப்ரச்சனை வராது என்று ஒரு பக்கம் புரிகிறதென்றால்…..கண் முன்னால் காதலுக்குள் விழுந்து கொண்டிருக்கும் தோழியின் நிலையும் புரியாமல் இல்லை…..

வாய்விட்டு விசிலடிக்கலாம் போலிருந்தது அவளுக்கு….. சந்தோஷம் அதிகமானால் ரெஜியின் வாய் முதலில் செய்யும் செயல் அதுதான்…….’ஆனா இங்க வச்சு விசில் அடிச்சா இமேஜ் இன்னுமா டேமேஜ் ஆகிடுமே…..’

அவசரமாக அபயனை மீண்டும் ஒரு முறை ஏற இறங்க பார்த்தாள் ரெஜினா….’ஓகே ஒரே வீட்ல நமக்கு ரெண்டு அண்ணாஸ்….. பவிக்கு படு பெஃர்ஃபெக்ட் பேர் இவங்கதான்…. அதுவும் நிலுவோட வீட்டுக்கே பவியும்…..ஹையோ செம ஜாலியா இருக்கும்…..சரி நம்மால ஆன நல்லகாரியமா இவங்கள சேர்த்து வைக்க வழியப் பார்ப்போம்…..பவி ஒரு பேக்கு……சூதனம் போதாது….. மாட்டிகிட்டு முழிக்க மட்டும் தான் அவளுக்கு தெரியும்…..காப்பாத்த நாமதான் எதாவது செய்யனும்….’ நாலையும் யோசித்து நச்சுன்னு முடிவெடுத்த ரெஜினா அடுத்து என்ன செய்யனும் என்பதையும் சொன்னாள்.

“ ஹேய் பவி இந்த ஹாஸ்பிட்டலைப் பார்த்தியா ரொம்ப நல்லா இருக்குல்ல…..பேசாம இங்கயே வந்து ஜாய்ன் பண்ணிடேன்….ப்ராக்டிஸ்காக ஹாஸ்பிட்டல்ல ஜாய்ன் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தல்ல…” அவள் சொன்னது என்னமோ பவியை கூப்பிட்டுத்தான்,……ஆனால் இது அபயனுக்கான கேள்வி

பவி இங்க வர உங்களால ஏற்பாடு செய்ய முடியுமா ? என்பது தான் கேள்வியின் உள் அர்த்தம்.

அது அபயனுக்கும் புரியாமல் இல்லை….அவனும்தானே பவிஷ்யாவை பார்வையில் வைத்துக் கொள்ள வழி தேடிக் கொண்டிருந்தான். அவனும் இதைத்தான் யோசித்திருந்தான்……ஆக பாவியை ஒத்துக்கொள்ள வைக்க உள்நாட்டு சப்போர்ட் இருக்குதுன்னு இப்ப இவனுக்கு தெரியுது….. குட்.

நன்றியாய் ஒரு பார்வை ரெஜியைப் பார்த்துவிட்டு

“இந்த ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்லாம் எங்க அதி அண்ணாதான் பார்த்துகிறான்….அவன்ட்ட சொல்லி நான் அரேஞ்பண்றேன்….உனக்கு ஓகேவா பவி…..?” இவளைப் பார்த்து நேரடியாக கேட்டான்.

ரெஜியின் பேச்சில் தான் ஓரளவு தரையை தொட்டிருந்த பவி பரக்க பரக்க முழித்தாள்.

“இங்க…இது அப்பா ஒத்துப்பாங்களான்னு…..அதோட….” பவிஷ்யாவிற்கு எதையும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.