(Reading time: 22 - 43 minutes)

நிலவினியோ எதிரில் நின்ற யவ்வனிடம் என்ன சொல்லவென முழித்துக் கொண்டிருந்தாள்…..

“என்ன சாப்டுறன்னு கேட்டேன்…..காஃபியா….டீயா….? இது லன்ச் டைம்ன்றதால வீட்ல இருந்து சாப்பாடும் வருது…..உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் அங்க அபை கூட சாப்டுறுவாங்க….” யவ்வனின் இந்த கேள்விகுத்தான் பதில் சொல்லாமல் முழித்தாள் அவள்.

“ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்க சாப்பாடு சாப்டு வினி….” இறுதியில் இவளுக்காக அவனே முடிவு செய்து கொண்டான்.

“இங்க யாரும் இல்லையா….?” தயங்கி ஒருவாறு கேட்டுவிட்டாள் அவள். ‘நான் தேடிவந்த மாடெல்லாம் எங்க போச்சாம்?’

“இந்த டைம்ல இந்த பக்கம் வேலை இருக்காது வினி…. உள்ள கொஞ்ச பேர் இருப்பாங்க…..” இவர்கள் இருந்த பக்கத்திற்கு எதிர் திசையை சுட்டிக் காட்டி சொன்னான்.

மாடுக்கு அங்க என்ன இருக்கும்….? அங்கு தெரிந்த கட்டிடங்களை வைத்து இவளால் எதுவும் யூக்கிக்க முடியவில்லை.

“மாடெல்லாம் எங்க இருக்கும்?” நேரடியா கேட்கிறதுதான் நல்லது…..கேட்டேவிட்டாள்.

“மாடா…..மாடு எதுக்கு இங்க?” என்று பதில் கேள்வி கேட்டான் அவன்…..

“அப்போ…? பண்ணைல மாடு இருக்கும் தான?”

மாடா என்றவன் இப்பொழுது சற்று வாய்விட்டு சிரித்தான்…. “என்னைப் பத்தி எதுவுமே தெரியாம……” என ஆரம்பித்தவன்

“இது ஷ்ரிம்ப் ஃபார்மிங் ஹவுஸ்……இறால் பண்ணை…..மாட்டுப் பண்ணை இல்லை….” அவன் சொல்ல சொல்ல அவள் மூக்கில் போய் அதுவாக உட்கார்கிறது அவளது கை. ‘டேய் இப்டியா மூக்க உடைப்ப……???!!!’

‘உன் மாட நம்பி நான் என்ன ப்ளான்லாம் போட்டேன்…..என் ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும் இந்த இறால் பண்ண கதை தெரிஞ்சுதோ…… இனிமே இறால பார்க்கப்பல்லாம் என்னைதான் ஃப்ரெய் பண்ணுவாங்க…..நாய் மெகா பல்ப்னா இறால் ஜிகா பல்ப் போலயே’ மாட்டிகிட்டவ போல இவள் பேந்த பேந்த முழிக்க

“நெக்‌ஸ்ட் டைம் நம்ம மேரேஜுக்கு பிறகு இங்க வர்றப்ப ஃபார்ம சுத்தி பார்க்கலாம்….அப்போ புரியும்….இப்ப அங்க ஆட்கள் இருப்பாங்க…..தேவை இல்லாத ப்ரச்சனை” ஏதோ இறால் பண்ணைனா என்னன்னு புரியாமத்தான் இவள் முழிப்பது போல் விளக்கம் சொன்னான் அவன்.

இவளுக்கோ இப்பொழுது எல்லாம் மறந்து போக…..’நம்ம மேரேஜுக்கு பிறகு இங்க வர்றப்ப….’என்ற அவன் பதத்தில் அவள் அடி வயிற்றில் அழகாய் அள்ளி விரிந்து பூக்கிறது அவன் வாசனை. சின்ன  சின்னதான ஜரிகை வேலை செய்த சிவப்பு நிற புடவையில் இவள் அவன் கையோடு கை கோர்த்து இந்த ஃபார்மை சுற்றி வருவதாய் விரிகிறது ஒரு காட்சி அக கண்ணில்….  

அதற்கும் மேலாக வந்த காட்சியை வெறுக்கவோ அருவருக்கவோ கூட முடியவில்லை அவளால்  இப்பொழுது…..அவளறியா சுகநதி ப்ராவகம் அவள் உள்ளோடு…..அவன் முகத்திலிருந்து பார்வையை தாழ்த்திக் கொண்டாள்….

அடுத்தும் அவளை  தன் ஆஃபீஸ் ரூமில் காத்திருக்க சொல்லிவிட்டு….வெளிய வச்சே சாப்பாடை வாங்கிட்டு வந்துடுறேன் என அவன் கிளம்பிப் போன போதும்….அப்படி அவன் இல்லாத நேரத்தில் இவர்கள் இருவருமாக இருக்கும் ஃபோட்டோவை அவன் டேபிள் மீது பார்த்த போதும்…..அவன் டேபிள் மீதிருந்த லெட்டர் பேடில் வினி வினி என அவன் கையால் எழுதிப் பார்த்திருந்ததைப் பார்க்கும் போதும்…..அவளுக்குள் சுக ப்ராவகம் கூடிக் கொண்டு போனதே தவிர பயப்பட வேண்டும் என்ற ஞாபகம் வரவில்லை…

அதன்பின் முதன் முறையாக அவனும் அவளுமாய் ஒரு சாப்பாடு….. அவள் தான் இருவருக்கும் பரிமாறினாள்….. எந்த ஸ்கூல்ல படிச்ச…. என்ன சாப்பாடு பிடிக்கும் என்ற சின்ன சின்ன இயல்பான பேச்சுகளுடன் போனது சாப்பாட்டு நேரம்…..

இதற்கு மேலும் இவளால் இந்த கல்யாணத்தை…. இவனை… வேண்டாமென்று சொல்ல முடியுமா? என்ற மன நிலையில் தான் அவள் அன்று விடை பெற்றாள்…..ஆனால் அவன் தான் அதை புரியாமல் போனானோ?…..அவன் சுயரூபத்தை காட்டிவிட்டான் என்றே நினைத்தாள் நிலு அடுத்த நாள் அவன் அனுப்பி இருந்த புகைப்படங்களைப் பார்த்து…..அதை வைத்து அவன் மிரட்டி இருந்ததைப் படித்து……அதற்கு மேல் மறுக்க எந்த வழியும் இன்றி அடுத்த 20 ஆம் நாள் வீட்டில் குறித்த நேரத்தில் கோலாகலமான வைபவத்தில் யவ்வனின் மனைவி ஆனாள் நிலவினி.

தொடரும்!

Episode # 08

Episode # 10

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.