(Reading time: 21 - 41 minutes)

வள் அழைத்த மறுகணம் அந்தப் பக்க போனில் ‘தேவி, ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா’, என்ற ரிங்டோன் ஒலித்தது.  கடுப்பான தேவி, அங்கிருந்து வந்த காதலான ஹலோவிற்கு கடுப்பான ஒரு ஹலோவை கடித்துத் துப்பினாள்.  தேவியின் குரலிலேயே அவளின் கோவத்தை அறிந்த வரதன் அந்தப் பக்கம் தன் தங்கையின் மகன் ஏதோ வில்லங்கம் பண்ணி இருக்கிறான் என்று  தன் மனதிற்குள்  சிரித்துக் கொண்டார். 

“ஹலோ தேவி நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது.  ஒரு நிமிஷம் வெய்ட்டீஸ் செல்லம். நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக்கறேன்.  அடிக்கற வெயிலுக்கு மழை பெய்ஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்ன்னு இப்போத்தான் நினைச்சேன்.  அதுக்குள்ள நீ போன் பண்ணிட்ட.  இந்த மாதிரி அதிசயம் எல்லாம் உலகத்துல நடக்கும்போது கண்டிப்பா மழை பெய்யும்ன்னு ஒரு ஞானி சொல்லி இருக்கார்”, தேவியைப் பேச விடாமல் தொடர்ந்து மதி கடலை போட, தேவியின்  கடுப்பு உச்சநிலைக்கு போனது.

“உங்க உளறலைக் கொஞ்சம் நிறுத்தறீங்களா.  வரதன் சார் ஒரு கேஸ் விஷயமா பேச உங்களை வீட்டுக்கு வர முடியுமான்னு கேட்டார்.  கண்ட கருமத்தையும் பேசாம கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.  அப்பறம் நீங்க ஒரு ACP.  அந்த போஸ்ட்க்கு தகுந்தா மாதிரி ரிங்டோன் வைங்க”

“என்ன தேவி இது, நான் ஏதோ என்னோட இத்தனை வருஷக்  காத்திருப்புக்கு மனம் இறங்கி, என் லவ்வை அச்செப்ட் பண்ணதான் போன் பண்றேன்னு நினைச்சேன்.  கடைசில இப்படி ஏமாத்திட்டியேம்மா,  ஏமாத்திட்டியே.  என்ன சொன்ன, என்ன சொன்ன…. கருமாந்திரமா, காதல்மா காதல்.  அப்பறம் என்ன சொன்ன, ரிங்டோன் மாத்தணுமா.  போலீஸ்ன்னா அவனுக்கு லவ்வே வரக்கூடாதா.  அதுவும் நான் எட்டு  வருஷமா லவ் பண்றேன்.  எனக்கு அந்த லவ்க்கு ஏத்தாமாதிரி ரிங்டோன் வைக்கக் கூட உரிமை இல்லையா.  போலீஸ்ன்னா வெறும் சிங்கம், சிங்கம்ன்னு அந்த ரிங்டோன்தான் வைக்கணும்ன்னு உனக்கு யார் சொன்னா.  சரி விடு.  சின்னப் பொண்ணு தெரியாம பேசிட்ட.  நான் நேருல வந்து  எட்டு வருஷமா லவ் பண்றவனுக்கு,  இன்னும் என்ன எல்லாம் பண்ண ரைட்ஸ் இருக்குன்னு டீடைல்லா சொல்றேன்.  ஒரு அரை மணில வரேன்னு மாமாக்கிட்ட சொல்லு, இப்போ உன்னோட இந்த மாமா போனை வைக்கறேன் செல்லம்”, என்று கூற, தேவி இந்த இம்சை வேறு வந்து வேண்டாததை பேசி கழுத்தறுக்குமே என்று மதி  போனில் விட்ட ஜொள்ளில் நனைந்த காதைத் தேய்த்தபடியே  கவலைப் பட ஆரம்பித்தாள்.

டுத்த அரை மணியில் வக்கீலின் வீட்டை ஸ்ரீதரும், அவன் தந்தையும் அடைந்ததும் அவர்கள் அங்கே கண்டது அழுதழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த சாவித்ரியையும், ரூபாவையுமே.  இவர்கள் இருவரையும் பார்த்ததும் இன்னும் அவமானத்தில் கூனிக் குறுக ஆரம்பித்தனர் இருவரும்.

அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட ஸ்ரீதரின் தந்தை, “இங்க பாரு தங்கச்சி, எதுக்கு இப்போ இப்படி அழுதுட்டு இருக்க,  நாங்க எதுவும் கம்ப்ளைன்ட் கொடுக்கலை,  உன் புருஷனை அவன் போட்ட  கேஸை  மட்டும் வாபஸ் வாங்க சொல்லு போதும்.  உன் மூஞ்சிக்காக நடந்த எல்லாத்தையும் மறந்துடறோம்”, என்று கூற ஸ்ரீதர் தன் தந்தையை மறுத்துக் கூற வந்தான். 

“ஐயோ அண்ணே, மேல மேல நல்லது பண்ணி என்னைக் குறுக வைக்காதீங்க.  நீங்க இத்தனை நல்லவங்களா இல்லாம  இருந்து அப்போவே அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கக் கூடாதா, விமலா  மேல தப்பு செய்யாமயானும் தடுத்து இருக்கலாம்”, போதை மருந்தே பெரிய தப்பு, அதைவிட பெரிதாக அப்படி என்னத் தப்பை அந்த விமலா செய்தாள் என்று பார்த்தான் ஸ்ரீதர்.

“சாவித்ரிம்மா, அழாதீங்க.  அழறதால எதுவும் நடக்கப் போறதில்லை”, வரதன் கூறிக்கொண்டிருக்கும்போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் மதி.  வரதன் அவனைப் பார்த்து தலை அசைக்க, தேவியை சைட் அடித்துக்கொண்டே அவருக்கு பதில் தலை அசைப்பைக் கொடுத்தான் மதி.  தேவியோ ஜன்னல் வழியாக வெளியே பதித்த பார்வையைத்  திருப்பவே இல்லை.

“வாப்பா மதி.  அம்மா காலைல பேசும்போது,  நீ ரெண்டு வாரமா ஊர் பக்கமே வரலைன்னு சொன்னா.  என்னாச்சு”

“செம்ம வேலை மாமா.  அதான் போகல.  அவங்க மட்டும் இங்க வந்தாங்களா.  நானும் மூணு மாசமாக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.  கேட்டா மருமக வரட்டும் அப்பறம் வரோம்ன்னு சொல்றாங்க”, என்று தேவியைப் பார்த்தபடியே கூறினான் மதி.  தேவி ‘பாவம், அப்போ அவங்க  இனி சென்னைக்கே வர முடியாது’, என்று மனதிற்குள் நினைத்தாள்.

“நான் கேள்வி கேட்டா என்னைப் பார்த்து பதில் சொல்லணும் மதி.  சரி விடு, உன் பஞ்சாயத்தை அப்பறமா பார்க்கறேன்.  நான் இப்போ உன்னை வர சொன்ன விஷயத்தைப் பத்தி முதலில் பேசிடலாம்”, என்று கூறி அங்கிருந்த அனைவரையும் அறிமுகப்படுத்தி விட்டு, விமலா கலந்துக்கொண்ட டிவி நிகழ்ச்சியில் ஆரம்பித்து கடைசியாக  எடுத்த நிர்வாண போட்டோ வரை சொல்லி முடித்தார்.  அவர் கடைசியாக சொன்ன விஷயத்தைக் கேட்ட ஸ்ரீதர்க்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.