(Reading time: 15 - 30 minutes)

" ம்ம்ம்ஹ்ம்ம் இல்லையே !" திருதிருவென முழித்து கொண்டே தலையை இடத்தும் வலதுமாய் ஆட்டினாள்  தேன்நிலா ..

" நிஜமாவா சொல்லுற ?" என்று அவன் குறும்பாய் அவளின் விழி நோக்கிட ,

" வர வர இந்த மதிக்கு மதி ஓவரா மயங்கிடுச்சு .. மனசுக்குள்ள பேசிகிட்டாலும் கண்டுபிடிக்கிறான் திருடன் " என்று  புலம்பியவள் பார்வையாலேயே மலரை தேடி , அவரை கண்டதும்

" இதோ வரேன் அத்தை " என்று ஓடினாள் .. தன் தாயார் அவளை அழைக்கவே இல்லை என்று அவனுக்கு தெரியாதா என்ன ? " சரியான வாலு  " என்று வாய்விட்டு சொன்னவன் அதன்பின் காதலை மனதிற்குள் தள்ளி வைத்துவிட்டு பக்தியுடன் சன்னிதானத்தில்  நுழைந்தான் ..

சிந்தனை எல்லாம் வழிப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது என்ன நடக்கிறது என்பதை நோட்டம் விட்டு கொண்டே இருந்தாள்  .. மதியழகனின் குறும்பான பார்வைக்கும் அங்கு நடபதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அனைத்தும் எப்போதும் போலத்தான் இருந்தது .. மகளின் முகபாவங்களை பார்த்து கொண்டிருந்த மனோ அதற்கு மேல் தாங்க முடியாமல் ஆதரவாய் அவள் தோளில்  கை போட்டு கொண்டு பேசினார் ..

" பேபி "

" போங்கப்பா "

" என்னமா என் மேல கோவம் ?"

" பின்ன, நீங்க கூட ஏதோ  டிராமா போடுறிங்க இல்ல ? என்னைவிட இப்போ உங்களுக்கு மது பெருசா போயிட்டானா "

" ஷ்ஷ்ஷ்ஷ் .. என் பொண்ணு ரொம்ப புத்திசாலின்னு மார்தட்டி சவால் விட்டு இருக்கேன் பேபி .. இப்படி என்னை மண்டி போடா வெச்சுராத  .. நாம கோவில் போகலாம்னு முடிவு எடுத்தது உன் ப்ளான் தானே ? நீதானே மாப்பிள்ளை கிட்ட சொன்ன ? "

" ஆமா "

" அப்படி இருக்கும்போது எங்க மேல ஏன் கோபப்படுற ?"

" அத்தை மாமா எல்லாம் வந்துருக்காங்க .. மதி கிட்ட கேட்டால் குறும்பா சிரிக்கிறான் .. கல்யாணம்னு சொல்லுறான் " என்று சிணுங்கினாள் அவள் சலுகையாய்  ..என்னத்தான் தைரியமான பெண்ணாய் இருந்தாலும் , அப்பா கொஞ்சம் கொஞ்ச தொடங்கி விட்டால் எங்கு இருந்து தான் வருமோ இந்த பெண்களுக்கு சிறுபிள்ளைத்தனம் ! அவளின் சிணுங்கலும் , எதிர்பார்ப்பு கொண்ட பார்வையையும் ரசித்தார் மனோ ..

" ஓ ..அதுதான் விஷயமா ? நீ எங்களை ஏமாத்துற ! மாப்பிளை உன்ன ஏமாத்துறார் செம்ம ஜோடித்தான் நீங்க ரெண்டு பேரும் .. நீ மண்டைய போட்டு குழப்பிக்குற அளவுக்கு பெரிய விஷயம் ஒன்னும் இல்ல .. உன் அம்மா என்னபத்தி  ஏதோ  கெட்ட  கனவு கண்டு இருக்காள் , அதுல இருந்து மனசேசரி இல்லைன்னு புலம்பல் .. அதை இவ மாப்பிளை கிட்ட சொல்லவும் , நம்ம அம்மு பாட்டித்தான் இந்த கோவில் பத்தி  சொன்னாங்க  ..

இந்த கோவிலில் வந்து இன்னொருமுறை தாலி கட்டினால் ஏதோ  விசேஷமாம் ..எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை பேபி .. உனக்கே தெரியும் ! என்ன பொருத்தவரைக்கும் கடவுள் நமக்கு எதை எப்போ தர வேண்டுமோ அதை சரியாய் தருவார்ன்னு  நம்பிக்கை இருக்கு ! என்னால அவர்கிட்ட போயி இதை கொடு அதை கொடுன்னு கேட்க முடியாது .. அதே நேரம் உன் அம்மாவும் பாவம் .. அவ ரொம்ப பயந்து போயிட்டா ..அதான் அவளுக்காக இதுக்கு ஒத்துகிட்டேன் .. "

" ஓஹோ , அதான் மது இந்த கோவிலுக்கு உங்களை கூட்டிட்டு வர சொன்னானா ? சரி அத்தையும் மாமாவும் என்ன விஷயமாய் வந்தாங்க ?"

" அட நீதானேம்மா சீக்கிரமா திரும்பி இந்தியாவுக்கு வந்துருங்கன்னு அவங்களை கூப்பிட்ட அதான் வந்தாங்க .. !  அவ்வளவு தான் !" என்றார் மனோ அசால்ட்டாய் ..

" ச்ச , இந்த மதி லூசு நம்மளை கொஞ்ச நேரத்தில் என்னென்னமோ நினைக்க வெச்சுட்டானே !" என்று அவள் வசைப்பாட , அவளின் இரண்டாவது மனமோ

" அவன் மீது தவறா ? அல்லது அவன் பேச்சினை தவறாய் புரிந்து கொண்டது உன் தவறா ?" என்று கேலி பேசியது ! " ஹும்கும் , சொந்த மனசே இவனுக்கு சப்போர்ட் பண்ணும்போது நாம எம்மாத்திரம் ?" என்று சரண் அடைந்தவள் , பதுசாய் மதியழகனின் அருகில் நின்று கொண்டான் .. பத்து நாட்களுக்கு பிறகு அவள் உணர்கிறாள் இந்த நிறைவை !

உண்மையில் இவன் தன்னில் பாதிதான் .. இவன் அருகில் இல்லாத இந்த நாட்கள் எவ்வளவு கொடுமையாய்  போனது ! என்னத்தான் அந்த காலத்து காவியநாயகியை  போல கண்ணீருடன் வளம் வராவிட்டாலும் அவளுக்குள் சுரக்கும்  இயல்பான சந்தோசம் , அவன் இல்லாத இந்த பத்து நாட்களில் மறைந்தே போயிருந்தது ..

" திருடன் " என்று மீண்டும் அவனை திட்டியவன் , அதன் பின் மௌனமாய் இறைவனை வேண்டினாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.