(Reading time: 15 - 30 minutes)

1-60  (இதுதான் தலைப்பு )

1- உன் கரம் பிடித்த  நாள்

2- உனது அறை  நமது அறையான  நாள்

3- உன் தேவை உணர்ந்து சமைத்த நாள்

4- நீ தொலைதூர பயணத்திற்கு போக முடிவெடுத்த நாள்

5- உன்னை ரகசியமாய் படம் பிடித்த நாள்

6- நீ என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று அடம்பிடித்த நாள்

7- உன் மார்பில் சாய்ந்து பிரியாவிடை கொடுத்த நாள்

8- நீ இல்லா அறையில் எனை தொலைத்த நாள்

9- உன் குரலை நினைவு கூர்ந்து சிரித்து கொண்ட நாள்

10- உன்  குறும்பான பேச்சினை ரசித்த நாள்

11- உனக்காய் சிந்திக்க தோன்றிய நாள்

12- உன்னிடம் உண்மையை மறைத்த நாள்

13- உன்னிடம் விரும்பியே மாட்டிக்கொண்ட நாள்

14- உன்னை பற்றி கனவு கண்ட நாள்

15- உன்னுடனான எதிர்காலத்தை ஒத்திகை பார்த்த நாள்

16- உறக்கத்திலும் உன் பெயர் சொன்ன நாள்

17- எதிர்பாரா வேளையில் எனை தேடி நீ வந்த நாள்

18- உன்னோடு உரிமையாய்  ஊர் வந்த நாள்

19-  உனக்கான என் பரிசை தந்த நாள்

20- இருவருமாய் ஒரே வீட்டில் குடி வந்த நாள்

21- உன்னோடு நிழல் போலே நின்ற நாள்

22- உன் தேவையை அறிந்து கொள்ள முயன்ற நாள்

23- அருகில் இருந்தும் உன்னை தேடிய நாள்

24- பிரிவெல்லாம் கண்ணீராய் வெடித்த நாள்

25- சிணுங்கலுடன் சண்டை போட்ட நாள்

26- வெறுமையாய் கரைந்த நாள்

27- உன் வரவுக்காக காத்திருந்த நாள்

28- வெகு அருகில் உன் விழிகளில் எனை கண்ட நாள்

29 - சோகம் எல்லாம் மேகமாய் மறைந்த நாள்

30 - நமக்காக நாம் என உணர்ந்த நாள்

இப்படியாய் இன்னும் 30 நாட்களை அவனது ஸ்டைலில் ஒரே வரியில் எழுதி இருந்தாள்  மித்ரா .. ஒவ்வொரு வரிகளை படிக்கும்போது அவர்கள் கடந்து வந்த நாட்கள் கண்முன் வந்திட , அவளை புன்னகையுடன் பார்த்தான் ஷக்தி ..

" ஹே அத்தை பொண்ணு என்னடீ இதெல்லாம் "

" இன்னும் புரியலையா மாமா ? நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆச்சு ..ஹேப்பி எனிவர்சரி " என்றவள் அவன் கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு  தோள்  சாய்ந்தாள்  ..

" ஹே ..என்ன இதெல்லாம் ?" என்றவனுக்கு இன்னும் வார்த்தை வரவில்லை .. ஆனால் வார்த்தையால் சொல்ல முடியாததை தனது அணைப்பினால் கூறினான் ..அவன் தோளில்  லாவகமாய் சாய்ந்தபடி நடந்தாள்  மித்ரா ..

" நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருந்துருக்கும் தெரியல மாமா .. உயிரோடுதான் இருந்துருப்பேன் ..ஆனா, அதில் உயிரோட்டமே இருந்துருக்காது .. நம்ம கல்யாணத்தை பொறுத்தவரை , நம்ம அப்பா அம்மாவில் தொடங்கி மதி அண்ணா வரைக்கும்  எல்லாருக்கும் நான் கடமை பட்டு இருக்கேன் ..  ஒருவேளை இவங்க எல்லாம் இல்லன்னா " என்று அவள் பேச்சை நிறுத்தி விழி மூடி நடுங்கிட , அவள் நெற்றியில் இதழ் பதித்து ,

" அப்பவும் நான் வந்திருப்பேன் மிது " என்றான் ஷக்தி மிருதுவாய் .. எப்படி ? என்று  அவளும் கேட்கவில்லை ..அவனும் விளக்கம் அளிக்கவில்லை ..

ஆனால் இருவரின் விழிகளிலுமே நேசம் நிறைந்திருந்தது ..

" ஐ லவ் யூ மாமா " என்றாள்  மித்ரா .

" ம்ம் மீ டூ " என்று சிரித்தான் ஷக்தி ..

" இதை கூட முழுசா சொல்ல மாட்டியா ? இம்சை ! போடா " என்று அவனை திட்டியவள் , அவனுக்கு கேக் ஊட்டி விட்டு அடுத்த பரிசை கொண்டு வந்தாள் ..

" என்ன டி பண்ணிட்டு இருக்க நீ ? ரெண்டு மாசத்துக்கு இவ்வளவு சீன் ஆ ? அப்போ 60தாம் கல்யாணத்துக்கு என்ன பண்ணுவியாம் ?"

" அப்போ நான் ஒன்னும் பண்ண மாட்டேன் பா " என்று கூறியவள் சிறிது இடைவெளி விட்டு "அப்போ எனக்கு வயசாகிடும் ல மாமா ,அதுனால நம்ம பேரப்பிள்ளைங்க  கிட்ட சொல்லி பரிசு ரெடி பண்ணுவேன் " என்றவள் விழிமின்ன கூறவும் களுக்கென சிரித்தவன்  அவள் தலையில் எப்போதும் போல செல்லமாய் தட்டினான் ..

" சரி கிப்ட பிரி " என்று அவள் கொடுக்க , அது ஒரு போட்டோ ப்ரேம்  என்று நன்றாக தெரிந்தது ..அதை திறந்து பார்த்தான் ஷக்தி.. அவனும் அவளும் மணமேடையில் அமர்ந்திருக்க , நம்ம கார்த்திக் புலம்பிக்கொண்டே எடுத்த ஜோடி புகைப்படம் அது ..

தன்னவள் தான் மணமகள் என்ற சந்தோஷத்தில் ஷக்தியும்  , ஷக்திதான்  மாப்பிளை என்ற புலங்காகிதத்தில்  மித்ராவும் விண்ணில்  பறந்த  நொடிகள் அந்த புகைப்படத்தில் அழகாய் தெரிந்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.