(Reading time: 15 - 30 minutes)

31. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

"யாருக்கு " என்று குழப்பமாய் தேன்நிலா  அவனை பார்க்க , மிகவும் பொறுமையாய் அவளின் கற்றை கூந்தலை ஒதுக்கி விட்டு , தன்னவளின் முகத்தை ரசித்தான் மதியழகன் ..

நிலவடி நீ  !

மதிகெட்டு நான் மயங்கிட என்னை மயக்கிய நிலவடி நீ !

Ithanai naalai engirunthai

தறிகெட்டு என் காதல் தள்ளாட என்னை தூண்டிய நிலவடி நீ !

காதலில் நான் கசிந்துருக என்னை கரைத்த நிலவடி நீ !

உயிரே நீ என சரண் புகுந்துவிட என்னை உலுக்கிய நிலவடி நீ !

தேகமெங்கும் நேசம் நிறைந்திட தேனாய் இனிக்கும் நிலவடி நீ !

சிங்கமாய் நான் பதுங்கிட மானாய் மிரட்டும் நிலவடி நீ !

கண்ணியம் நானும் காத்திட , எனை கள்வனாக்கும் நிலவடி நீ !

காலங்கள் உருண்டோடிட  என் வானில் தேயாத தேன்நிலவடி நீ !

கற்றை கூந்தலில் ஒதுக்கியவன் அவள் கன்னத்தை உள்ளங்கை வைத்தபடி மனதிற்குள் தோன்றிய கவியை மனதிற்குள்ளேயே ரசித்து கூறி கொண்டான் .. பின்ன , நம்ம நிலா இருக்குற டென்ஷன்ல இப்படி " நிலவடி நீ "ன்னு மதி  பேசிட்டு இருந்தால் , இந்நேரம் காரை விட்டு இறங்கி போயிருப்பாளே நிலா !  இதோ இப்போதும் கூட , இவன் பதில் கூறப்போவதில்லை என்ற சலிப்பில் அவள் காரை விட்டு இறங்க முயல

" நம்மக்குத்தான் கல்யாணம் குட்டிமா " என்றான் மதியழகன் .. அவன் ஏதோ  தனக்கு புரியாத மொழியில் பேசிக்கொண்டிருப்பது போல , முகத்தை சுருக்கி கேள்வியுடன் பார்த்தாள்  அவள் ..

" என்ன மது சொல்ற ?"

" நமக்குத்தான் கல்யாணம்னு சொல்லுறேன் "

" லூசாகிட்டியா நீ ? நம்ம கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் ?" அதை கேட்கும்போதே அவள் கன்னங்கள் சிவந்தன .. அதுக்கு பேரு வெட்கம்னு மதி நினைத்தால் அவன் வாழ்க்கை துக்கம் ஆகிவிடுமே !

" ஆஹா , ராட்சசிக்கு கோபம் வருது .. இப்போ வா டா போடான்னு பேசுவாளே " என்றவன் மைண்ட் வாய்சில் நினைக்கும்போதே

" டேய் , கேள்வி கேட்டுட்டே இருக்கேன் , நீ என்னடான்னா கண்ணை திறந்து வெச்சுகிட்டே கனவு காணுறியா  ? அன்னைக்குத்தானே , கல்யாணம் எல்லாம் இப்போதைக்கு வேணாம்னு பேசிகிட்டோம் ..நீயும் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டின , இப்போ என்னடான்னா ,அத்தை மாமாவை கூட்டிட்டு வந்து என் வாய மூடலாம் பார்க்குறியா ?"

" .."

" ரொம்ப மோசம் மது நீ .. அப்படி என்ன அவசரம் ? ஷக்தி சங்கு கிட்ட கூட சொல்லாமல் , உன் சிங்கப்பூர்  குட்டிச்சாத்தானுக்கு தெரியுமா ? இல்ல அவ கொடுத்த ப்ளான் தானா இது ? இதுக்குத்தான் நீ சிங்கப்பூர் போனியா ? இது பாரு மது , யா நான் உன்னத்தான் லவ் பண்ணுறேன் ..நீ தாண்டா என் வாழ்க்கை ..அதுக்காக என் குறிக்கோள் எல்லாத்தையும் தூக்கி போட்டுடு உடனே கல்யாணம் பண்ணிக்க முடியாது .. லவ் சொல்றதுக்கே செம்மைய சொதப்பின ஆளாச்சே நீ , இப்போ கல்யாணத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு வேகம் ?  " என்றவள் பேசிக்கொண்டே போக , " அய்யயோ இவ என்ன ஹிஸ்டரியை எல்லாம் கிளருரா ? இதுக்கு மேல விட்டா , நமக்கு டப்பா டான்ஸ் ஆடிடும்"  என்று  நினைத்தவன் அவள் எதிர்பாராத நேரம் , அவளின் தேனிதழோடு  இதழ் பதித்தான் ..

" .."

" ஹப்பாடி , உன்ன வாய மூட வைக்கிறது இவ்வளவு கஷ்டமா குட்டிமா ? ஆனா சுலபமாகவும் தான் இருந்தது " என்று  கண் சிமிட்டினான் மதியழகன் .. ஏற்கனவே சிவந்திருந்த அவள் கன்னங்கள் இப்போது ரத்த சிவப்பாய் மாறிவிட , இந்த முறை வெட்கத்தை மறைப்பதற்காக இன்னும் முறைத்தாள்  அவள் ..

" ஒன்னு தலைக்குமேல தூக்கி வைக்கிற , இல்லன்னா பட்டுன்னு கீழ போடுற ? உன் அத்தான் பாவம் இல்லையா ஹனிமூன் ?" என்றான் அவன் சோகமாய் ..

" நீயா பாவம் " என்று அவன் தலையில் குட்டு வைக்க தயாரானவள் கடைசி நேரத்தில் மனதை மாற்றிக்கொண்டு அவன் கேசத்தை கலைத்து விட்டாள் ..

" எனக்கு உன்ன பத்தி தெரியும் மது கண்ணா .. நேரடியா கேள்வி கேட்டால் நீ பதில் சொல்ல மாட்டியேன்னு  நினைச்சு கொஞ்சம் சீன் போட்டேன் ..பட் நீ மசியவே இல்லை "

" ஹும்கும் , ஆல்ரெடி  கைதியானவன் கிட்ட போயி அர்ரஸ்ட் வாரண்ட் நீட்டுறியே ! சரியான மொக்க பேபி நீ " என்று அவள்  கன்னத்தை கில்லியவன் , அப்போதும் எதுவும் கூறாமல் அவளை காரிலிருந்து கோவிலுக்கு கூட்டி வந்தான் .. கையை விட்டால் அவள் ஓடி விடுவாள் என்பது போல அவன் பிடித்திருந்த விதம் அவளுக்கும் பிடிக்கத்தான் செய்தது ..

" இவன் என்னவன் , நான் அவனின் சரி பாதி " என்று கர்வம் மனதிற்குள் எழ

" என்னமோ மதி இன்னைக்கு ஓவரா மயக்குறியே ! பேசாமல் இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா ?" என்று மனதிற்குள் கேட்டாள்  அவள் .. சட்டென நடையை நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் மதி ..

" குட்டிமா , ஏதாச்சும் சொன்னியா ? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.