(Reading time: 15 - 30 minutes)

வார்த்தைகள் கிடைக்காமல் " சூப்பர் டீ " என்று ஒரே வார்த்தையில் முடித்து கொண்டான் ஷக்தி ..

" சரி உனக்கென்ன வேணும் சொல்லு " என்று கேட்டான் அவன் ..

" புரியல .. "

" நான் உனக்கு ஒண்ணுமே தரலியே "

" அய்யே , இதென்ன பிசினசா மாமா ? நான் கொடுத்தா நீயும் கொடுக்கனுமா ? லூசு மாதிரி பேசாத "

" அய்யே , கேட்குறேன்ல ..சொல்லு என்ன வேணும் ?" என்றான் ஷக்தி ..

" என்ன கேட்டாலும் கிடைக்குமா ?"

" கொடுக்க முடிந்ததை இருந்தால் சரி "

" அப்போ , மீ டூ ன்னு சொல்லாமல் ஐ லவ் யூ சொல்லு " என்று அவள் கூறி கண் சிமிட்டினாள் ..

" உன்னை திருத்தவே முடியாது " என்று அவன் திரும்பி நடக்க , மித்ரா அசையாமல் அப்படியே நின்றான் ..

" பிடிவாதம் ..பிடிவாதம் ..அப்படியே அவ புருஷன் மாதிரியே இருக்கா " என்று மனதிற்குள் வர்ணித்தவன் , கையில் ஒரு  பரிசுடன்  அவள் முன் ஸ்டைலாய் நின்று

" மிது , ஐ லவ் யூ சோ மச் " என்றான் .. விழி விரிய , " மாமா என்னதிது ?" என்று கேட்டவள்  துள்ளி குதித்தாள் ..

" இது உனக்காக வாங்கின கிபிட் .. பட் இன்னைக்கு தரணும்னு ப்ளேன் பண்ணல .. " என்று உண்மையை ஒப்பு கொண்டான் அவன் ...

" உன் கிபிட் விட , நீ லவ் சொன்னதுதான் எனக்கு பெருசு " என்று காதலுடன் அவள் கூற

" அப்போ கிப்ட கொடு " என்றவன் கை நீட்ட அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு ஓடினாள்  மித்ரா .. ஓட்டத்தை நிறுத்திவிட்டு அந்த பரிசை திறக்க , அதில் ஒரு வக்கீல் கோர்ட் போட்டு கொண்டு ஒரு குட்டி பெண் நிற்க , அவன் அருகில் ஒரு குட்டி பையன் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போல  ஒரு சிலை இருந்தது .. அவளுக்காக கடை கடையாய்  ஏறி இறங்கி இந்த பரிசை வாங்கியிருப்பான் என்று பார்த்ததுமே தெரிந்தது ..

"ரொம்ப அழகா இருக்கு மாமா .. நீயே டிசைன் கொடுத்தியா ?"

" அதெல்லாம் சொல்ல முடியாது போடி "

" சொல்லாட்டி போடா " என்று அவன் கேசத்தை கலைத்து விட்டு ஓடியே போனாள்  மித்ரா ..

" ஹே நாளைக்கு உன் சீனியர் வாதாடுறத நீ வேடிக்கை பார்க்க போகணும் .. பொய் தூங்கு டி " என்று அவன் விரட்ட

" வேடிக்கை பார்க்க போறேனா ? டேய் நில்லு " என்று மித்ரா அவனை துரத்த வழக்கம் போல இருவரும் ஓடி பிடித்து விளையாட தொடங்கிட நாம  அவங்களுக்கு தனிமை கொடுத்து அடுத்த சீனுக்கு போயிடலாமா ?

மறுநாள் ,

ஷக்தி சொன்னது போலவே  சீனியர் பேசி கொண்டிருப்பதை கவனித்து கொண்டிருந்தாள் மித்ரா .. அவளையும் மீறி ஷக்தி அவளை கேலி செய்தது ஞாபகத்திற்கு வந்தது .. அன்றும் அவர்கள் கணித்தது போல அந்த கேஸ் போக்கு காட்டிட , சோர்வுடன் கிளம்பினாள்  மித்ரா .. இனியாவின் தந்தை இதெல்லாம் சகஜம் என்பது போல சிரிக்க

" வேடிக்கை பார்த்ததுக்கே இவ்வளவு பில் டப்பா டீ ?" என்று ஷக்தி கேட்பது போல அவளுக்கு தோன்றியது ..

" இந்த மாமா இன்னைக்கு ரொம்ப கண்ணுக்குள்ள நிற்கிறானே !" என்று நினைத்தவள் அவனிடம் சொல்லாமல் , அவர்களின் கடைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தாள்  ..

போகும் வழியில் ஒரு கோவில் தென்படவும் , ஏதோ  உள்ளுணர்வில் மித்ரா கோவிலுக்கு செல்ல , அதே கோவிலில் இருந்து  முகில்மதியும்  அன்பெழிலனும் வெளியே வந்தனர் .. முகில்மதியை  அங்கு பார்த்ததே அவளுக்கு அதிர்ச்சித்தான் இதில் தனது நண்பனும் அவள் அருகில் இருக்க இன்னும் அதிர்ச்சியானது ..இதைவிட பேரதிர்ச்சியாய்  எழில் முகில்மதியின் கைகளை உரிமையை பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க , நம்ம மித்ரா மேடம் என்ன பண்ணினாங்கன்னு அடுத்த வாரம் சொல்றேன் ..

தொடரும்

Episode # 30

Episode # 32

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.