(Reading time: 12 - 23 minutes)

வள் அப்படியே மயங்கி மீனாக்ஷி மேல் சாய்ந்தாள், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, என்ன செய்வது, பக்கத்திலிருந்த சொம்பிலிருந்து தண்ணியை எடுத்து தெளித்தாள், அவள் சுய நினைவுக்கு வந்தவுடன் அங்கிருந்தவர்கள், மீனாட்சியிடம் சொன்னார்கள் 'இந்த அம்மா டாக்டர் கிளினிக்கிலேயே இறந்து விட்டார்கள் அதான் நாங்கள் தூக்கி வந்தோமென்று'

மீனாக்ஷி, சிலைபோல் நின்று விட்டாள், அப்புறம் அங்கு நின்றிருந்த ஆட்டோக்காரர்கள் தான் அவளை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தார்கள், பிறகு அந்த ஆளுங்ககிட்டேயே எல்லா ஏற்பாடும் பண்ணுங்க என்னால் முடியாது என்றாள், சரிம்மா நாங்க பண்றோம் என்றான், அவன் தினமும் தன் டிபன் கடையில் சாப்பிட வருகிறவன் தான்,

அவள் விளக்கை ஏற்றிவிட்டு, சித்ராவைக் கவனிக்க சென்றாள், உனக்கு யாருக்கும் சொல்லி அனுபனுமா, என்று கேட்டாள்

'சித்ரா யாரும் இல்லை ஆண்டி,' என்று அழுதாள்,

'போனா போறது நான் இருக்கேனில்லே, கவலைப் படாதே,'

சித்ரா, ருத்ராவை நினைத்தாள் நம் குழந்தையைப் பற்றி உங்களிடம் நான் எப்படி சொல்வேன் என் அம்மா வேறு சென்னைக்கு போகதே என்று, நான் என்ன செய்வேன், அம்மா என்னை விட்டு போய் விட்டாயே,' என்று அழுதாள்

எல்லாம் முடிந்தது அவள் அம்மாவின் காரியம் எல்லாம் தானே செய்வேன் என்று அவளே செய்தாள்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

ராசுவின் ஒரு கூட்டுக் கிளிகள்... - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

வளுக்கு பேரு காலம் வந்தது மீனாக்ஷி ஆண்டி  நன்றாக பார்த்துக் கொண்டாள்,

அவளுக்கு நல்ல வலி எடுத்தது பக்கத்திலேயே இருந்த ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணார் மீனாக்ஷி ஆண்டி, இரண்டு மணி நேர போராட்டத்தில் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான், அப்படியே அவன் அப்பாவின் ஜாடையில், நல்ல அழகு, நீள, நீளமா விரல்களும், உருண்டையா தலையும், பெரிய கண்களும், ரொம்ப அழகாக இருந்தான்

ஒரு மாதம் ஆச்சு, மீனாக்ஷி கேட்டார், 'என்னம்மா சித்ரா நம் ராஜாக்கு என்ன பேர் வைக்கப் போறே,' என்று கேட்டார்

'ஆமாம் ஆண்டி, பேர் வைக்கணும் ஒரு நல்ல நாள் பாருங்க, நம்ம வீட்டு கடவுள் முன்னாடி, நம்ம ராஜாவுக்கு பேர் வைத்து விடுவோம் என்று அவள் சொன்னாள், கண்ணில் நீர் துளி, என் ருத்ரா இருந்தால், எவ்வளவு கோலாகலமாக கொண்டாடியிருப்பார், எவ்வளவு தாத்தாவும் கற்பகம் அம்மாவும் கொண்டாடியிருப்பார்கள், நீ நிஜமாகவே ராஜாதாண்டா கண்ணா, உன்னை உன் அருமையான உறவுகளிலிருந்து, உன்னை பிரித்துவிட்டேண்டா செல்லம், என்று கண்ணிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தது, ருத்ரா நம்ம காதலுக்கு, உங்களுக்கு என்னோட பரிசு நம்ம ராஜா குட்டி, கண்டிப்பாக ஒரு நாள் உங்களிடம் இவனை சேர்த்துடுவேன், என்னை மன்னிச்சுடுங்க,ருத்ரா என்று மனதிலேயே சொல்லிக் கொண்டாள், குழந்தைக்கு "ரூபேஷ்" என்று பேர் வைத்தாள், குழந்தையை கடையில் வைத்துக் கொண்டு கொஞ்ச கொஞ்சமாய் பெரிதாக ஆக்கினாள்,மீனாக்ஷி அம்மாவின் அம்மா இறந்த உடனே அவர்களும் இறந்ததினால், எல்லாம் அவளோடையதுதான், எல்லா பொறுப்பும் அவளுடையது தரமான சாப்பாடு கொடுத்து, நல்ல பேர் எடுத்தாள்,நல்ல லாபமும் வந்தது,

வள் பிள்ளை பத்து வயது ஆகிவிட்டது, ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான், கூடவே சாயந்திரம் ஸ்கூலிலிருந்து வந்தவுடன், ஹோம் வொர்க் பண்ணிண்டே, ஹோட்டலில் காஷ் ரிஜிஸ்டரில், உட்கார்ந்து அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுவான், அந்த அழகை எல்லோரும் ரசிப்பார்கள், அப்படிதான் ருத்ராவும், அந்த ஹோட்டலுக்கு வந்தான், அவன் உள்ளே நுழையும் போதே அந்த பையனைப் பார்த்து, அவன் துருதுருப்பு, அவன் ஜாடை எல்லாமே தன்னைப் போல இருந்தது, அவனுக்கு தான் சின்ன வயசில் இருப்பதை போல இருந்தான், அந்தக் குழந்தையுடன் பேசவேண்டும்போல் இருந்தது,

அவன் அருகில் போய், ' ஹாய்' என்றான்

நிமிர்ந்து பார்த்து ' ஹாய்' என்று திரும்பி சொன்னான், ரூபேஷ் கொஞ்சம் யோசித்தான், அவனை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது,

'உன் பேரென்ன,' என்று கேட்டான் ருத்ரா

' ஹாய், ஐ அம் ரூபேஷ், ரூபேஷ் நீலகண்டன்,' இப்ப ஷாக் ஆனது ருத்ரா, 'வாட், வேர் ஆர் யுவர் பேரெண்ட்ஸ்?'

' மே ஐ நோ தி ரீசன்,ப்ளீஸ்?' அப்போ அவனுக்கு போன் வந்தது, எடுத்து பேசினான், தாத்தா நான் நாளைக்கு வரேன், நான் அப்புறம் உங்ககிட்ட பேசறேன், போனை வைத்து விட்டு, ரூபெஷிடம் பேச, அவன் கேட்டான் 'ஓ, நீங்க தமிழ் பேசுவீங்களா, உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கு' என்றான் சிறுவன்

'நீங்களும் தமிழ் பேசுவீங்களா, எனக்குத் தெரியாதே, எனக்கும் உன்னைப் பார்த்தால், என் சிறுவயதில் நான் எப்படியிருந்தேனோ அப்படியே இருக்கிறாய், அதான் உன் பேரைக் கேட்கலாம் என்று வந்தேன், உன் பேரெண்ட்ஸ் எங்கே'

'எங்க அப்பா வெளியூரில் இருக்கிறார், என் அம்மா உள்ளே கணக்கு பார்பாங்க,'

'சரி உங்க அப்பா, அம்மா பேரென்ன,' என்று கேட்டான் ருத்ரா

Episode # 16

Episode # 18

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.