(Reading time: 36 - 71 minutes)

டுத்து “வெளிய போய்ட்டு வரலாம் வினு…. இங்க ஊருக்குள்ளயேதான்…. பார்க்க பெருசா ரொம்ப இடம் இல்லைனாலும் உனக்கு ஊர் பழகனுமில்லையா…. “  என்ற யவ்வனின் வார்த்தைகளில் இவள் மாம்பழ மஞ்சளுக்கும் வெந்தய நிறத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிற  புடவையில் கிளம்பி வெளிவரும் போது

சற்று முன் தயாராக இருந்த அவள் கணவன் தன் டீஷர்டை கழற்றிவிட்டு  மாற்றி மாற்றி தன் காது கை என தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தான் இவர்கள் பெட்டில் அமர்ந்து.

இவள் இருக்குமிடத்தில் இப்டி ஷேர்ட்லெஸ்ஸா வந்து டென்ஷனாக்குற வேலைய அவன் செய்றது இல்லைன்றதால இது ஏதோ ப்ரச்சனை என பார்த்தவுடன் புரிந்து போனது இவளுக்கு…

“என்னாச்சு யவிப்பா?” அவசர அவசரமாக அவன் பக்கத்தில் போகும்போது சிவந்திருந்த அவன் காது கைகள் இவளுக்கு சற்று விஷயத்தை புரிய வைத்தன. ஏதோ அவனுக்கு அலர்ஜி ஆகுது போல….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஒரு பக்கம் அவனுக்காக மனம் இளகுகிறது என்றால் மறுபக்கம் மனம் தவித்துப் போனது அவளுக்கு….முதல் முதல்ல இன்னைக்குதான் இவ கையால சாப்ட்றுக்கான்….இவ குடுத்த எதோ ஒன்னு ஒத்துக்கல அவனுக்கு…..

“உங்களுக்கு வெல்லம் அலர்ஜியாகுமாப்பா….? ஏதாவது ஒத்துக்கலைனா சொல்லி இருக்கலாம்ல….இப்ப பாருங்க….” அவனிடம் புலம்பிக் கொண்டே  அவசர அவசரமாய் ஓடிப் போய்  ஆலிவ் ஆயில் கொண்டுவந்து அவனுக்கு சிவந்திருந்த இடங்களில் தேய்த்துவிட்டு…

அடுத்தும் ஹாஃஸ்பிட்டலுக்கு அப்போதே கிளம்பி…. ட்ரைவ் செய்து கொண்டிருந்த அவன் தன் காதையோ கைய்யோ தேய்த்துக் கொள்ள கையைக் கொண்டு வரும் போதெல்லாம் தட்டிவிட்டு.... இவளே மெல்ல தேய்த்துவிட்டு என…..

இப்படியாய் இவர்கள் ஹாஸ்பிடல் போய் சேர….. அங்கு வந்திருந்த அந்த டாக்டர் ஷீலா ரூமிற்குள் செல்லும் வரையிலும் கூட நிலவினிக்கு வித்யாசம் தெரியவில்லை…..  ஏன் லேடி டாக்டர்ட்ட போறோம் என யோசிக்க தோணவில்லை…. பொண்ணு அந்த அளவு ஒரே ஃபீலிங்க்ஸ்…..

“என்ன யவி…கல்யாணம் ஆன மூனாவது நாளே இந்தப் பக்கம்…..” என்று யவ்வனை வரவேற்ற ஷீலா வினியிடம் திரும்பி

 “இவங்க வீட்ல இவனுக்கு வாய் கொஞ்சம் கம்மி ஆனா வாலு ரொம்ப நீளம்….ஆனா அதுக்கெல்லாம் டென்ஷனாகாத…..உனக்கு என் சப்போர்ட் எப்பவும் உண்டு…. எதாவது வம்பு செய்தா சொல்லு….….” என ஃப்ரெண்ட்லி நோட்டில் ஆரம்பித்து…

“என்ன விஷயம்…..இப்பவே பேபிக்கு ப்ளான் செய்றீங்களா இல்ல வேற ப்ளான்ல இருக்கீங்களா?” என விஷயத்து வரும் போதுதான் நிலவினிக்கு முதலில் பல்ப் கொஞ்சமே கொஞ்சம் எரிய ஆரம்பிச்சுது…..

‘இது எதுவும் இவன் எனக்கு பல்ப் கொடுக்ற சதியோ?’ என சின்னதாய் ஒரு தாட்….. ‘ஆனாலும் உடம்பெல்லாம் அங்கங்க சிவந்திருந்துதே….’ என அதற்கு கவ்ண்டர் குரல் அவளுக்குள்ள கேட்கிறப்பவே

“இல்ல அண்ணி…..வினி நேத்து ஸ்லிப் ஆகி கீழ விழுந்துட்டா…..அப்ப பெய்ன் இருந்துச்சு அடுத்து எதுவும் இல்லைன்னு சொல்றா….ஜஸ்ட் உங்கள பார்த்துட்டு போய்டலாம்னு வந்தோம்….” என அவள் கூட வந்திருந்தவன்…..இல்ல அவள ஏமாத்தி கூட்டி வந்திருந்தவன் சொல்றது காதில் விழுது இவளுக்கு…..

விழுந்த காதுல இருந்து புகை வெளிய வர்றது தெரியுதுதானே….

இவள் அவனை திரும்பிப் பார்க்க சின்னதாய் கண் சிமிட்டியவன் முகத்தில்  கொட்டிக் கிடந்தது குறும்புப் புன்னகை.

இவள் அடுத்து எதுவும் சொல்லும் முன்னமே….. “வாம்மா பார்க்கலாம்…” என அழைத்தார் ஷீலா…. இப்போது வினிக்கு வாங்கிய பல்ப்பிலிருந்து எல்லாம் மறந்து போச்சு…..

‘ஐயோ எக்குதப்பா என்னதையும் சொல்லி ஏத்திடுவாங்களோ இஞ்செக்க்ஷன்?’ மிரண்டு போய் அடுத்த நொடி அழப் போகும் பாவத்துடன் பக்கத்திலிருந்தவனைப் பார்த்துக் கொண்டே பலி ஆடு மாதிரி அந்த டாக்டர் ஷீலா சொன்னதை செய்தாள் இவள்.

“ஒன்னுமில்ல யவி…. அம்மா பயந்துட்டாங்களோ….” என ஷீலா முடிக்கும் போதுதான் உயிர் திரும்பி வந்தது நிலவினிக்கு…. ‘இதுக்கெல்லாம் இருக்குடா உனக்கு’ என்ற அளவுக்கு இப்போது முழி மாறிப் போயிருந்தது அவளுக்கு….

இந்த நேரத்தில்தான் நம்ம பவிப்பொண்ணு நிலுவுக்கு கால் மேல கால்….. அந்த நேரத்தில் ஏற்கனவே சைலண்ட் மோடில் மொபைலை ஹேண்ட் பேக்கில் வைத்திருந்தாள் நிலவினி…… அதோடு சிவப்பு சில்லி மூடில் வேறு அவள்.

அதே மூடில் வீட்டிற்கு வந்திருந்தால் நம்ம யவிக்கு நிச்சயமா சில்லிப் பவுடர்ல டிகாஷன் எடுத்து காஃபி கொடுத்துறுப்பா வினிப் பொண்ணு……பட் ஷீலா கொஞ்சம் கூலாக்கியே பொண்ண வீட்டுக்கு திருப்பி அனுப்பி வச்சதால யவி கொஞ்சம் எஸ்கேப்…… ஆனா கொஞ்சம்தான்…

சில்லி மூட்ல இருந்த பொண்ணை கொஞ்சம் சிவக்க வைத்தார் ஷீலா தன் அடுத்த கேள்வியில்…...

“இப்ப பேபி வச்சுக்கிற ப்ளான்ல தானே இருக்கீங்க…?” என மீண்டுமாய் தன் முதல் கேள்வியில் வந்து நின்றார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.