(Reading time: 36 - 71 minutes)

 “வேண்டாம்….ஸ்ட்ரெயின் பண்ணிக்காத அனு…. நான் அப்றமா வரேன்…..” வந்துவிட்டானே தவிர அதிபனுக்கு அவளிடம் பேச வேண்டிய எதையும் பேசும் நேரம் இதுவாக படவில்லை என்பதால் திரும்பிச் செல்லத்தான் தோன்றியது….

அனுவோ எந்த பதிலும் சொல்லாமல் அவனை ஒரு கூரிய பார்வையால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பார்வையில் அவனையும் மீறி வெளியே வந்தது வார்த்தை…

“சாரி அனு…..”

“ஓ….இது எதுக்கு தீபன்….?” அமைதியாக கேட்டவள் அடுத்து இவன் பதில் என எதுவும் சொல்லும் முன்னமே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“இன்னைக்கு இதுக்கு சாரி…..முன்னால அதுக்கு சாரி…நாளைக்கு இன்னும் எதோ ஒன்னுக்கு வரும் அடுத்த சாரி……காரணம் வேணா மாறிகிட்டே இருக்குமே தவிர நீங்க சாரி சொல்லப் போறது நிக்கவே போறதில்ல…… அப்றம் இதுக்கு என்ன மீனிங் இருக்கு?” என இதையும் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் கேட்டவள்….

“உங்களைப் பொறுத்தவரைக்கும் நான் என்ன செய்தாலும் தப்பா தான் தெரியும்….. அதுக்கு காரணம்  உங்களுக்கு என் மேல உள்ள வெறுப்பு….” என மீண்டுமாக இடைவெளியின்றி ஆனால் அமைதியான குரலில் தொடர

இப்பொழுது தன் பக்கத்தை சொல்ல நினைத்தான் அதிபன். ஆனால் அவனுக்கு வாயைக் கூட திறக்க நேரம் தராமல்

“என் வொயிட் ஸ்கின்ன பார்த்து உங்களுக்கு அப்டி ஒரு வெறுப்பு என்ன ?” என அதே அமைதியான வகையில் கேட்டு அதிபனை அதிர வைத்தாள்.

‘எதை எதோட போய் இவ முடிச்சு போடுறா?......’ அதிபனுக்கு அவள் மீது ஒருவகையில் ஆரம்பத்தில் இருந்து மரியாதை இல்லைதான்…அவனால் அவளை நம்ப முடியவில்லைதான்….. காரணம் அவள் அவனுக்கு அறிமுகமான விதம்….அந்த பிக்பாக்கெட் விஷயம்….. மற்றபடி அவன் அவள் சொல்லும் இந்த வகையிலெல்லாம் ஒரு நாளும் நினைத்தது கிடையாதுதான்…..

இவன் தன் பக்கத்தை இப்போது விளக்க முயல….வாய்ப்பே தராமல் அதே தொனியில் தொடர்ந்தாள் அவள்….

“உங்க நாட்டு பொண்ணுங்கட்டலாம் நீங்க ரொம்ப மரியாதையா தன்மையா நடந்துப்பீங்களாம்…. அவங்க செய்ற எதாவது பிடிக்கலைனா கூட விலகித் தான் போவீங்களாம்….. கோபமா ஒரு வார்த்தை பேசமாட்டீங்களாம்….. உங்கட்ட வேலை செய்ற பொண்ணுங்களை கூட நீ போன்னு ஒருமையில பேச மாட்டீங்களாம்….. பொதுவாவே நீங்க ரொம்ப ஹெல்பிங் நேச்சராம்….. உங்க ப்ரதர்ஸ்னு மட்டும் இல்ல உங்க கசின்ஸ் யார்வீட்டு விஷயத்திலும்கூட உங்க அப்பாக்கு அடுத்து நீங்கதான் முன்ன நின்னு எந்த ஹெல்ப்னாலும் செய்வீங்களாம்….. அப்டி ஒரு ஃபேமிலி பாண்டிங்காம் உங்களுக்கு….உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்ட எல்லாமே இப்படித்தான்…. ஆனா என்ட்ட மட்டும் ஆரம்பத்துல இருந்தே எல்லாம் தலைகீழதான் ….” அவள் சொல்ல சொல்லத் தான் அதிபனுமே இதை உணர்ந்தான்…. ஆமாம் இவளிடம் அவன் எல்லாவகையிலும் முரண்பட்டிருக்கிறான்…..ஆனால் ஏன்?

‘நிச்சயமாக அவள் சொன்ன காரணம் இல்லைதான்……ஆனால் இது என்ன?.... அவள எப்டி நீ போன்னு பேச ஆரம்பிச்சான்? அடுத்த வீட்டுப் பொண்ண என்னைக்கு இவன் இப்டி பேசியிருக்கான்?.... எப்டி இந்த வெள்ளக் கோழிட்ட மட்டும் கோபப்பட்டான்? அதையும்விட மோசம்…. வெள்ளக்கோழியா??? எப்ப இப்டி ஒரு பொண்ணுக்கு பேர் வைக்க ஆரம்பிச்சான்? பிரமித்துதான் போனான் அதிபன் அவள் சொன்ன விஷயங்களில்….

“வொயிட்ஸ்னா அவ்ளவு மோசமா தீபன் உங்களுக்கு…..? வெளிநாட்டுல இருந்து வந்தவங்கன்னா கண்டிப்பா அவங்களை வெறுக்கனுமோ?” அனுவோ இன்னுமாய் தொடர்ந்தாள்.

“ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு திருக்குறள்ள சொல்லி இருக்குதே அதுல நாங்கல்லாம் வரமாட்டமா? இன்டியன்ஸுக்கு மட்டும்தான் அதுன்னு எதுவும் இருக்குதோ…..? ஒயிட்டா பிறந்தாலே அவங்கல்லாம் ஒழுக்கம் இல்லாதவங்க……இம்மாரல்னு அதென்ன நினைப்பு…..?

போலீஸ்ல பதிவாகிற ரேப் கேஸ் வச்சு 2013 ல ஒரு புள்ளி விவரம் இந்தியால இருந்து கொடுத்றுகாங்க…… இந்தியால எவ்ரி 20 மினிட்ஸுக்கு ஒரு ரேப் நடக்குதாம்….. ஒரு நாளைக்கு 93 பொண்னுங்க ரேப் ஆகுறாங்களாம்…. வருஷத்துக்கு அரவ்ண்ட் டூதவ்ஸண்ட் பேர் சொந்த மாமா சித்தப்பா அண்ணா கொழுந்தன்னு உறவுக்காரங்களாலயாம்…… அரவ்ண்ட் 600 பொண்ணுங்க சொந்த பேரண்ட்ஸால…..புரியும்னு நினைக்கிறேன் தன் அப்பாவால ரேப் ஆகுறாங்க…..இது வெறும் பதிவாகிற கேஸோட கணக்கு….. 90% ரேப் பதிவாகாமலே போய்டுதாம்……அப்ப 10%ஜே 93 னா 100% என்ன ஆகும்? ஒரு நாளைக்கு 930 பொண்ணுங்க இங்க ரேப் ஆகுறாங்கன்னு ஆகுது….

இது நிஜ ஸ்டாடிடிக்‌ஸ்….ஆனாலும் நான்  உங்களை  இந்த வகையில தப்பா நினைக்கலியே தீபன்…. முன்னால ஊரைவிட்டு கனி ஆன்டியையும் மணி அங்கிளையும் ஒதுக்கி வச்சுட்டதால… மத்யூ திங்ஸ இங்க பரி பண்ண ஒத்துக்க மாட்டீங்க….தடுப்பீங்க……என்னை கன்னா பின்னானு திட்டுவீங்க…..கோபபடுவீங்கன்னு உங்களுக்கு பயந்துதான், நீங்க வந்து போற டைம் எதுன்னு கால்குலேட் செய்து அதுக்கு பிறகு வயலுக்கு வரனும்னுதான் லேட்டா வந்தேன்…..

எனக்கு இருட்டுன்னா கொஞ்சம் பயம்தான்…கரண்ட் போகவும் ரொம்பவுமே பயந்து….. பதட்டத்துல குழி வெட்டிக்கிட்டு இருந்த அந்த அது பேர் சரியா தெரியலை….அதால என் காலை வெட்டிட்டேன்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.