(Reading time: 36 - 71 minutes)

திபனின் அம்மா மரகதத்திற்கோ ஏற்கனவே மனதில் அனு மீது அதிபனுக்கு இவள் என ஒரு எண்ணம் விழுந்து வைத்திருந்ததினால்……இப்போது அனுவின் நிலமையை கேட்கவும் அவள் மீது இன்னும் பரிதாபமும் கூடவே அதிபனும் அனுவும் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகவே புரிந்து ஒத்துப் போக முடியும் என்ற எண்ணமும் தான் தோன்றுகிறது அவருக்கு. அதிபனும் இழப்பை சந்தித்தவன்தானே…..

மரகதத்திற்கு எப்போதும் பெண் குழந்தைகள் என்றால் பிரியம்…..அதுவும் இந்த இடத்தில் அனுவுக்கு சாதகமாக அவரது மனதை இழுத்தது….. ஆக ஒரு விதவை எப்படி என் மகனுக்கு மனைவியாகலாம் என எண்ண தோன்றவில்லை அவருக்கு….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ந்த நிலையில் தான் அபயன் கனிமொழியுடன் ஹாஃஸ்பிட்டலுக்கு கிளம்பினான். ஹாஸ்பிட்டலில் இவன் கனிமொழியுடன் அனு இருந்த அறையை அடையும் நேரம் அங்கு வந்து சேர்ந்தான் அதிபன்.

ஏற்கனவே டிஸ்சார்ஜ்க்கு என எல்லா ப்ரொசீசரும் முடிந்திருக்க கிளம்ப தயாராக இருந்தாள் அனு.

“நான் இவங்களை கூட்டிட்டு கிளம்புறேன்டா……என் பைக் கீ இங்க என் ரூம் டேபிள்ல இருக்கு……நீ வர்றப்ப பைக்ல வந்துடு….” இவனிடம் சொன்ன அதிபன் அவர்களுடன் கிளம்ப தயாரானான்.

‘இப்ப எதுக்கு இவன் நம்மள இங்க வரச் சொன்னான்…?’ என தன் அண்ணனை ஒரு விதமாக பார்த்துக் கொண்டே அனு இருந்த அறையைவிட்டு வெளியே வந்தான் தம்பி….

“டேய் போய் கீய எடுன்னு சொன்னேன்….” திரும்பவுமாக கேட்கிறது அதிபனின் குரல்…

“இதோ போறேன்….”

‘இவனுக்கு என்னாச்சு…..நமக்கு எதுவும் சர்ப்ரைஸ் வச்சுறுக்கானோ….ஆனா பக்கத்துல பேர்த்டே கூட இல்லையே…..அதுவும் நேத்து அவன் இருந்த மூடுக்கு…இன்னைக்கு நமக்கு என்ன சர்ப்ரைஃஸ் அரேஞ்ச் செய்தான்?’ யோசித்தபடியே மாடி ஏறினான் அபயன். அங்குதான் அதிபனுக்கு என ஒரு அறை உண்டு இங்கு….

அதிபன் தான் இங்கு நிர்வாகம் பார்ப்பதால் அவனுக்கென ஒரு அறை…. எப்போதும் எல்லாவற்றிலும் வேகம் துறுதுறு இது அபயன் விதம். அப்படியே இப்போதும் வேகமாக வந்தவன் அறை வாசலை அடையும் போது அதிர்ச்சியில் அப்படியே நின்று போனான்….முதல் நொடி தன் கண்ணை நம்பவில்லை அவன்….

க்ரீம் நிற சாரிக்கு பீச் நிற பார்டரில் ஒரு புடவை அணிந்து ஒத்தை போனி போட்டு….அதிபனுக்கான டேபிளில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து எதோ எழுதிக் கொண்டிருந்தாள் அவனது பவிப் பொண்ணு….

தன்னை ஆசுவாசப்படுத்தும் விதமாக இரு கைகளால் தன் முகத்தை ஒரு முறை மேலிருந்து கீழாக தடவிக் கொண்டான் அவன். அடிக்கடி அவன் மனக் கண்ணில் அவளைப் பார்ப்பது போல் இதுவும் இருந்துவிடக் கூடாது…..

இன்னுமே இவனை கவனிக்காமல் எழுதுவதில் இருந்தாள் அவள்…. ஜில்லென ஒரு அருவி இவனுள் பிறப்பெடுக்க…..ஆயிரம் கடலளவு அமைதி மனதில் ஆண்டு கொள்ள…..’அதான் அதிக்கு விஷயம் தெரிஞ்சு இங்க வேலைக்கு பவிய கூட்டிட்டு வந்துட்டான்னு தெரியுதே…..இனி அடுத்து கல்யாணம் தானே…..’

அவளிடம் குறும்பு செய்ய வேண்டும் என எழும்பு நிற்கும் ஆசையை கொன்று போட்டு…..பின்ன எதாவது எக்கு தப்பா யார் கண்ணுலயும் மாட்டி என்ன பரச்சனை ஆகுமோ….

அமைதியாய் அறைக்குள் சென்று அதிபன் சொன்ன பைக் கீயை எடுத்தான்….மூச்சடைக்க எழுந்து நின்றாள் அப்போதுதான் அவனைப் பார்த்த இவனது பவிப் பொண்னு…..

Friends இதில் பகிந்து கொள்ளப்பட்டிருக்கும் கருத்து உலக ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வலியுறித்திதான் என்பதே அல்லாமல், எந்த வகையிலும் யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ சொல்லபடவில்லை  என்பதை தயை கூர்ந்து புரிந்து கொள்ள கோருகிறேன். நன்றி.

தொடரும்!

Episode # 19

Episode # 21

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.