(Reading time: 36 - 71 minutes)

முதல் நாள் அனுவை ஏர்போர்ட்டில் பார்த்த அந்த பிக்பாக்கெட் காட்சியிலிருந்து இன்று நடந்தது வரை அனைத்தையும்…. அதில் ஒவ்வொரு நிகழ்வையும் இவன் பார்த்த விதம்…நினைத்த கோணம் என எல்லாவற்றையுமே அவன் சொல்ல எந்த வகையிலும் இடையிடாது அதை கேட்டுக் கொண்டிருந்தான் அபயன்.

பேசுவதால் அதிபன் மன அழுத்தம் குறையுமெனில் அவன் பேசட்டும்…….

“எந்த சூழ்நிலையிலும் அவள அடிக்கனும்னு நான் நினைக்கவே இல்லடா அபை….அவ உண்மையிலே சரி இல்லைனா கூட சசிட்டதான் ஹேண்ட் ஓவர் செய்யனும்னு நினச்சேன்……சசிய பத்தி உனக்கு தெரியும்ல…. மத்தபடி போலீஸ்ல கூட வேற யார் கைலயும் அவள குடுக்க எனக்கு எண்ணம் கிடையாது…,, இதுல அவ என் மேல வந்து விழுந்து பிடிக்கவும் ஒரு அனிச்சை செயலாதான் அவளை பிடிச்சு தள்ளிட்டேன்….அப்ப கூட அவளுக்கு அடி பட்றக் கூடாதுன்னு தான் நினச்சேன் அபை….பட் அங்க அந்த பாக்‌ஸ அவ கொண்டு வந்து வச்சுறுப்பான்னு எனக்கு தெரியாதே…..ஒரு பொண்ண அடிச்சுட்டனேன்னு அவ்ளவு கஷ்டமா இருக்குடா…..அதுவும் அனு ஒரு பூஞ்ச மாதிரி….. அவள போய்….” தன் கையால் நெற்றியை தடவி…பின் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் அதிபன்…

“நீ என்ன வேணும்னா செஞ்ச……? இப்பவும் அனுவுக்கு ஒன்னுமில்ல….” அபயன் வார்த்தைகள் அதிபன் காதில் விழுந்ததாமா என்ன?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அடுத்து நினைவு வந்தவனாக “கனி ஆன்டிக்கு இப்டி ஒரு துரோகத்தை செய்துட்டனேடா…. அவங்க இடத்தை அவங்களுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டனே…. அதுவும் எதுக்கு கேட்டப்ப மாட்டேன்னு சொல்லி இருக்கேன்….” அடுத்து என்ன பேசவென்று தெரியாமல் அதிபன் அமர்ந்திருக்க…..மெல்ல அவன் தோளில் வந்து அமர்கிறது ஒரு கை….

“ஆன்டி இல்லப்பா சித்தின்னு சொல்லு….” அந்த குரலில் என்ன இருந்ததோ ஆனால் நிச்சயமாக கோபம் இல்லை….

அதிபன் சட்டென திரும்பிப் பார்த்தான்…..வாசலில் உட்கார்ந்திருந்த சகோதரர்கள் பின் வந்து நின்றார் அந்த கனிமொழி…. அவருக்கு பார்வை கம்மி என அனு சொன்னது ஞாபகம் வர சட்டென எழுந்து அவர் கையைப் பற்றினான் அதிபன்….

இவன் வாயைத் திறந்து எதுவும் பேசும் முன்னமே அவர் முந்திக் கொண்டார்.

“அனு இப்ப எப்டி இருக்கான்னு பார்த்துட்டு வந்து சொல்ல முடியுமா தம்பி…..”  அவர் சற்றே கெஞ்சலாக அதிபனை கேட்க…

“அண்ணி இப்ப நல்லா இருக்காங்க  சித்தி……ஹாஸ்பிட்டல்ல இருந்து கூப்ட்டு சொன்ன பிறகுதான் நான் அண்ணாவ தேடி இங்க வந்தேன்……நைட் லேட்டாகிட்டுல்ல இன்னைக்கு மட்டும் அவங்க அங்க இருக்கட்டுமாம்…..காலைல வந்துடுவாங்க……நீங்க ஹாஃஸ்பிட்டல் போகனும்னா சொல்லுங்க…..நான் இப்ப கூட்டிட்டுப் போறேன்….” பதில் சொன்னது அபயன்.

“இல்லப்பா….நீங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க…..” என அபயனிடம் சொன்ன கனிமொழி….. அதிபனிடம் “நீங்க ஒரு டைம் அனுவ பார்த்துட்டு வந்துட முடியுமா தம்பி….ப்ளீஸ்…..எதுனாலும் அப்றம் பேசலாம்…” என்றார்.

நடப்பது அபயனுக்கு சற்று வித்யாசமாக தோன்றியதுதான்……’அனுவ பார்க்கனும்னா அவரே போய் பார்க்கலாம்….அதை வேண்டாம் என சொல்லிவிட்டு  அது என்ன அதிபனை?’ ஆனாலும் அவன் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை….

அதிபனுக்கும் இது தோன்றினாலும் அவன் குற்ற மனப்பான்மையில் இருந்தவன் அல்லவா….. ஆக அவர் உதவி என்பது போல் கேட்கவும் அடுத்த நிமிடம் கிளம்பிவிட்டான் ஹாஸ்பிட்டலுக்கு….. அத்தனை வேதனையில் அவள் துடித்துக் கொண்டிருந்தாள்…..இப்பொழுது எப்படி இருக்கிறாளோ என்று உள்ளே ஓடிய ஒரு தவிப்பும் காரணம்…

“நான் பார்த்துட்டு வரச் சொன்னேன்னு அனுட்ட சொல்லுங்க தம்பி…” கனி மொழியின் வார்த்தைகளுக்கு மௌனமாகவே சம்மதம் சொல்லிவிட்டு போனான் அதிபன்.

அங்கு ஹாஸ்பிட்டல் சென்ற பிறகோ அதிபன் அனுவின் அறைக்குள் நுழைய சற்று தயங்கினான்….காரணம் இப்போது அங்கு அறையில் அவள் மட்டும் இருந்தாள்……சசிபால் கிளம்பிப் போயிருந்தான்…. ஜுவானும் இவன் பார்வை படும் இடத்தில் வெளியே படுத்து தூங்கிக் கொண்டு இருந்தான்.….

ஆனாலும் இவ்ளவு தூரம் வந்துவிட்டு எப்படி பார்க்காமல் திரும்பிப் போக....

என்ன செய்யவென இவன் தயங்கி நிற்க……அங்கிருந்த நர்ஸ் இவனைப் பார்த்ததும் இவனிடமாக வந்தவள்…. “அவங்க விழிச்சுதான் இருக்காங்க சார்…” என்று இவனுக்கு தேவையான தகவல் தந்தாள்.

கதவை தட்டிவிட்டு மெல்ல எட்டிப் பார்த்தான்…. முதுகை தலையணையில் சாய்த்து….கால் நீட்டி சற்று சரிந்து அமர்ந்திருந்தாள்.….. அந்தக் கணம் அவனுக்கு பரவியது நிம்மதிதான்…. துடிக்க துடிக்க அல்லவா அவளை வழி அனுப்பி இருந்தான்…. இப்போது வலியின் சுவடு இல்லாத அவள் இவன் மனதில் நிம்மதி வார்த்தாள்.

இவன் கதவை தட்டிய சத்தத்தில் கதவின் புறம் திரும்பிப் பார்த்தபடி, தன் உடையை ஒரு கணம் சீராக்கிக் கொண்டு நேராக அமர முயன்றாள்.

எழும்பி உட்கார்ந்தா  வலிக்குமோ அவளுக்கு என ஓடுகிறது இவனுக்குள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.