(Reading time: 36 - 71 minutes)

ப்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இல்லை என நிலவினிக்கு தெரியும்…..இவளுக்கும் இல்லைதான்…. இருந்தாலும் இந்த கேள்வி காதில் விழவுமே ஒரு இன்ப குறுகுறுப்பு எங்கோ துள்ளி ஓடுகிறதுதானே உள்ளே……

முதலில் ஷீலா இதைக் கேட்கும் போது இவள் இருந்த பதற்றத்தில் அது மனதில் பதியவில்லை….ஆனால் இப்போது அது அலை செய்கிறதுதானே…..அவன் இதை எப்படி எதிர் கொள்வான்?

திரும்பி அவனைப் பார்க்க நினைத்தால் உள்ளே சற்றே தடை…..வெட்கம்.

“அம்மா ஆசப் படுவாங்கதானே….” என்றபடி தன் ப்ரிஷ்க்ரிப்ஷன் பேடை எடுத்தார்.

அவன் புறமாய் திரும்பாமல் கடைக் கண்ணால் அவனைப் பார்த்தாள் வினி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

 சற்று சிரித்த முகம் யவ்வனுக்கு என தோன்றும் நிலவினிக்கு….எப்போதுமே ஒரு சிறு புன்னகை முகத்தில் பரவி இருக்கிறதோ என ஒரு எண்ணம் வரும் அவன் முகத்தை நினைக்கும் போதெல்லாம் இவளுக்கு….. அந்தப் புன்னகையுடன் ஷீலாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“நிலவினி ஏஜ்கு இப்ப வச்சுக்கிறது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…..கரெக்ட் ஏஜ்தான்…..” ஷீலா தன் பேனாவை எடுத்தார் இப்போது.

எதாவது ஷீலாவுக்கு பதில் சொல்வான் எனப் பார்த்தால் இவன் என்ன ஒன்னுமே சொல்லலை? என வினி நினைக்கும்போதே….. இவள் தன் மடியில் வைத்திருந்த கையை மெல்ல பற்றினான் அவன்.

‘ஸ்….. இவ அவன பார்க்கிறத அவன் கவனிச்சிருக்கான்…..’ ஷீலாவின் கவனத்தை கலைக்காமல் மெல்ல தன் கையை அவனிடமிருந்து உருவ முயன்றாள் இவள்….. அவனோ விட்டால்தானே….. இவள் கையை மெல்ல எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டான்.

இவர்களுக்கும் ஷீலாவுக்கும் இடையில் இருந்த டேபிள் மறைவில் இப்படி வம்பிழுத்துக் கொண்டிருந்தான் யவ்வன்.

 “அதோட உங்க சிச்சுவேஷனுக்கும் சரி…..ஏஜுக்கும் சரி ஃபர்ஸ்ட் ப்ரெக்னென்சிய தள்ளிப் போடுறத நான் அடவைஸிபிள்னு சொல்ல மாட்டேன்…”

ஷீலாவிடம் மாட்டிக் கொள்ளாமல் தன் கையை உருவ போராடிக் கொண்டிருந்தாள் வினி…

 “எந்த கான்ட்ராசெப்டிவ் ஏஜென்ட்ஸிலும் எதாவது ஒன்னு இல்லனா இன்னொன்னு ப்ரச்சனையாகலாம்….எல்லாம் எல்லோருக்கும் ஒத்துகிடும்னு இல்ல….. எதுக்கு தேவை இல்லாத தொல்லை…..?”

 இவர்கள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் எதையோ ப்ரஸ்க்ரிப்ஷனாக எழுதினார் ஷீலா….

இவள் கை அவனிடம் மாட்டியிருக்க ஷீலாவை ஒரு ஈஈஈஈஈ என்ற எக்ஸ்‌ப்ரெஷனுடன் பார்த்துக் கொண்டிருந்த நிலவினியின் கண்ணில் படுகிறது அவரது டேபிளில் இருந்த அது….

இவள் அருகில் இருந்த அந்த சிரிஞ்ச்…. சற்றே பிறை போல் வளைந்து முந்தைய கால ஃபீடிங் பாட்டிலை ஞாபகபடுத்தும் அமைப்பில்….ஆனால் சிரிஞ்சு போன்று நீடிலுடன்…… வெகு சின்னதாய்……

கைனகாலஜிஸ்ட் என குறிப்பாக சொல்லும் வகையில் அது ஷீலாவின் டேபிளில் இடம் பிடித்திருக்கலாம்…..

அவனிடம் மாட்டாத அடுத்த கையால் இப்போது அதை எடுத்து நறுக்கென ஒரு குத்து அவன் கையில்….

ஷ்…..துள்ளியபடி இவள் கையை விட்டான் அவன். ஒரு கணம் ஹை என்று இருந்ததுதான் வினிக்கு. .அடுத்து ஷீலாவை நினைத்து அவசரமாக தலையை குனிந்து கொண்டாள் இவள்.

‘ஐயோ மானத்த வாங்கிட்டானே….நான் இவ்ளவு நேரம் எப்டி சமாளிச்சேன்…’

சட்டென நிமிர்ந்து பார்த்த ஷீலாவோ…. சிறு குறும்பு புன்னகையுடன் மீண்டுமாய் குனிந்து தன் வேலையை தொடர்ந்தார்.

 “ப்ரெக்னன்ஸிக்கு மூனு மாசம் முன்னால இருந்தாவது ஃபோலிக் ஆசிட் டாப்லட்ஸ் எடுத்துக்குட்டா……பிறக்கிற குழந்தைக்கு மூளை வளர்ச்சிக்கு, முதுகுதண்டு வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது…..அதோட ப்ரீ மெச்சூர் டெலிவரியையும் இது தடுக்கும்….”

இப்பொழுது எழுதி முடித்திருந்த ஷீலா நிமிர்ந்து பார்த்து புன்னகையுடன் இவளிடமாக அதை நீட்டினார்.

ஷீலாவிடம் விடை பெற்று வெளியே வரும் போதே முடிவு செய்துவிட்டாள் நிலவினி….’இந்த யவிய கொஞ்சம் கவனிச்சு ஆகனும்….அது தப்பில்ல…..’

இது நடந்த இரவுதான் அதிபன் அனுவை கிணற்றடியில் சந்திந்த அந்த வேதனையான நிகழ்வு….

னக்குள் தானே வேதனையில் மூழ்கி இருந்த அதிபன் எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தானோ ஏதோ ஒரு நேரத்தில் சுய நினைவுக்கு வந்தான் அவன். இவன் அருகில் அமைதியாக அமர்ந்து இருந்தான் தம்பி அபயன். அவன் எப்போது வந்தான் எனக் கூட இவனுக்குத் தெரியவில்லை…

அதிபனின் மன நிலை அந்நேரம் என்னவாய் இருக்கும் என முற்றிலும் அறியக் கூடிய ஒரு நபர் உண்டாகில் அது அபயன்தான். அந்நேரத்தில் அச்சூழலில் தம்பியைக் கண்ட அதிபன் கட கடவென தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.