(Reading time: 11 - 22 minutes)

வன் சென்றதும், சிறு புன்னகையை உதட்டினில் உலவ விட்டவன், மீண்டும் செல்போனில் தன் கவனத்தினை பதிக்க,

“குட் மார்னிங்க்…..” என்ற மெஸ்ஸேஜ் அப்போது தான் அவனது இன்பாக்ஸை எட்டியது….

பதிலுக்கு, “குட் மார்னிங்க்…” என்ற மெஸ்ஸேஜை அவன் அனுப்ப,

“என்ன பண்ணுறாங்க அக்கா?... நீங்க எழுந்தாச்சா?... குட்டீஸ் என்ன பண்ணுறாங்க?... மாமா இருக்குறாரா?...” என பல கேள்விகளை ஒரே மூச்சில் ஜானவி கேட்க

“ஒரு கேள்வியை கேட்கமாட்டியா நீ?... ஒரேடியா கேட்குற?...” என்றான் அவன் சட்டென்று…

“எதுக்கு காலையிலேயே சண்டை போட ஆரம்பிக்கிறீங்க?..”

“யாரு நானா?... ஆமா அதான வேலை எனக்கு?...”

“அய்யோ… நான் எப்போ அப்படி சொன்னேன்…”

“பின்னே நீ சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம்????”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“அய்யோ… சாமி… போதும்…. தெரியாம கேட்டுட்டேன்… கேள்வி… விட்டுடுங்க…” என அவள் கையெடுத்து கும்பிட, “ஓகே…” என்றான் அவன் ஒற்றை வார்த்தையில்…

“வந்துடுச்சுப்பா ஒகே…” என தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள், வெளியே, அவனிடம், “மாமா எதும் சொன்னாரா உங்ககிட்ட?...” என்றதும்,

“அவர் சொல்லுறதுக்கு எதுவும் இல்லாம போயிட்டார்…” என்றான் அவன்…

“என்ன சொல்லுறீங்க புரியலை…”

“அதுவா…” என்றவன், அப்போது நடந்து முடிந்ததை அவளிடத்தில் சொல்ல, அவள் சிரித்தாள்…

“என்ன சிரிக்குற?...”

“எல்லாம் உங்க திறமையை நினைச்சு தான்….” என அவளும் சொன்னதும் அவனுக்கும் சிரிப்பு ஒட்டிக்கொண்டது…

“சரி… நீ ஆஃபீசுக்கு கிளம்பலையா?... எங்கிட்ட கதை பேசிட்டிருக்குற?..”

“கிளம்பணும்… இனிதான்…” என்றவள், “ஆஃபீசுக்கு போகவே கடுப்பாயிருக்கு… லீவ் போட்டுடலாமான்னு தோணுது…” என்றதும்,

“போடு…” என்றான் அவனும்…

“அய்யய்யோ… அப்புறம் யாரு திட்டு வாங்குறது அங்க?... முடிக்க வேண்டிய வேலை வேற நிறைய இருக்கு… இந்த லட்சணத்துல லீவ் போட்டா அவ்வளவுதான்…” என அவள் பதறவும்,

“ஆமா அது ஒரு டுபார்க்கூர் ஆஃபீஸ்… அதுல லீவ் தரமாட்டாங்க பாரு… இதுக்குத்த்தான் அடிமை வேலை பார்க்காதன்னு சொல்லுறேன்…”

“எது… அடிமை வேலையா?..”

“ஆமா… பின்ன என்ன?... நினைச்ச நேரத்துக்கு லீவ் போட முடியலைன்னா அப்போ அது அடிமை வேலைதான…” என அவனும் கொஞ்சம் கடுப்பாக சொல்ல,

“சரி… சரி… காலையிலேயே மறுபடியும் வேண்டாம்…. விடுங்க… நான் தெரியாம சொல்லிட்டேன் லீவ்ன்னு… போதும் விட்டுடலாம்…” என அவள் கெஞ்சவும்,

“ஓகே…” என்றான் அவன்…

“மறுபடியுமா?...” என தலையில் கைவைத்துக்கொண்டவள், பேச்சை மாற்ற விரும்பி, “ஹ்ம்ம்… உங்க வொர்க் இன்னும் ஒன் வீக்கில் முடிஞ்சிடும்ல…” என மெதுவாக கேட்க

அவனும் ஆம் என்றான்…

“ஹ்ம்ம்… அப்புறம் அடுத்து என்ன பண்ணப்போறீங்க?...” என தயங்கி தயங்கி வார்த்தைகளை அவள் வெளிக்கொணர,

“தெரியலை…” என்றான் அவன் பட்டென்று…

“இதென்ன பதில்?... எதாவது ட்ரை பண்ணுறேன்னு சொல்லுங்க… இல்ல தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வைக்கணும்னு சொல்லுங்க… இரண்டும் இல்லாம அதென்ன தெரியலைன்னு சொல்லுறீங்க?...” என மெதுவாக கேட்டதும், அவன் வெடித்தான்…

“தெரியலைன்னா தெரியலைன்னு தான் சொல்ல முடியும்… ட்ரை பண்ணினா மட்டும் உடனே கிடைச்சிடுமா?... தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வச்சதும் உடனே வந்து ஜாயின் பண்ணிடுன்னு சொல்லிடுவாங்களா?.. சும்மா கடுப்பேத்திகிட்டு….”

“நான் தப்பா சொல்லலைப்பா… உங்க நல்லதுக்குத்தான் சொன்னேன்… ஹ்ம்ம்… சாரி…” என்றதும்,

“இட்ஸ்… ஓகே… விடு…” என்றான் அவன்…

“சரிப்பா… சாப்பிடுங்க… நான் அப்புறம் பேசுறேன்… பை…” என்றபடி அவள் சென்றுவிட, இவனும் பை அனுப்பிவிட்டு, அமைதியாக இருந்தான் போனை பார்த்தபடி…

அன்று சரயூ ஊருக்கு செல்கிறேன் என தகவல் சொன்னதும், ஜானவி உடனே போன் செய்தது அர்னவிற்குத்தான்…

அவன் பேச்சை வைத்தே எதோ பிரச்சினை என்று தெரிந்து கொண்டவள் என்ன என்று கேட்க, முதலில் சொல்ல மறுத்தவன், பின் அவனே சொன்னான்… தனது வேலையில் நடந்த நிகழ்வினை… “சரி… வருத்தப்படாதீங்க… வேற எங்கயாச்சும் ட்ரை பண்ணிக்கலாம்…” என அவனுக்கு ஆறுதலாக அவள் பேச, “ஓகே… அதை விடு…” என்றான் அவன்… பின்னர், சரயூவுடன் ஊருக்கு சென்றுவரலாமே என அவள் யோசனை ஒன்றை கொடுக்க அவனுக்கும் அது அந்நேரத்தில் சரி என்றே பட்டது… ஒரு மாறுதாலாக இருக்கும், அதுமட்டுமல்லாது தனியே செல்லும் அக்காவிற்கு துணையாகவும் இருக்கும் என்றெண்ணி ஜானவியிடத்தில் சரி என்றான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.