“ஹேய் துளசி, அவங்க சும்மா கலாட்டா செய்றாங்க அது கூடவா உனக்கு புரியலை? எதுக்கு டென்ஷன் ஆகுற?” என்று தோழியை சமாதானப் படுத்த முயன்றாள் நந்திதா.
“அதில்லைடி நந்து.... நான் இப்போ உன்னை மட்டும் இல்லாமல் சரத்தையும் வேற ஷேப்புக்கு கொண்டு வரணும்.... இல்லைனா அந்த பொண்ணுங்க வந்து கலாட்டா செய்தே கடுப்பேத்திடுவாங்க....”
“பாவம் சரத்...”
“ரொம்ப பாவம் தான்.... சரி நாம நம்ம ப்ளான் கண்டின்யூ செய்வோம்.... பார்லர் எல்லாம் ஈவன்ட் பிளானர்ஸ் அரேன்ஜ் செய்வாங்களான்னு கேட்கனும்......”
“அது இருக்கட்டும் ஒசிமம், சாரீ வாங்க யாரெல்லாம் வராங்கன்னு சொன்ன?”
“நீ, நான், அத்தை, ரேவதி அத்தை, அப்புறம் அந்த ப்ரியா வந்தா வருவா.....”
...
This story is now available on Chillzee KiMo.
...இப்படி ஒரு ஓரமா உட்கார்ந்து உன்னையே பார்த்துட்டு இருக்கட்டா????”
“நான் வேண்டாம்னு சொல்லுவேன்ற தைரியத்துல தானே கேட்குறீங்க?”
“இல்லவே இல்லை.... நீ சரின்னு சொல்லி பாரேன்....”
“ப்ச்... அதெல்லாம் வேண்டாம்... என்ன டவுட் உங்களுக்கு?”
“பெரிய டவுட்..... இது இரவா பகலா?”