(Reading time: 12 - 24 minutes)

05. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

ளார் !!!!!!!

விழுந்த அரை தன் கன்னத்தில் என்ற எண்ணத்தில் விக்ரம் கன்னத்தை தடவ ....மடையா ... அப்படி ஏதும் நடக்கவில்லை என சொல்லியது அவன் சருமம் ...( விழுந்திருந்தால் விக்ரம் இப்போ டமாரம்  ஆகி இருப்பான் )

கண் தன்னால் தன் அருகில் இருந்தவளை நோக்க அவள் இடது கை இவன் பிடிக்குள் இருக்க வலதுகையில் அந்த பளார் வாங்கிய குடிகாரன் நின்றிருந்தான் ... 

நடந்தது இதுதான் ..

விக்ரமும் ரஞ்சியும் ஒரு ரம்யமான சாயங்கால நேரத்தில் தங்கள் சொந்த கதை ( அதாங்க பியூச்சர் பத்தி ) பேசிக்கொண்டு நடந்துபோகுமோது ..

சாலையின் மறுபுறம் குடிக்காரன் தன் மனைவியை போட்டு அடித்து கொண்டிருந்தான் பாரதி கண்ட புதுமை பெண் நம்ம ரஞ்சி அவனை நோக்கி வேகமாக போக எங்கே ஏதேனும் வண்டியில் அடிபட்டுவிடுமோ என அவன் இவள் கைகளை பிடித்துக்கொண்டே வந்தான் ..

ரஞ்சி நேர அவனிடம் ..ஏய் !!!!! நீ அவளை அதிகாரத்தை நிறுத்து ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

அட போமா அவ என் பொண்டாட்டி அவளை நான் அடிப்பேன் என்ன வேணும்னாலும் செய்வேன் நீ ஏன் அதிபதி கேக்கற 

ஏய் அவளை என்னனு நீ நினைத்த சொல்லு நடு ரோடு னு பக்கமா இப்படி அடிக்கற அவ அப்படி என்ன தப்பு பண்ணினா ??/

ஆஹ் அவ குடிக்க காசு கொடுக்க மாட்டேன்ற 

யோவ் நீ ஏற்கனவே மொடாக்குடி குடிச்சிருக்க இப்போ மறுபடியும் குடிக்கணுமா ????

இந்த பேச்சு வார்த்தை நடக்கும்போது கூட்டம் கூடிவிட .. கீழே  இருந்த அந்த  பெண் எழுந்து அமர்ந்தாள் ...

அவளோ கர்பிணி அதை பார்த்தவுடன் ரஞ்சி கொடுத்தது தான் அந்த பளார் ..

உடனே அவன் மனைவி அய்யோ அம்மா அவரை அடிக்காதீங்க என்க ரஞ்சி ஏம்மா அவன் புள்ளத்தாச்சின்னு பாக்காம இப்படி போட்டு அடிக்கறான் நீ என்ன டான்னா அவனுக்கு சப்போர்ட் பண்ணற 

இல்ல அது இப்படி எல்லாம் பண்ணாது நல்ல வேளையில் தான் இருந்துச்சி இப்போதான் திருப்பூர்ல வேலை குறைஞ்சிடுச்சே அதுனாலதான் என்னையும் புள்ளையும் எப்படி காப்பாத்தறதுன்னு கவலைல குடிச்சிட்டு இப்படி திரியுது ..

சரி அங்கே இல்லைனா வேற எங்காவது வேலை தேடலாம்ல ..

எங்கம்மா சரியா வேலையும் கிடைக்கல வையத்து பாடும் தீரல ... இப்போ என்னாலயும் வேலை செய்ய முடியல அதுதான் பிரச்சனை என்க ..

ஒருவழியாக அவர்களுக்கு சமரசம் செய்து உண்ண உணவும் உடனடி மருத்துவ தேவையும் கொடுத்து இவர்கள் கிளம்ப ..

கண்ணில் நன்றியுடன் கைகூப்பி நின்றாள் அந்த பெண் 

வரும் வழியெல்லாம் ரஞ்சிக்கு ஒரே கவலை ஏன்னா குடிப்பழக்கம் ஒருநாளில் முடியாது அதுமட்டும் அல்லாது அந்த பெண்ணிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என வருத்தம் அவளுக்கு ..

புலம்பி கொண்டே ஹோஸ்டேல் சென்றாள் ........... இந்த ஒன்று மட்டும் அங்கு பிரச்சனை இல்லை ... பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம் .. 

நள்ளிரவு ஒரு மணிக்கு ஏதேனும் ஒரு திருப்பூர் தொழிற்சாலையை கவனித்திருக்கிறீர்களா? பெண்கள் கிட்டத்தட்ட ஆலையில் இருந்து ஓடுவார்கள். அப்படி ஓடிப் போய் அன்றைய நாளின் மீதி வேலையை முடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். விடியற்காலை எழுந்து மீண்டும் அந்த நாளுக்கான சமையல், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது போன்ற வேலைகளை செய்து விட்டு காலை 8 மணி வேலைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலான பெண்கள் பார்க்கும் செக்கிங் வேலை நின்று கொண்டே பார்க்க வேண்டியது. அவர்கள் சாப்பாட்டை விட உட்கார்வதற்காகவே உணவு இடைவேளையை எதிர்பார்ப்பார்கள். இப்படி பத்தொன்பது மணி நேரம் ஓயாமல் உழைக்க வேண்டிய அவலச் சூழல் 

கடந்த இருபது ஆண்டுகளில் திருப்பூரில் பெருமளவுக்கு வேலைக்கு வந்தவர்கள் 15 முதல் 20 வயதுடையவர்கள். இப்படி வருபவர்கள் படிக்க வசதியில்லாதவர்கள் அல்லது படிப்பு ஏறாதவர்கள், பிள்ளைகளும் உழைத்தால் மட்டுமே உணவு எனும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தவர்கள். வாழ்கையில் அதிகம் சிரமப்படாமல் விளையாட்டோடு கழிக்க வேண்டிய இந்த பதின் பருவத்தில் மொத்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தை இவர்கள் தாங்குகிறார்கள். மந்தைகளைப் போல அடைத்து வைக்கும் பணியிடங்கள், நெருக்கடியான வசிப்பிடங்கள் (வெறுமனே உறங்க மட்டும்தான் என்றாலும்), வேலையைத் தவிர வேறெதற்கும் நேரம் ஒதுக்க முடியாத நகரச் சூழல், இவையெல்லாம் பதின் வயது இளையோருக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.