(Reading time: 12 - 24 minutes)

ந்தச் சூழலில் அங்கு பணியாற்றும் இளையோருக்கு விவாதிக்க இரண்டு பொதுவான விஷயங்கள்தான் இருக்கும், ஒன்று அவர்களது வேலை அல்லது பாலுறவு. புத்தகம் வாசிக்கவோ, சுற்றுலா செல்லவோ அல்லது விளையாடவோ அவர்களது வேலைச் சூழலும் பொருளாதாரமும் அனுமதிக்காது. இதனால் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான பாலுறவு நாட்டம் பெருமளவு இளைஞர்களது உள்ளத்தை ஆக்கிரமிக்கிறது. அவர்களது ஒரே பொழுது போக்கு சினிமா மட்டுமே. இப்போது சினிமா தரும் பாடம் மிகச் சிறியது, காதலிக்க ஆள் இருப்பவர் கதாநாயகன் அல்லது கதாநாயகி. அப்படி ஆள் கிடைக்காதவர் காமெடியன். ஆகவே நீங்கள் ஹீரோவாக விரும்பா விட்டாலும் காமெடியன் ஆகி விடாமல் இருக்க ஒரு காதலன் அல்லது காதலி இருப்பது அவசியமாகிறது. ஒரு துணையைத் தேடும் இயல்பான மனித உணர்வும் அதனை முட்டாள்தனமான முறையில் உசுப்பிவிடும் சினிமாவும்தான் இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை.

போதிய மன முதிர்ச்சியற்ற நிலையில் உருவாகும் இந்த உந்துதல் காரணமாக தங்கள் சுற்றத்தில் இருக்கும் ஒருவரால் இவர்கள் கவரப்படுகிறார்கள் அல்லது கவர முனைகிறார்கள். அதிகப்படியான பணி நேரம், கடுமையான கண்காணிப்புக்கு இடையே இந்த செயலுக்கான நேரம் மிகவும் குறைவு. இந்தகைய சூழ்நிலைகளில் காதலானது மிக அவசர கதியில் உருவாகிறது. ஆகவேதான் தமது புதிய சினேகத்தை மதிப்பிடவும் அது தமக்கு பொருத்தமானதா என தீர்மானிக்கவும் அவர்களுக்கு அவகாசம் இல்லாமல் போகிறது.  அனேக பாலியல் சார் பிரச்சனைகளுக்கான வேர் இதுதான்.

ஒரு வாழ்க்கைத் துணைக்கான நியாயமான தேவையை உணரவும் அதற்கான ஏற்பாட்டை செய்யவும் ஆட்கள் இல்லாத பெண்களை ஏமாற்றுவதுதான் உலகின் இலகுவான ஏமாற்று வேலை. 

உழைத்துக் கொட்டுவதைத் தவிர வேறெந்த வாய்ப்புமற்ற இந்த பெண்களது நிலையை புரிந்து கொள்ள பெரிய ஞானம் அவசியமில்லை. இத்தகைய நெருக்கடியில் இருக்கும் பெண்கள்தான் மிக எளிதில் காதல் வயப்படுகிறார்கள். கைவிடப்படுவோரில் பெரும்பாலானோர் இவர்கள்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

பெண்களை சமஉரிமை உள்ளோராக நடத்தும் சமூகத்தில் அவர்களை வெறும் பாலியல் பண்டமாக கருதும் ஆண்கள் இருக்க முடியாது.

ஆண்களுக்கென பிரத்யோகமான பிரச்சனை இங்கில்லை. அதாவது இங்கு வரும்போதே பிரச்சனைகளோடுதான் வருகிறார்கள். பெண்களை ஒரு நுகர்பொருளாக கருதுவது, பாலியல் பிரச்சனைகளுக்கு ஒரு மிக முக்கியமான காரணி. ஆனால் அந்த மனோபாவம் அவர்களுக்கு குழந்தைப் பிராயத்திலேயே நம் சமூகத்தால் உருவாக்கப்படுகிறது. நுகர்வு கலாச்சாரம் அதிஅழுத்தமாக ஊட்டப்பட்ட நம் இளையதலைமுறை, பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் கருதும் நம் நாட்டின் சமூக அமைப்பு மற்றும் அதனை ஊக்குவிக்கும் பொழுதுபோக்கு ஊடகங்கள் எனும் இந்த கூட்டணியில் பாலியல் சிக்கல்கள் வராமல் இருக்க வாய்ப்பேயில்லை. கூடுதலாக, ஆண்கள் மது அருந்துவது ஒரு சமூக நிகழ்வாக இங்கே உருப்பெற்றிருக்கிறது. ஆகவே இங்கு மதுப் பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது, பெண்கள் மீதான ஆண்களது கண்ணோட்டம் கண்டு கொள்ளாது விடப்படுகிறது.

வங்கதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் கருவுற்ற பெண்கள் தங்கள் கர்ப்பத்தை தொழிற்சாலைக்கு தெரியாமல் மறைக்க முயல்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. காரணம் அங்கே பேறுகால சலுகை வழங்குவதை தவிர்க்க கருவுற்ற பெண்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இத்தனை குரூரமான நிர்வாகம் இருப்பதால்தான் கனவிலும் நினைக்க முடியாத மலிவு விலையில் ஆடைகள் அங்கே உற்பத்தியாகிறது. அந்த அளவுக்கு மோசமில்லையென்றாலும் இங்கேயும் தொழிலாளர்களது நல்வாழ்வு பற்றிய அக்கறை துளியும் கிடையாது. ஆகவே தொழிலாளர்கள் வாழ்வில் உண்டாகும் தனிப்பட்ட பிரச்சனைகள் தீர்ப்பதற்கான முயற்சி ஒரு கருத்தளவில் கூட ஆடைத் துறையில் கிடையாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை விசாரிக்கும் குழு முறையாக செயல்படும் ஒரு நிறுவனத்தைக் கூட நான் இதுவரை பார்த்ததில்லை. .

இவ்வளவு மோசமான சூழலிலும் இங்கே பெருந்தொகையான மக்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழ்கிறார்கள்.  இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே. ஆகவே அதற்கான சிகிச்சை ஒட்டுமொத்த தேசத்தால் செய்யப்பட வேண்டியது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் செய்ய வேண்டியது..... 

இதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என ரஞ்சி மனதில் தோன்றி கொண்டே இருந்தது என்ன செய்ய முடியும் என நினைத்துக்கொண்டே தூங்கி போனால் ...

விக்ரமோ இது பற்றிய சிந்தனை இல்லாமல் மொட்டைமாடியின் நிலவொளியை ரசித்துக்கொண்டே ரஞ்சியுடன் கனவு லோகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தான் ...

ஒரு நாள் அந்த ஒரு நாள்

உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்

அது மறந்து போகுமா

கனவா வெறும் கதையா

இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா

அது கரைந்து போகுமா (கரைந்து போகுமா)

உன் நினைவு தழுவி இருந்தேன்

அந்த உறக்கம் தழுவ மறந்தேன் நீ அரிவாயோ

உன்னை பார்க்க அன்று பிறந்தேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.