(Reading time: 29 - 57 minutes)

23. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

யுக்தா சென்னைக்கு கிளம்ப முடிவெடுத்ததும்... கவி மதுரைக்கு சென்று சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருவதாகவும்... தேவா யுக்தாவை கூட்டிக் கொண்டு சென்னைக்கு வருவதாகவும் முடிவு செய்யப்பட்டு கவி கிளம்பி மதுரைக்கு சென்றாள்...

விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு வந்து மீண்டும் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும்போது அங்கிருந்து செல்ல மனசு வராதே அதுபோல் தான் இருந்தது யுக்தாவிற்கு... தாத்தா பாட்டியை விட்டு கிளம்ப மனசே வரவில்லை அவளுக்கு.... "இங்கப் பாரும்மா நீ உன் புருஷன் கூட சந்தோஷமா வாழப் போற பாரு... கவலைப்படாம போய்ட்டு வா..." என்றனர் தாத்தாவும் பாட்டியும்...

"அப்படி நடந்தா நீங்க சொன்ன மாதிரி என்கூட வந்து இருக்கனும் பாட்டி..." என்று எந்த தயக்கமும் இல்லாமல் கூறினாள் யுக்தா.

"கண்டிப்பா வந்து இருப்போம்..." என்று கூறி வழி அனுப்பி வைத்தனர் இருவரும்...

முதலில் கவியும் சாவித்திரியும் சென்னை வந்தனர்... பின் யுக்தாவும் தேவாவும் வந்ததும்... சாவித்திரி யுக்தாவை கட்டிக் கொண்டார்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

"யுக்தா ஏண்டா இப்படி செஞ்ச... இப்படி சொல்லாம கொல்லாம போய்ட்டியே... எங்களையெல்லாம் நீ நினைச்சு பார்க்கலையா...??  என்னோட யுக்தா தெளிவான பொண்ணுன்னு நினைச்சு தானே... நீ அந்த வீட்டில் நல்லபடியா இருப்பேன்னு  நானும் ஊருக்குப் போனேன்... நீ இப்படி செய்வேன்னு தெரிஞ்சிருந்தா நான் இங்க சென்னையிலேயே இருந்திருப்பேனே..." என்று வருத்தப்பட்டாள் சாவித்திரி.

"ஸாரி சாவிம்மா... அப்போ அப்படி பண்றது தான் நல்லதுன்னு நினைச்சு செஞ்சிட்டேன்... நீங்களெல்லாம்  வேதனைப் படுவீங்கன்னு தெரிஞ்சும் இப்படி செஞ்சுட்டேன்... ஸாரி..." என்று யுக்தா மன்னிப்பு கேட்டாள்.

"எங்களை விடு யுக்தா... நாடு விட்டு நாடு போய் இருக்காங்க உன்னோட அப்பாவும் அம்மாவும்.... உன்னைப்பத்தி எந்த தகவலும் தெரியாம எவ்வளவு கஷ்டப்பட்ருப்பாங்க..."

"புரியுது சாவிம்மா... ஸாரி இனிமே இப்படி யோசிக்காம எதுவும் பண்ணமாட்டேன்..." என்று சாவித்திரியை சமாதானப்படுத்தினாள்...  ஏற்கனவே பிருத்வியை பற்றியோ இல்லை அந்த வீட்டுக்கு செல்வதைப் பற்றியோ... இப்போது யுக்தாவிடம் எதுவும் பேச வேண்டாம்... அவள் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும்... என்று கவி சொல்லி சாவித்திரியை கூட்டி வந்ததால்.. அவள் அதைப்பற்றி யுக்தாவிடம் பேசவில்லை...

யுக்தா சென்னைக்கு வந்துவிட்ட தகவல் செந்திலுக்கு தேவாவின் மூலம் தெரிய வந்ததும்... முன் சொன்னது போல... யுக்தாவை பார்க்க பிருத்வியை தவிர மற்ற மூவரும் சென்றனர்...

அவர்களை பார்த்த யுக்தாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமும்... ஒரு பக்கம் அவர்களை தவிக்க விட்டு வீட்டை விட்டுப் போனதில் குற்ற உணர்வும் கொண்டாள்... அவர்கள் மூவரும் வீட்டிற்குள் வந்த போதே பிருத்வியும் வந்திருப்பானோ என்று ஒரு நொடி நினைத்து ஏமாந்துப் போனாள்...

அப்போது தேவாவும் அங்கு தான் இருந்தான்... சாவித்திரி அவர்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வரப் போனாள்... கவிக்கோ இப்போது தான் சம்யூ இங்கு வந்தாள்... அதற்குள் வீட்டிற்கு அழைத்துப் போக வந்துவிட்டார்களோ என்று நினைத்தாலும்... எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..

"யுக்தா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே... உங்க ரெண்டுபேருக்கும் எல்லாம் சரியாயிருக்கும்னு கவனக் குறைவா இருந்துட்டேனே..." என்று வளர்மதி வருத்தப்பட்டாள்.

"மதி ஏன் பழசையே பேசிக்கிட்டு... அதான் யுக்தா நல்லப்படியா வந்துட்டாள்ள விடு..." என்று மதியிடம் சொல்லிவிட்டு " எப்படிம்மா இருக்க யுக்தா" என்று விசாரித்தார் செந்தில்...

"நல்லா இருக்கேன் மாமா..." என்றாள் யுக்தா...

"அங்கிள் ஆன்ட்டி நீங்க ரெண்டுப்பேரும் என்னை மன்னிக்கனும்... எனக்கு யுக்தா இருக்குற இடம் தெரிஞ்சும் யாருக்கு சொல்லாம... உங்களையெல்லாம் கஷ்ட்ப்படுத்திட்டேன்..." என்று தேவா மன்னிப்புக் கேட்டான்.

"உன்மேல கோபம் வந்ததென்னமோ உண்மை தான்... இப்பொ யுக்தாவை பார்த்துட்டதால அது பெருசா தெரியல... விடு எங்கக்கிட்ட பொய் சொன்னது உனக்கும் கஷ்டமாகத் தானே இருந்திருக்கும்..." என்றார் செந்தில்...

எப்போது அண்ணியை பார்ப்போம் என்று இருந்த பிரணதிக்கோ... இங்கு வந்ததும் தன்னால் தானே இந்தப் பிரச்சனையெல்லாம் என்ற குற்ற உணர்வு எழுந்தது... அதை அப்படியே யுக்தாவிடமும் கூறிவிட்டாள்...

"அண்ணி ஸாரி... எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம்...  அன்னைக்கு நான் மட்டும் வரூனை அங்க வர வைக்கலன்னா நீங்க வீட்டை விட்டு போயிருக்கவே மாட்டீங்கள்ள... ஐ அம் ரியலி ஸாரி அண்ணி..." என்று உருகி பேசினாள்...

"பிரணதி எல்லாத்துக்கும் நீ மட்டும் காரணமில்ல... நானும் தான் வரூனை அங்கப் பார்த்ததும் கிளம்ப சொல்லியிருக்கனும்... இல்ல எல்லார்க்கிட்டேயும் சொல்லியிருக்கனும்... ரெண்டுமே செய்யல... பிருத்வி வரூனை பார்த்தது தெரிஞ்சும் அதுக்கு நான் உடனே விளக்கம் கொடுக்கலையே... அப்போ என்மேலேயும் தப்பு இருக்கே... அதுமட்டுமில்லாம உங்கக்கிட்டெல்லாம் சொல்லாமலேயே வீட்டை விட்டுப் போனதும் தப்புத்தானே....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.