(Reading time: 29 - 57 minutes)

மாலை வரையுமே அதே குழப்பத்தில் தான் இருந்தாள் யுக்தா... அன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்ததால் தேவாவும் அங்கேயே இருந்தான்.... அப்போது வரூனோடு திரும்பவும் பிரணதி வந்தாள்... கவி தான் அவர்கள் இருவரையும் வரவேற்றாள்... யுக்தா காணாமல் இருந்த போது அவளை தேடும் முயற்சியில் இருந்த போது வரூனுடன் அவளுக்கும் நட்பு  ஏற்பட்டது... பிரணதியையும் முன்பே தெரிந்ததால் அவர்களை சகஜமாக வரவேற்றாள்...

இவர்களும் யுக்தா வீட்டை விட்டு சென்றதற்கு ஒரு காரணம் என்றாலும்... அவள் கோபமெல்லாம் பிருத்வி மேல் மட்டும் தான்... என்னத்தான் பிருத்வி யுக்தா திருமண விஷயத்தில் யுக்தா மீது கவிக்கு கோபம் இருந்தாலும்... பிருத்வி மீது தான் அதிக கோபம் அவளுக்கு... அதனால் தான் எங்கே பெரியவர்கள் முன்னே பிருத்வி மீதுள்ள கோபத்தில் ஏதாவது பேசிடுவோமோ என்று அவள் செந்தில் மதி முன்னிலையில் அமைதியாக இருந்தாள்... ஆனால் இப்போது வரூன் பிரணதியிடம் நல்லப்படியாகவே நடந்துக் கொண்டாள்.

கவி வாங்க வாங்க என்று வரவேற்றதும் தான் தேவாவும் யுக்தாவும் அவர்களை பார்த்தார்கள்... பின் அவர்களை இருவரும் வரவேற்றனர்... சாவித்திரியோ இவ்வளவு நாள் இங்கு இல்லை என்பதால்... தேவையான பொருட்களை வாங்க சென்றிருந்தாள்...

உள்ளே வந்த வரூன் முதலில் தேவாவிடம்... "என்ன தேவா யுக்தா உன்னோட தாத்தா பாட்டி வீட்டில் தான் இருந்தான்னு என்கிட்ட மட்டுமாவது சொல்லியிருக்கலாமே... நான் எவ்வளவு கவலையா இருந்தேன் தெரியுமா..." என்று கேட்டான்.

"ஸாரி வரூன்... நீங்கல்லாம் வருத்தப்பட்றதை பார்த்தும் சொல்ல முடியாத நிலைமையில் இருந்தேன்..." என்று தேவா சொன்னதும் கவி சிரித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

எதற்காக இந்த சிரிப்பு என்று எல்லோரும் அவளை பார்க்க... " அதுவந்து தேவா இன்னும் எத்தனை பேர் கிட்ட ஸாரி கேக்கனுமோன்னு நினைச்சேன்... அதான் சிரிப்பு வந்துடுச்சு..." என்றாள்.

உடனே யுக்தாவும்... " ஆமாம் ஆமாம் தேவா ஸாரி கேக்க வேண்டிய லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கும் போல" என்றதும்...

"பண்றதால்லாம் பண்ணிட்டு ஸாரி கேக்கறவங்க லிஸ்ட்ட கணக்கெடுக்கிறியா..." என்று தேவா கோபப்பட்டான். எல்லோரும் சிரித்தார்கள்.

பின் பிரணதி பேச ஆரம்பித்தாள்... "அண்ணி... அப்பா அம்மா இருக்கும் போது என்னால எதுவும் பேச முடியல... அதான் இப்போ வரூனோடு வந்தேன்...

நீங்க எங்க எங்கேஜ்மென்ட்க்கு வரனும்னு ஆசைப்பட்றோம் அண்ணி...

நீங்க இல்லன்னா நான் வரூன் லவ் சொன்னதும் அக்சப்ட் பண்ணியிருப்பேனான்னே தெரியல... இப்போ எங்க எங்கேஜ்மென்ட் நடக்கறதுக்கே நீங்க தான் அண்ணி காரணம்... அதனால நீங்க கண்டிப்பா வரனும்..."

"பிரணதி... சம்யூ எங்கேஜ்மென்ட்க்கு வராம இருக்கறது தான் நல்லது... ப்ளீஸ் அவளை கட்டாயப்படுத்தாத..." என்று கவி சொல்ல... யுக்தாவும் அதற்கு சம்மதிப்பது போல் இருந்தாள்...

உடனே வரூனோ... "யுக்தா நீ ஏன் பிருத்வி பத்தி யோசிக்கிற... எனக்காக வரக் கூடாதா..?? நான் உன்னை தங்கையா நினைக்கிறேன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்... என்னோட எங்கேஜ்மென்ட்க்கு நீ என்னோட தங்கையா நிக்க வேண்டாமா...??

கவி... யுக்தா எனக்கு எப்படியோ நீயும் அப்படித்தானே... நீங்கல்லாம் வந்தா எனக்கு சந்தோஷமா இருக்காதா...?? பிருத்வியை தவிர எனக்கு க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் யாருமில்ல... அப்படியே ரெண்டு மூனு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க... ஆனா அவங்கல்லாம் பக்கத்துல இல்ல... அதனால நீங்கல்லாம் வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்..." என்றான்.

அப்போதும் இருவரும் அமைதியாக இருந்தனர்... உடனே பிரணதியோ தேவாவை பாத்த்து... " தேவாண்ணா நீங்க இவங்க ரெண்டுப்பேருக்கும் எடுத்து சொல்லலாமில்லை..." என்றாள்.

அவள் அண்ணன் என்று அழைத்ததில் சந்தோஷப்பட்ட தேவா... "இந்த தங்கச்சிக்காக  இதக் கூட செய்யமாட்டேனா இந்த அண்ணன்... அவங்கள கடத்தியாவது கூட்டிட்டு வந்துட்றேன்..." என்றான்.

"இங்கப் பாருங்க அந்த அண்ணன் தங்கை சென்டிமென்ட் சக்ஸஸ் ஆகறதுக்குள்ள... இந்த அண்ணனுக்காக ஒத்துக்கோங்க சிஸ்டர்ஸ்..." என்று கெஞ்சினான் வரூன், உடனே இருவரும் சிரித்துவிட்டு நிச்சயத்தார்த்ததிற்கு வருவதாக ஒப்புக் கொண்டனர். பின் பிரணதியும் வரூனும் சந்தோஷமாக கிளம்பினர்.

இரவு வேலை முடித்து பிருத்வி வீட்டுக்கு வந்தான்... மூவரும் யுக்தாவை சென்று பார்த்தார்களா... அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் எதிர்பார்ப்போடு இருந்தான்.

அவன் எதிர்பார்ப்பை போக்காமல் மதியே யுக்தாவைப் பற்றி அவனிடம் பேசினாள். "யுக்தாவுக்கு  உன்மேல கோபம் இல்ல பிருத்வி... நீ போய் அவளைப் பாரு... அவக்கிட்ட பேசு... அவ சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுவாடா.. ஏற்கனவே நிச்சயதார்த்ததுக்கு பிரணதியும் வரூனும் கேட்டுக்கிட்டதால வரேன்னு சொல்லியிருக்கலாம்... அவ நிரந்தரமா வீட்டுக்கு வர்றது உன்கிட்ட தாண்டா இருக்கு..." என்று சொல்லிவிட்டு சென்றாள் மதி.. ஆனால் நிச்சயதார்த்தம் வரையிலுமே அவன் அவளை பார்க்க செல்லவில்லை.

நிச்சயதார்த்த நாளும் வந்தது... அன்று காலை மாதவனும் சுஜாதாவும் நியூயார்க்கிலிருந்து வந்தார்கள்... வந்ததுமே இருவரும் யுக்தாவை கட்டிக் கொண்டு அழுதனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.