(Reading time: 29 - 57 minutes)

"யுக்தா ஏண்டா இப்படியெல்லாம் செய்ற... இப்படி யாருக்கும் சொல்லாம போய் எங்களையெல்லாம் பயமுறுத்திட்டியே... எங்களை பத்தி யோசிச்சியா... எங்க ரெண்டுப்பேருக்கும் நீ தானே உயிர்.." என்று சுஜாதா அழுதாள்.

"நான் இனியாவது உன்கிட்ட ஃப்ரண்ட் போல இருக்கனும்னு சொல்வேனே... இப்போக் கூட அப்பாக்கிட்ட கூட உனக்கு சொல்லிட்டு போகனும்னு தோணலையே... எங்க மேலெல்லாம் இன்னும் உனக்கு கோபம் போகலையாடா..??" என்று கேட்டார் மாதவன்.

"என்னப்பா எனக்கு யார் மேலயும் கோபமில்லை... கொஞ்சம் தனியா இருக்கனும்னு தோனுச்சுப்பா... நீங்க ஏன் இப்படி ஃபீல் பண்றீங்க... அதான் நான் வந்துட்டேன் இல்ல... ஸாரி இனி எப்பவும் இப்படி செய்யமாட்டேன்.. அம்மா ஸாரிம்மா அழாத.."  என்று இருவரையும் சமாதானப்படுத்தினாள் யுக்தா... பின் மாலை வந்ததும் மாதவனை தவிர மற்ற அனைவரும் நிச்சயதார்த்ததிற்கு கிளம்பினர்.

வரூன் வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது... அவர்கள் வீட்டின் அந்த பெரிய வரவேற்பறையில்  நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் நடைபெறவும்... சாப்பாடு பந்தி வெளியில் தோட்டத்தில் நடைபெறவும் ஏற்பாடு செய்திருந்தனர்... பிருத்வி வீட்டில் எல்லோரும் முன்னரே வந்துவிட்டனர்... அழகு நிலையத்தில் இருந்து வந்திருந்த பெண்கள் பிரணதியை அலங்கரித்தனர்... வரூனும் தயாராக இருந்தான்...

நிகழ்ச்சிக்கு வருபவர்களை பெரியவர்கள் வரவேற்றாலும்... இப்போது அவர்கள் வீட்டிற்குள் சென்றுவிட... இரண்டுப்பேருக்கும் தொழில் முறையில் தெரிந்த முக்கியமான ஒருவரின் வருகைக்காக பிருத்வி வெளியில் காத்துக் கொண்டிருந்தான்... ஆனால் உண்மையில் அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது யுக்தாவின் வருகைக்காக...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

அவனை அதிகம் தவிக்கவிடாமல் யுக்தா அவள் குடும்பத்தோடு கால் டாக்ஸியில் வந்து இறங்கினாள்... முதலில் இறங்கிய அவள் பார்த்தது பிருத்வியை தான்... அவனை நேருக்கு நேராக பார்த்தவள் பின் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்... அவனை பார்க்காமலே அவள் வீட்டிற்குள் செல்ல.... அவள் பின்னால் வந்த கவியோ பிருத்வியை முறைத்துக் கொண்டே உள்ளேப் போனாள்... அவர்கள் பின் வந்த சாவித்திரிக்கும் சுஜாதாவிற்கும் பிருத்வியிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் அவனைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனார்கள்...

கால் டாக்சியை அனுப்பிவிட்டு வந்த தேவா தான் பிருத்வியை பார்த்து பேசினான்... "ஹாய் பிருத்வி... எப்படி இருக்கீங்க..." என்றவன் "அப்புறம் ரொம்ப ஸாரி பிருத்வி... யுக்தா இருக்குற இடத்தை சொல்லாம இருந்துட்டேன்... என் மேல கோபம் இல்லையே..." என்று கேட்டான்.

"அய்யோ அப்படியெல்லாம் இல்லை தேவா... யுக்தா உங்க பாட்டி வீட்ல சேஃபா தானே இருந்தா... அது எல்லோருக்கும் இப்போ நிம்மதியா இருக்கு..." என்றான் பிருத்வி.

"என்ன இங்க நிக்கற..." என்று தேவா கேட்டதற்கு... "முக்கியமான நபர் வர வேண்டியிருக்கு... நீ உள்ள போ.." என்று அனுப்பி வைத்தான்.

வீட்டுக்குள்ளே வந்த அனைவரையும் செந்தில், மதி, வரூன் மற்றும் அவனின் அப்பா, அம்மா அனைவரும் வரவேற்றனர். பின் கவியும் யுக்தாவும் பிரணதியை பார்க்க அவள் இருக்கும் அறைக்கு செல்ல... பிரணதி தயாரானதும் அவளை தனியாக சந்திக்க உதவ வேண்டும் என்று வரூன் இருவரிடமும் கேட்டுக் கொண்டான்.

இருவரையும் பார்த்த பிரணதி சந்தோஷப்பட்டாள்... பின் அவளை அலங்கரித்து முடித்ததும்... வீட்டு பின் வாசல் வழியாக கவி அவளை வரூனைப் பார்க்க அழைத்துச் சென்றாள்... அவர்களை தனியாக விட்டுவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

பச்சையும் பிங்க்கும் கலந்த டபுள் ஷேட் கலரில் தங்க நிற பார்டர் கொண்ட பட்டுப்புடவை அணிந்து அதற்கேற்ற நகைகளோடு பிரணதி ஜொலிக்க... அவளை பார்த்து அசந்துப் போனான் வரூன்... அவனும் அவள் ஆடைக்கேற்றார் போல் பிங்க் கலரில் சட்டையும்... கருப்பு என்றும் ப்ரவுன் என்றும் சொல்ல முடியாத கலரில் பேண்ட்டும் என்று சாதாராணமாகவே இருந்தான்...

அவன் அருகில் பிரணதி வந்தாள்... அவன் பார்த்த பார்வையில் தானாகவே வெட்கம் அவளை சூழ்ந்துக் கொண்டது... அவளிடம் அவன் பேச ஆரம்பித்தான்...

"பிரணா... இன்னைக்கு நமக்கு எங்கேஜ்மென்ட்..."

"ம்ம்.."

"அப்புறம் பிருத்வி யுக்தா ஒன்னா சேர்ந்ததுக்கு அப்புறம் தான் கல்யாணம்னு முடிவுப் பண்ணியிருக்கோம்..."

"ம்ம்..."

"நீ புடவைக் கட்டி ஃபர்ஸ்ட் டைம் வேற பார்க்கிறேன்... அதனால..."

"அதனால..."

"அதனால நம்ம கல்யாணம் நடக்கற வரைக்கும் ஞாபகத்துல இருப்பது போல..."

"ஞாபகம் இருப்பது போல..." கொஞ்சம் பயத்தோடே கேட்டாள்.

"அதுவரைக்கும் நம்மள ஜோடியா பார்த்துக்கிட்டே இருக்க ஒரு செல்ஃபி எடுப்போமா ரெண்டுப்பேரும்..." என்று அவன் கேட்டதும்..

"செல்ஃபியா... இதுக்கா இப்படி கேட்டீங்க..." என்றாள் பிரணதி பயம் தெளிந்து...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.