(Reading time: 29 - 57 minutes)

"மாம் செல்ஃபி எடுக்கனும்னு தான் கேட்டேன்... நீ என்ன நினைச்ச..." என்று வரூன் கேட்டான்.

"ஆ...ங் ஒன்னுமில்ல... ஆமாம் எதுக்கு செல்ஃபி... இப்போ எங்கேஜ்மென்ட் முடிஞ்சதும் போட்டோகிராபர் போட்டோ எடுப்பாரில்ல... அது போதாதா..??"

"ஆமாம் எடுப்பாரு... இப்படி நில்லுங்க... அப்படி நில்லுங்கன்னு அவர் சொல்லி ஒரு வழியா நிக்க வச்சு... அப்புறம் சிரிங்கன்னு சொல்ல அப்போ தான் சிரிப்பு வருமான்னு இருக்கும்... அப்புறம் பக்கத்துல இருக்கவங்க கிண்டல் பண்ணி அப்புறம் வெட்கம் கலந்து ஒரு சிரிப்பு வர்றதுகுள்ள... அந்த லைட் வெளிச்சத்துல கண்ணு கூசும்...

இப்படியெல்லாம் மெனக்கிட்டு போட்டோ எடுத்து... அதுல எது பெஸ்ட்ன்னு செலக்ட் பண்ணி லேமினேஷன் பண்றதுகுள்ள நம்ம கல்யாணமே முடிஞ்சிடும்... இப்போ நாம தனியா இருக்கோம்... ரொமப சந்தோஷமா இருக்கோம்... அப்படியே நெருக்கமா நின்னு ஒரு செல்ஃபி எடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா... " என்று அவன் கேட்டதற்கு வேண்டாம் என்று மறுப்பது போல் அவள் ஒரு பார்வை பார்க்க...

"நீ என்னென்னமோ கற்பனை பண்ண... அதுக்கு இந்த செல்ஃபி ஒன்னும் தப்பில்ல எடுக்கலாம்..." என்றதற்கு "நான் ஒன்னும் தப்பால்லாம் நினைக்கல.." என்று சினுங்கியவள் பின் செல்ஃபி எடுக்க சம்மதித்தாள்.

இருவரும் மனதில் உள்ள சந்தோஷம் பிரதிபலிக்க புன்சிரிப்போடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்... பின் இன்னொன்று எடுக்கலாம் என்றவன் வேண்டுமென்றே அவள் கன்னத்தோடு கன்னம் உரசி அவளை வெட்கப்பட வைத்தான். பின் எடுத்து முடித்ததும் அவனை முறைத்தவள்... "சரி நம்மளை தேடுவாங்க... வாங்க போகலாம்.." என்றவள் கேட்டை பார்க்க அங்கே சப்னா வந்துக் கொண்டிருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"அய்யோ அங்க பாருங்க வரூன்..." என்றவள்... "கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா.. அங்க ஒரு கொடுமை வந்து டேன்ஸ் ஆடும்னு சொல்லுவாங்களே... அதுபோல அண்ணனும் அண்ணியும் எங்கேஜ்மென்ட்லயாவது பேசிப்பாங்களான்னு பார்த்தா... இவ ஏன் இங்க வரா..." என்று கோபப்பட்டாள்.

"அவளோட தாத்தாவை இன்வைட் பண்ணியிருப்பாரு அப்பா... உடனே இவ கிளம்பி வந்துருப்பா... இவளையெல்லாம் பார்த்து பயப்படாத பிரணா... இவ ஒரு ஜுஜுபி..

எனக்கு பிருத்வியை பத்தியும் தெரியும்... யுக்தா பத்தியும் தெரியும்... இவ பக்கமே அவன் திரும்பவும் தலை வச்சு படுக்கமாட்டான்... யுக்தாவும் இவ ஒரு ஆள்ன்னு கேர் பண்ண மாட்டா... அதனால பயப்படாத..." என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துப் போனான்...

வாசலிலேயே நின்றிருந்த பிருத்வியும் சப்னாவை பார்த்துவிட்டான்... இவ எங்க இங்க வர்றா... என்று நினைத்தவன்... பின் வரூன் வீட்டில் அழைத்திருப்பார்கள் என்று முடிவு செய்துக் கொண்டான்...

சப்னாவோ அவனைப் பார்த்ததும் அங்கேயே நின்று அவனிடம் பேச... அவளை உள்ளே போக சொன்னதை கூட அவள் கண்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தாள்... கடவுள் அவன் நிலைமையை புரிந்துக் கொண்டாரோ என்னவோ அந்த முக்கிய விருந்தினர் வந்தார்...

அவரை வரவேற்று உள்ளே அழைத்துப் போனவன்... அவரை உட்கார வைத்துவிட்டு அவர் பக்கத்திலேயே அவனும் அமர்ந்தான்... அதற்கு மேல் அவனோடு பேச முடியாது என்று தெரிந்து சப்னா விலகி போய்விட்டாள்... பிருத்வியோ யுக்தாவை தேடினான்... அவளோ பிரணதி இருக்கும் அறையில் இருந்தாள்...

பின் நிகழ்ச்சி ஆரம்பித்தது... கீழே தரையில் விரித்த போர்வையில் பெரியவர்கள் எல்லோரும் அமர... ஏற்கனவே நிச்சயப் பட்டு புடவையை பிரணதி கையில் வரூன் வீட்டார் கொடுத்து அதில் தான் அவள் தயாராகியிருந்தாள்... அதனால் பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்தார்கள்...

முதலில் வரூன் வர... ஐயரோ... "மாப்பிள்ளைக்கு மச்சான் யாரு... வந்து மாப்பிள்ளைக்கு மாலை போட்டு உக்கார வைங்கோ..." என்றார்.

அதைக்கேட்டு பிருத்வி வர... இவ்வளவு நாள் பிருத்விக்கு வரூன் மீது கோபம்... இப்போது யுக்தா விஷயத்தில் வரூனுக்கு பிருத்வி மீது கோபம்... அதனால்... "இதெல்லாம் மச்சான் தான் செய்யனுமா என்ன..?? வேற யாரும் செய்யக் கூடாதா..??" என்று பந்தா காட்டினான் வரூன்...

அதை காதில் வாங்காத பிருத்வியோ... வலுக்கட்டாயமாக அவனை உட்கார வைத்து மாலையை போட்டு கன்னத்தில் சந்தனம் தடவி நலங்கு வைக்க... வரூன் பிருத்வியை முறைத்தான்... பிருத்வியோ பதிலுக்கு சிரிக்க... இதுவரை ஏதோ மனதில் இருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது வரூனுக்கு...

பின் பிரணதியை யுக்தா அழைத்து வர... பொண்ணுக்கு நாத்தனார் முறை யாரு..?? அவா வந்து பொண்ணை மாலைப் போட்டு உக்கார வைங்கோ.. என்றார் ஐயர்...

யுக்தா நீ தான் இதை செய்யனும் என்று வரூன் சொல்ல... பிரணதியை உட்கார வைத்து மாலைப் போட்டு சந்தன நலங்கு வைத்தாள்... பின் தேவாவும் கவியும் உட்கார்ந்திருக்கும் இடத்தில் உட்காரலாம் என்று போக முயற்சிக்க... அங்கிருந்த வரூனின் உறவினர் ஒருவர்... நீ தான் இவங்க வீட்டு மருமகளா..?? எங்கம்மா போற... இங்கேயே நில்லு... என்று சொல்லி பிருத்வி பக்கத்தில் நிற்க வைத்துவிட்டார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.