(Reading time: 29 - 57 minutes)

த்தை மாமா நீங்க ரெண்டுபேரும் என்னை மன்னிக்கனும்... நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்...

அப்புறம் பிரணதி நீயும் இன்னும் எல்லாத்துக்கும் நீதான் காரணம்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கக் கூடாது சரியா..." என்றாள் யுக்தா.

"விடும்மா எல்லா முடிஞ்சு போன விஷயம்... திரும்ப திரும்ப அதப் பத்தியே பேச வேண்டாம்... பிரணதிக்கும் அதத் தான் நான் சொல்வேன்... இப்போ நீ நல்லபடியா வந்ததே போதும்மா..." என்று செந்தில் சமாதானமாக பேசினார்..

சாவித்திரி அதற்குள் எல்லோருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்...

"யுக்தா உனக்கு விஷயம் தெரியுமா...?? வரூனுக்கும் பிரணதிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது... நீ எங்க இருக்கன்னு தெரியாதப்போ இந்த நிச்சயம் நடக்கனுமான்னு யோசிச்சோம்... ஆனா வரூன் அம்மாக்காக ஒத்துக் கொள்ள வேண்டியதாப் போச்சு..." என்று மதி நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை யுக்தாவிடம் கூறியதும்...

"தெரியும் அத்தை... நான் இங்க வரப் போறத பத்தி தேவா வரூன்கிட்ட சொல்லிட்டாங்க.... வரூனும் அவங்க அம்மாவும் என்கிட்ட பேசினாங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு... நான் பாட்டுக்கு வீட்டை விட்டு வந்துட்டேன்னு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு... இப்போ தான் சந்தோஷமா இருக்கு... பிரணதி வாழ்த்துக்கள்.." என்று வாழ்த்து தெரிவித்தாள் யுக்தா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

"விடும்மா திரும்ப திரும்ப ஏன் அதையே சொல்லிக்கிட்டு இருக்க... நீ இப்போ திரும்ப வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோஷமா இருக்கு..." என்றார் செந்தில்.

"மாமா உங்களை நினைக்கிறப்போ எனக்கு சந்தோஷமா இருக்கு... எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக்கீறீங்க.... ஆனா நான், பிரணதி, வரூன், தேவா எல்லோரும் ஏதோ ஒரு விதத்துல தப்பு செஞ்சிருக்கோம்... எங்களை மன்னிக்க முடிஞ்ச உங்களால பிருத்வியை மன்னிக்க முடியலையா...?? பிருத்வி அன்னைக்கு அவர் மனசுல என்ன இருக்கோ அதைத்தான் பேசினாரு மாமா...

எங்க கல்யாணம் அவருக்கு விருப்பமில்லாம நடந்தது மாமா... என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவர் மனசுக்குள்ள இருக்கறதையெல்லாம் மறக்கனும்ன்னோ இல்லை மறைச்சு வச்சிக்கனும்னோ இல்லை மாமா... என்ன அவர் பேசினதுல எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு... அதான் வீட்டை விட்டுப் போய்ட்டேன்... பிருத்வி கண்டிப்பா அதை எதிர்பார்த்திருக்க மாட்டாரு... அப்படி இருக்கும்போது பிருத்வி மட்டும் தப்பு பண்ணதா நினைச்சு ஏன் மாமா அவர்க்கிட்ட பேசாம இருக்கீங்க...." என்று யுக்தா செந்திலிடம் கேட்டாள்.

"அப்படி சொல்லும்மா... நீ இல்லாதப்ப அவன் ரொம்ப மனசொடஞ்சு போய்ட்டான்ம்மா... நீ திரும்பி வரனும்னு அவனும் ஏங்கிக்கிட்டு தான் இருந்தான்... இப்பக் கூட உன்னைப் பார்க்க அவனும் வந்திருப்பான்... ஆனா இவர் தான் அவனை வரவேண்டாம்னு சொல்லிட்டாரு... நீ இப்போ வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னதும்... இப்போ நிச்சயத்துக்கு கூட உன்னை கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டாரும்மா..." என்று மதி குறைப்பட்டதும்... செந்திலோ யுக்தாவைப் பார்த்து...

"எல்லாரும் தப்பு பண்ண மாதிரி சாதாரண தப்பு இல்லம்மா பிருத்வி செஞ்சது... நீ வீட்டை விட்டு கிளம்பி போகனும்னு நினைக்கிற அளவுக்கு அவன் பேசியிருக்கானே... அவனுக்கு பிடிக்காம தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டான் ஆனா அவனை மிரட்டி மணமேடையில உக்கார வைக்கலியே... மதிக்காக சம்மதிச்சான் தானே.. அதுக்கப்புறமும் அவன் கோபமா தான் இருந்தான்... உன்னை திட்டுவான் எல்லார்க்கிட்டேயும் டென்ஷனா பேசுவான்... அப்பல்லாம் நான் அவன் மேல கோபப்பட்டேனா...??

அவன் மனசு மாற கொஞ்ச நாள் ஆகும்னு அமைதியா தானே இருந்தேன்... ஆனா உங்களுக்குள்ள எல்லாம் சரியாகற மாதிரி எங்களுக்கு தோனும்போது அவன் இப்படி செஞ்சுட்டானே... எங்களுக்காக நீங்க உங்களை மாத்திக்கனும்னு இல்லை... ஆனால் உங்களுக்காக மாத்திக்கலாமே... உலகத்துல எல்லோரும் காதலிச்சவங்களையே தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா... அது இல்லைன்னு தெரிஞ்சதும் மனசை மாத்திக்கிறதுல என்ன தப்பு இருக்கு...

அவன் சப்னாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் அவ உன்னைப் போல இருப்பாளான்னு தெரியல... அது அவனுக்கு புரிய வேண்டாமா... அதுக்கு ஏத்த மாதிரி வாழ வேண்டாமா...?? அதெல்லாம் புரிஞ்சிக்காம அவன் இருந்தா எனக்கு கோபம் வராதா..??

நான் இங்க அவனை வர வேண்டாம்னு சொன்னேன் தான்... உன்னோட மனநிலை எங்களுக்கு தெரியல... அதனால அப்படி சொன்னேன்... ஆனா அதையும் தாண்டி அவனுக்கு உன்மேல அக்கறை இருந்தா அவன் உன்னை வந்து பார்க்க வர்றதை நான் வேண்டாம்னு சொல்லவா போறேன்... அப்படி அவன் செஞ்சா முதல்ல சந்தோஷப் பட்றது நானா தான் இருப்பேன்... ஆனா அவன் அப்படி நடந்துக்கனுமே... " என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.