(Reading time: 13 - 25 minutes)

நான் இப்படித்தான்.என்னோட எதிர்பார்ப்பு இப்படித்தான்..இதைவிட கொஞ்சம் அதிகமாவே இருக்கும்..அதை வெளிப்படையா சொல்லிட்டேன்.அதை விட்டுட்டு,நீங்களும் உங்கம்மா கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டீங்கன்னு,உதட்டை கடிச்சுக்கறது,கால் பெருவிரலால கோலத்தை போடறது,சுடிதார் துப்பட்டா முனையை சுத்தறது..கண்ணை நேரடியா பார்க்காம,ஓரக்கண்ணால் லுக் விடறது..பார்க்கும் போது சட்டுன்னு திரும்பிக்கறது..இதெல்லாம் நமக்கு செட்டே ஆகாது”என்றவள் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு,

“டான்ஸ் பிராக்டிஸ்க்கு நேரமாச்சு..வுமேன்ஸ் டே செலிபிரேஷன்க்கு இப்போவே ப்ரோகிராம்ஸ் ஆரம்பிக்கறோம்.மாசத்துக்கு ரெண்டு நாள் பங்க்ஷன் நடக்கும்.அதுக்கு ப்ரிப்பேர் செய்யணும்..அதனால இப்போ பாய்”என்றவள் அவனது பெற்றோரிடமும் சொல்லிவிட்டு,அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

“சம்மதம் சொல்லிட்டாளா”என்று ஆவலாக தாமரை கேட்க...

“நீங்க அத்தையா நடந்துக்காம,அம்மாவா நடந்துக்க சம்மதம்னா,அவளுக்கும் சம்மதம்னு சொல்லிட்டுப் போறா”என்று பெரிய பொய்யை அம்மாவிடம் சொன்னான்.

“அம்மாவாவா..அதெப்படிடா முடியும்”என்று அவரும் சேர்த்து ஆரம்பிக்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“என்னம்மா”என்று பரிதாபமாக அவன் இழுக்கவும்..

“அம்மா ரோலையும்,மாமியார் ரோலையும் என்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே கூடாது”என்று கோபமாக சொல்வது போல் சொன்னவர்,

“ஒரு பிரண்டா நடந்துக்குவேன்”என்று சொல்ல,யஸ்வந்த் நிம்மதியடைந்தான்.

குமார் அமைதியாக இருக்காமல்,”உங்கம்மாவுக்கு வயசை குறைச்சு காமிக்கனும்னு ரொம்ப ஆசை யஸ்வந்த்.அதான் அப்படி சொல்றா”என்று சொல்லி,முறைப்பை பரிசாக வாங்கிக்கொண்டவர்,தன்னுடைய மொபைலை ஆன் செய்துவிட்டு,”இப்போ பாரு”என்று சொல்லிவிட்டு தாமரை போனுக்கு ரிங் விட,

“உள்ளமட்டும் நானே,என் உசிரக் கூடத்தானே..என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்”என்று பாட..

“என் மருமக தான் வைச்சுக் கொடுத்துட்டு போனா.நாங்க பிரண்ட்ஸ் ஆகிட்டோம்.இனி அவ போன் வந்தா,இந்த டோன் தான் வரும்”என்று தாமரை பெருமைப்பட்டுக்கொள்ள..

‘கடைசில என்னோட அம்மாவுக்கும் ரிங்டோன் வைச்சுக் கொடுத்துட்டுப் போயிட்டாளா ரிங்க்டோன் ராணி’என்று புலம்பியவனுக்கு தெரியாது..அவனுடைய போனையும்,பேசிக்கொண்டிருந்த இடைவெளியில் எடுத்து,வில்லங்கமான பாடலை டோனாக வைத்துவிட்டு சென்றாள் என்பது...

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.