(Reading time: 10 - 20 minutes)

ரு இடத்தில் ஒரு நிமிடம் நில்லாத கால்களை இப்போது மெதுவாக நடந்து வரக் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. அவளை பார்த்த நொடியிலிருந்து வேகமாக அடிக்கும் இதயத் துடிப்பை கட்டுப் படுத்த இயலாதவனாக அவள் முகத்திலிருந்து கண்களைத் திருப்ப இயலாமல் தவித்துக் கொண்டிருந்த ரூபனிடம் திரும்பினாள் அவள். உண்மையிலேயே தான் பார்க்க நன்றாக இல்லையோ? என்று மனதிற்குள் எழுந்த மிக முக்கியமான சந்தேகத்தை கேட்டே ஆகிவிட வேண்டும் என்ற உந்துதலோடு,

"அத்தான், நான் எப்படி இருக்கேன். சேலை எனக்கு நல்லா இல்லையோ?" எனக் கேட்க 

 கொடி போல நாசூக்காக அவளைத தழுவியிருந்த சேலையையும், அவள் முகத்திற்கு முதன் முறையாக அணிந்திருந்த மிதமான ஒப்பனையும், முடியை நவீனமாய் அலங்கரித்து, தாராளமாய் அதே நேரம் அவள் முடி அலங்காரத்திற்கு பொருத்தமாய் அவள் அணிந்திருந்த மணமும் , அழகும் கொள்ளைக் கொள்ளும் மலர்ச் சரங்களும் , அவளின் அழகிற்கு கூடுதல் அழகூட்ட அவள் கைகளிலும், காதுகளிலும் , கழுத்திலும் மின்னிக் கொண்டிருந்த பொன் நகைகளையும் ,மொத்தத்தில் இதுவரை தான் பார்த்த அனிக்காவாக இல்லாமல் அசரடிக்கும் அழகோடு அந்த அழகை உணராத பேதமையோடு இருந்தவளை மீண்டும் ஒருமுறைப் பார்க்க கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் முற்றிலுமாய் பார்த்தவன்.

"சேலை உனக்கு ரொம்ப அழகா இருக்கு அனி, அவன் உன்னை சும்மா கிண்டல் செய்யிறான். 

நீ மூஞ்ச இப்படி உர்ருன்னு வச்சிட்டு இருக்கிறது தான் அழகாயில்லை' எனச் சொல்ல,

"அப்படியா அத்தான், அவன் ஒரு லூசு, மெண்டல், நான் இனிமே அவன் என்னச் சொன்னாலும் கேட்க மாட்டேன்" என்று பழைய கலகலப்பிற்கு திரும்பினாள்.

"அத்தான் எனக்கு ஒரே ஒரு ஹெல்ப்"

"என்னம்மா?"

"என் கூட வீட்டுக்கு உள்ள வரைக்கும் வாங்களேன். எனக்கு சேலை உடுத்திட்டு நடக்கிறது..............தடுக்கி கீழ விழுந்திருவேனோன்னு பயமா இருக்கு" பரிதாபமாய் சொல்ல,

"வேணும்னா சொல்லு உன்னை நடக்க விடாம தூக்கிட்டு போக கூட நான் ரெடிச் செல்லம்" எனச் சொன்ன மனதை கட்டுப்படுத்தி , சரி வா" என அழைத்துச் சென்றான். இருவரும் இணைந்து வீட்டின் வாயில் வரை நடந்திருக்க அவர்கள் பின்னிருந்து 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அனி இங்க வா" எனக் குரல் கேட்க ,

"ஐ அம்மா வந்தாச்சு" என அவனிடமிருந்து நகர்ந்து சாராவுடன் இணைந்துக் கொண்டாள் அவள்.

 ரூபனுடைய காதல் அனிக்காவின் குணத்தை அடித்தளமாகக் கொண்டது . ஒரே குடும்பம் மற்றும் சிறுவயது முதலாக ஒருவரை ஒருவர் அறிந்தவர்களே. ஆதலால் அவள் முகத்தைப் பார்த்து அவனுக்கு ஈர்ப்பு ஏற்ப்பட வேண்டிய சூழ்நிலை அங்கு இல்லை. ஆனால், இப்போது அவளை சேலையில் பார்த்த நேரம் முதலாக அவனால் அவளை விட்டு கண்ணை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது." இப்படியா ஒருத்தி அழகாக இருந்து தொலைப்பாள்?!!! " என தன்னையேக் கேட்டுக் கொண்டான் அவன்.

 பெண்வீட்டிற்கு புறப்பட்டனர். அரை மணி நேர தூரம் கடந்த பின் அந்த ஹாலுக்கு வந்துச் சேர்ந்தனர். திருமணம் நடைபெறவேண்டிய ஆலயத்திற்கு அருகாமையில் இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். ஹாலின் உள்ளே நுழையும் முன்பே மாப்பிள்ளை வரவேற்பாக ப்ரீதாவிற்கு சொந்த அண்ணன் இல்லாத காரணத்தினால் உறவு முறை அண்ணன் ஒருவர் தீபனுக்கு மாலை அணிவித்து, தங்க செயின் அணிவித்து வரவேற்றார். 

 காலை உணவு ஒரு புறம் அங்கும் பறிமாறப்பட்டுக் கொண்டிருக்க பெண்ணை அலங்கரித்து ஆலயத்திற்கு கூட்டி வர மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டனர்.பெண்ணை ஆலயத்திற்கு அழைத்து வருவதற்கு சற்று முன்னர் அவன் ஆலயத்திற்கு சென்றால் போதும் என்பதால் தீபன் அங்கு ஹாலிலேயே மணமகன் அறையில் அவன் நண்பர்களோடு காத்திருந்தான். மாப்பிள்ளை உபச்சாரம் குறைவில்லாமல் நடந்தது. 

 திருமணத்திற்கான பட்டுச் சேலை , ரீத், நெட் , மாலை, அலங்காரப் பொருட்கள், பழங்கள் என ஆளுக்கொரு தட்டோடு தீபன் வீட்டுப் பெண்கள் அணி வகுக்க ஒரு வழியாக மணப்பெண்னை அலங்கரித்து ஆலயத்திற்குள் அழைத்து வந்தார்கள். ஆலயத்தில் தீபனையும் , ப்ரீதாவையும் அருகருகே அமர வைக்க, தீபன் ப்ரீதாவின் முகத்தைப் பார்க்க முயல அறை குறையாக பார்க்க கிடைக்க அவள் முகத்தை மறைக்கும் நெட்டைக் குறித்து சலித்துக் கொண்டான்.அவன் நண்பர்கள் வேறு அவன் முயற்சியைக் கண்டுக் கொண்டதைப் பார்த்து அவர்கள் கிண்டலுக்கு பயந்து நல்ல பிள்ளையாக திருமண திருப்பலி (Mass) யில் ஜெபிக்க ஆரம்பித்தான்.

 மணப்பெண் தோழர் தோழியாக கிறிஸ்ஸீம் , பிரபாவும் இருக்க, பிரபாவுக்கு அருகிலேயே இருந்தாள் அனிக்கா. அவள் மடியில் ஜாக்குலின் மகன் பிரின்ஸ் இப்போது உட்கார்ந்திருந்தான்.

 ரூபனின் மனம் வழிப்பாட்டில் லயிக்காமல் அவன் கண்கள் அனிக்காவையே சுற்றி வந்தது.

 பைபிள் வாசகங்கள், தொடர்ந்து மறையுரை (preaching) கடந்த பின்,பாதிரியார் அவர்கள் இருவரும் திருமணம் செய்ய சம்மதிப்பதை முதலில் உறுதிச் செய்துக் கொண்டார். திருமண வார்த்தைப்பாடு ஆரம்பித்தது.

பாதிரியார் சொல்ல மணமக்கள் திரும்பச் சொன்னார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.