(Reading time: 14 - 27 minutes)

வன் “டாக்டர்ஸ்” என்று சொன்னதை கவனிக்காமலே

“ ஓஹோ இதையே வேலைன்னு சொல்லிட்டு ஒரு க்ரூப்பே சுத்துறிங்களா? உங்க மோட்டிவ் என்ன?” என்றாள்.

“ வேறென்ன உயிர் தான்.. அதுக்காகத்தான் போராடுறோம்” என்றான் தமிழ் தொழில் தர்மம் மாறாமல்.

“ச்ச இதை சொல்ல வெட்கமாய் இல்லையா உங்களுக்கு ?” என்று கேட்டாள் யாழினி.

“ மேடம் மைன்ட் யுவர் வொர்ட்ஸ்..ஒரு டாக்டர்கிட்ட பேசுறது நினைவில் இருக்கட்டும்.”

“ சிடுமூஞ்சி.. நீ டாக்டரா?” என்று மனதிற்குள் கேட்டவள், அப்போதுதான் விசிட்டிங்கார்டில் அவனது பெயரை பார்த்தாள். ஒருநிமிடம் தயங்கியவள் இப்போது வேறு கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தாள்.

“ஒரு டாக்டராய் இருந்துகிட்டே இப்படி நடந்துக்குறிங்களே ! இதென்ன அநியாயம் ?.. ஓஹோ பேப்பர்லபடிச்சிருக்கேன்..ஆர்கன் (ORGAN) திருட்டு பத்தி.. இதற்கு உங்களை மாதிரி டாக்டர் பண்ணுற சதியா இது ?” என்றாள்யாழினி வழக்கம் போலவே குழப்பும் பாவத்தில்.

“ வாட்????” என்று அதிர்ந்தான் தமிழ்.

“ என்ன சார் உண்மைய உடனே கண்டுபுடிச்சிட்டேன்னு ஷாக் ஆகிட்டிங்களா? சோ காரை வேகமாய் ஓட்டுறமாதிரி நீங்களே யார் மீதாவது மோதுவிங்க.. அதற்கு அப்பறம் உயிரை காப்பத்துற மாதிரி முன்வந்து யாருக்கும் தெரியாமல் ஆர்கன் திருடுறிங்களா?..இதற்குத்தான் இன்னைக்கு இவ்வளவு வேகமாய் காரோட்டி வந்தீங்களா?” என்றாள்.

அவள் பேச்சில் கொதித்து போயிருந்த தமிழ், அவளின் கடைசி வாக்கியத்தை கேட்டதும்தான் இன்று நடந்ததை நினைவுகூர்ந்தான். “ ச்ச இவ காலைல நாம பார்த்த சோடாபொட்டி” என்று வாய்விட்டே அவன் கூற மீண்டும் எகுற ஆரம்பித்தாள் யாழினி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

“ யாரு சோடாபொட்டி” என்று அவள் கத்த, தமிழோ என்ன நடந்தது என்பதைஓரளவு புரிந்துகொண்டான்… ஏட்டிக்குப்போட்டியாய் பேசிக்கொண்டே போனால், இவள் பேசிக்கொண்டே போவாள், என்று உணர்ந்தவன் சட்டென இறங்கி வந்தான். நடந்ததை அவளுக்கு புரியும்படி விளக்கினான்.. காலையில்  தான் வேகமாய் வந்ததற்கு காரணத்தையும் எடுத்துக்கூறினான்.சற்றுமுன் தாம் தூமென குதித்தவன், இப்போது இறங்கி வருவதை பார்க்க அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அவனை இன்னும் கொஞ்சம் சீண்டிப்பார்க்க விரும்பினாள் யாழினி..

“நிதானமில்லை.. அதுதான் எல்லாத்துக்கும் காரணம். காலையில காரை ஓட்டியதிலும் சரி, இப்போ என் ஃபோனை எடுத்தபோதிலும் சரி.. பொறுமையே இல்லாதவர் எப்படி சார் டாக்டர் ஆனிங்க?”என்றதும் அவளின்  கேள்வி அவனின் கோபத்தை உசுப்பியது.. கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல அவளுக்கு விளக்கி கூறியும் தன்னையே குறை கூறுகிறாளே! என்று பற்களைகடித்தவன்,

“ ஹேய் நடந்ததை சொல்லிட்டேன்.. நம்பலன்னா போடீ..பெரிய இவளா நீ? ஏதோ பாவம்ன்னு உங்கிட்ட பேசி என் நேரமே வீணானதுதான் வேஸ்ட்டு.. என்ன பண்ண முடியும் உன்னால்? கேஸ் போட போறியா? போட்டுக்கோ! ஆனா இனிமே இந்த நம்பருக்கு மட்டும் கூப்பிடாதே.. உன் கீச்சுக்குரலும் வளவள பேச்சும் எனக்கு தலைவலியைத்தான் கொடுக்குது.. குட் பை அண்ட் கெட் லாஸ்ட்”என்று ஃபோனை வைத்து விட்டான் தமிழ். விக்கித்து நின்றாள் யாழினி! கண்டிப்பான சுபாவம் இருந்தாலும் மோகன் கூட அவளை அப்படி திட்டியதில்லை.. மறுபடி அவனை அழைத்து பேசும் எண்ணம் கூட இல்லாமல் சோர்வாய் தலையனையில் முகத்தை புதைத்துக் கொண்டாள் அவள். விளையாட்டு வினையாகி விட்டதே! என்று அவள் பதரும் போதே “இனிதான் விளையாட்டு ஆரம்பம் “ என்று விதி சிரித்தது. விதியின் விளையாட்டை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.