(Reading time: 5 - 9 minutes)

06. சிவன்யா - ஆதித்யா சரண்

Shivanya

"னி அமைதியா இருக்க முடியாது!எனக்கு நடந்த அநியாயத்துக்கு நான் பழி தீர்ப்பேன்.எனக்கு நியாயம் கிடைக்கணும்!அதுக்காக எத்தனை உயிரை வேணும்னாலும் குடிப்பேன்!"-நள்ளிரவு கனவில் இக்குரல் ஒலிக்க திடுக்கிட்டு கண்விழித்தாள் சிவன்யா.

உயிரே உறைந்துப்போனது அவளுக்கு!!

சுற்றி கும்மிருட்டு!!அவள் இயல்பாக இருளை கண்டு அஞ்சுபவள் இல்லை.ஆனால்,இப்போது அஞ்சுகிறாள்.இருளை போக்க ஔிதரும் மெழுகுவர்த்தியை தேடி போனாள்.டிராவில் அது இல்லை.அறையை விட்டு அவள் வெளியே வர மணி பன்னிரண்டு என்று அடித்தது கடிகாரம்.அந்நேரம் அந்த ஒலியும் அவளை பயமுறுத்த ஒரு நொடி அலறிப்போனாள்.

பயத்தோடு மாடிப்படி இறங்க,கீழே ஒய்யாரமாய் அவளை வரவேற்று நின்றிருந்தது அந்த கரும் உருவம்!

"ஆ..!"-என்று அலறியவள் மேலே ஓட,எதிரே வந்து அவளை தாங்கினான் திவாகர்.

"மதி??என்னம்மா என்னாச்சு??"-அவன் நெஞ்சில் புதைந்தவள் அவனை விலகாமலே,

"அங்கே..!அங்கே..என்னமோ இருக்கு!"-என்றாள் தடுமாறியப்படி!!

"எங்கேம்மா?யாரு?அங்கே யாருமில்லையே...!"

"இ..இருக்காங்க..!-அவள் விசும்பினாள்.

"சரி..சரி..!வா!ஒண்ணுமில்லை!தூக்க கலக்கத்துல நிழலை பார்த்து பயந்துருப்ப!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

"இல்லைங்க..!"

"நீ வா!நான் கூட இருக்கேன் வா!"-என்றவன் பொக்கிஷத்தை போல அவளை அணைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.அவன் ஸ்விட்ச்சை போட அவன் அறையின் அனைத்து விளக்குகளும் எரிந்தன.

"இந்த வீடு வேணாங்க!"-அதைக்கேட்டதும் அவன் முகம் வாடியது.

"ஏன்டா?"

"இங்கே வந்ததுல இருந்து எல்லாம் தப்பாவே நடக்குது!பயமிருக்குங்க..."

"ஒண்ணுமில்லைம்மா!இனி எதுவும் பயமில்லை நான் இருக்கேன்!"

"............."

"நீ தூங்கு!நான் வெளியே படுத்துக்கிறேன்."

"இல்லை...நான் என் ரூமுக்கு போறேன்!"

"பாரு செல்லம்..அங்கே தான் நீ பயப்படுறீயே!இங்கேயே தூங்கு!"-அவள் முகத்தில் பயம் அப்பி இருந்தது.

"தூங்குடா!"

"நான் தூங்குற வரை இங்கேயே இருக்கீங்களா??"

"சரியானவ நீ??சரி..தூங்கு!"-நிம்மதியாக அவள் படுத்துக்கொள்ள,மேசையில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தான் திவாகர்.

சிறிது நேரத்தில் அவள் என்ன நினைத்தாளோ!அவனது மடி மீது படுத்துக்கொண்டாள்.

அவளது செய்கையில் சிலிர்த்துப்போனவன்,தன்னிச்சையாக அவள் தலையை கோதினான்.

சில நிமிடங்களில் நிம்மதியாக உறங்கிப்போனாள் சிவன்யா.

றுநாள் காலை...

மூடியிருந்த கண்களை திறந்தான் திவாகர்.இன்னும் சிறு குழந்தையென அவள் அவனது மடிமீது உறங்கிக்  கொண்டிருந்தாள்.

கண்களை ஒருமுறை இறுக திறந்து மூடினான்.அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

அவளது உறக்கம் சற்றும் கலையாதப்படி அவளை தலையணைக்கு மாற்றி,அவளுக்கு போர்த்திவிட்டு நகர்ந்தான்.

"திவாகரய்யா!"

"ம்..ஆ??"

"சிவன்யாம்மாவை பார்த்தீங்களா?"

"தூங்கிட்டு இருக்கா!"

"அவங்க ரூம்ல இல்லையே...!"

"என் ரூம்ல இருக்கா!"

"ஆ!"-லட்சுமி அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.அவளது பார்வையை ஓரளவு ஊகித்தவன்,

"இல்லை...ராத்திரி பயமா இருக்குன்னு சொன்னா அதான்..!நீங்க போய் பாருங்க!"-என்றவன் அமைதியாக விலக,லட்சுமி அவன் தந்த மரியாதையை குறித்துக் கொண்டாள்.

முகத்தில் கவலை ரேகை பரவ,அமைதியாக அமர்ந்திருந்தாள் சிவன்யா.

முந்திய நாள் இரவுக்கண்ட கனவு கண் எதிரே தோன்றி மறைந்தது.

"மதி!"-அவளின் எதிரே வந்தமர்ந்தான் திவாகர்.

"என்னங்க!"

"சொல்லும்மா!"

"என்னை இனி மதின்னு கூப்பிடாதீங்க!"

"ஏன்?"

"எனக்கு அதில் இஷ்டமில்லை..."

"காரணம்?"-அவள் சிறிது மௌனம் காத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.