(Reading time: 21 - 42 minutes)

 “ர்னல்! இது என்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு!”

கண்டிப்புடன் சொன்னவன்..

“சொந்தத்திலே தங்கமான பையன் அமையுதே! அப்புறம் ஏன் கவலை?”

என்றான் ஆறுதலாக..

“வாஸ்தவம் தான்! இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குதே!”, என்று அலுத்துக் கொண்டவர்,

“எல்லாம் நல்ல படியா முடியணும்ன்னு மலைக்கு வர்றதா வேண்டி நான்  மாலை போட்டு இருக்கேன்”,

அதைக் கேட்டதும் அதிர்ந்தான்! முதிய வயதில் அதுவும் பார்வையும் சரி வர தெரியாதே என்று  மனதிற்கு கஷ்டமாக இருந்தது!

அவரை தடுக்க முடியாதே! தடுக்கவும் கூடாது! அது அவர் நம்பிக்கை! என்றெண்ணியவாறு,

“உங்களுக்கு அது சந்தோஷம் கொடுக்கும்ன்னா ஓகே தான் கர்னல்! ஆனா, எனக்கு யார் தயவும் தேவையில்லை,.. அதாங்கும் இதாங்கும்ன்னு எல்லாம் அடம் பிடிக்க கூடாது!!! மாலையை கழட்டுற வரைக்கும் உங்களை பார்த்துக்க பசங்க கூடவே இருப்பாங்க! சரியா???”

என்றான்  கட்டளையாக.

மற்றவர் உதவி செய்வதை விரும்ப மாட்டார் தான்! பேசக் கூட காசு கேட்கும் தன் சொந்தப் பேரன்களை பார்த்து விட்டு வந்தவருக்கு அவன் அக்கறை நெகிழ்த்த மறுக்க முடியவில்லை அவரால்!

அவருடன் பேசி விட்டு அலைபேசியை வைக்கும் முன்,

“கல்யாணம் நல்ல படியா நடக்கும் கர்னல்!”, என்றான் நம்பிக்கையுடன்!

இதே பப்பிக்காக ஒரு முறை அவனிடம் கடுமையாக பேசியது நினைவுக்கு வந்து அவர் மனதை உறுத்தியது! அதன் பின் அவள் பேச்சை எடுப்பதே இல்லை! மறந்தும் கூட பப்பி என்று சொல்லமாட்டான்...

‘ரோசக்காரன்!’, என்று உள்ளுக்குள் திட்டியவர்..

“மொட்டையா கல்யாணம்ன்னா... யார் கல்யாணம் டா?”

என்று அவன் வாயை பிடுங்கப் பார்க்க.... அதைக் கேட்டவன்..

“ம்ம்... என் கல்யாணம்!!! ” என்று சிரிப்புடனே மழுப்பி விட்டு....

“சரி கர்னல்! உங்களுக்கு அரேன்ச்மென்ட்ஸ் செய்யணும்! அப்புறமா பேசுறேன்!”, அவரிடமிருந்து விடை பெற்று... பின், அஹமதாபாத்திற்கு சில அழைப்புகள் செய்து அவரை பார்த்துக் கொள்ள ஏற்பாடுகளை முடித்து விட்டு காஃபடேரியாவை அடைந்தான்...

காலை சிற்றுண்டியை வாங்கி விட்டு அமர டேபிளைத் தேட...

அங்கே ஓரமாக இருந்த ஒரு டேபிளில் கோகிலாவும், அஞ்சனாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் இவனுக்கு திகைப்பு..

‘நேத்து உளறி கொட்டினதுக்கு என்ன என்னத்தை கிளறி விடுறாளோ.....’, என்று நினைத்தவன்...

இந்த சமயம் அவர்கள் கண்ணில் படமால் இருப்பது தான் நல்லது என்று அப்படியே திரும்பி விட நினைத்தான் - ஆர்யமனாக...

ஆனால்.. அவன் பப்பி அவனை நிற்க விடவில்லை.. ஏற்கனவே மனதில் நிரம்பியிருந்த வெறுமை... வலி தீரும் வழி தேடி...  அதை நாடும்  பணியை செவ்வனே செய்தது அவன் கால்கள் - அவனையும் மீறி பப்பியின் தீவிரக் காதலனாக மட்டுமே!!!

அஞ்சனாவிடம், “எஸ்!! ஆர்யமன் இஸ் தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்!!”, என்று சொல்லிக் கொண்டிருந்த கோகிலா... அதிர்ந்த தன் அலைபேசியை ஒரு பார்வை பார்த்து விட்டு நிமிர்ந்தவள்,

“ஹப்பா.... நம்ம ஆளுக்கு மூக்கு வேர்த்துடுச்சு!!!”, என்று அஞ்சனாவிடம் சொல்லிக் கொண்டே எழுந்து கொண்டவளின்  பார்வை தன்னையும்  தாண்டி சென்று புன்னகைப்பதைக் கண்டு... அஞ்சனா திரும்பிப் பார்க்க.. அவள் பின்னே ஆர்யமன்!

அவன் அங்கு வந்து நின்ற நேரம்.. கோகிலா அலைபேசியை காதில் வைத்த படி நகன்று விட...

அங்கே வந்து அவன் நின்றது என்னவோ ஒரு ஷணம் தான்...

ஆனாலும்... எந்த எதிர்பார்ப்பில் இங்கே  வந்தானோ.. அது கிட்டாமல் போக.. ஏமாற்றமடைந்தவனாக.. உள்ளுக்குள் உண்டான சோர்வில் அப்படியே அமர்ந்தான் அருகில் இருந்த டேபிளில்!

காஃபடேரியாவில் அவன் மனநிலையை போலவே பாடல் இசைத்துக் கொண்டிருந்தது...

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாக தேடிப் பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

அவன் முகத்தில் என்ன கண்டாளோ?? அவன் எதிரே வந்தமர்ந்த அஞ்சனா 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.