(Reading time: 21 - 42 minutes)


புதிர்
18

சி எதிரே பரணிதரனுடன் நின்று கொண்டிருந்தான் ஆர்யமன்!!!

அவனைக் கண்டதும் சசி ஸ்தம்பித்து போனாள். அவனோ எதுவும் காதில் விழாதது போல இயல்பாக பரணிதரனை அறிமுகப் படுத்த வாயெடுக்க....

அந்த நேரம் பார்த்து… மறுமுனையில் இருந்த அஞ்சனாவின் அலைபேசி சார்ஜ் இன்றி மடிந்து போக,

‘பாஜிகிட்ட படிச்ச உருப்படியான வேலை.. இந்த ஒட்டு கேட்கிறது! அதை செய்ய முடியாம போச்சு!!!’, என்று தனக்குள் அலுத்துக் கொண்ட பொழுது…

அந்த அறைக்கு வெளியே ஒலித்த பெண் குரல் அவள் கவனத்தை ஈர்த்தது…

“எங்க மிலிட்டரி தாத்தா வேற ஏதோ மாப்பிள்ளையை பார்த்து வைச்சுட்டு அவனைத் தான் கல்யாணம் செய்யணும்னு டார்ச்சர் பண்றார்! என்ன செய்றதுன்னே தெரியலை!!!”

என்று அழுகாத குறையாக புலம்பித் தள்ள.... ‘ஒட்டு கேட்க முடியாம ஒரு கதவு மூடினாலும்... இன்னொரு கதவை திறந்து வைக்கிறே பெல்லி பாய்!’, என்று ஆவலுடன் வெளியே வந்து எட்டிப் பார்க்க...

காரிடரில் நின்று பேசிக் கொண்டிருந்தது கோகிலா!!!!

“அவரை பார்த்தாலே தொடை நடுங்கும்! நீ என்னடான்னா.... சும்மா சும்மா சமாளி பப்பி குப்பின்னு ஈசியா சொல்லிக்கிட்டு இருக்கே!”

என்று தன் உரையாடலை தொடர... அவளை நோக்கி அஞ்சனா நடக்க ஆரம்பித்தாள்..

அங்கே, ஆர்யமனோ பரணிதரனை சசியிடம் அறிமுகப் படுத்தி விட்டு,

“இது முகுந்த் ரிப்போர்ட்... கூடவே என்னோட ரிமார்க்ஸ்ஸூம் இருக்கு!”, என்று அவளிடம் அந்த ரிப்போர்ட்டைக் கொடுக்க... அதை வாங்கிப் படித்த சசி முகம் கடுப்பேறியது... பின்னே ஆர்யமன்,

“பரணிதரன் திறமையானவன் என்று முகுந்த் கணித்ததில் என்னவோ எனக்கு திருப்தி இல்லை! சரியா வருவாரான்னு நீங்களே முடிவு செய்துக்கோங்க”

என்றல்லவா எழுதியிருந்தான்!!!

‘எண்ணெய் சட்டியை காய வைச்சாச்சு! இனி வேலை ஈஸியா முடிஞ்சிடும்’, உள்ளுக்குள் சிரித்தாலும் முகத்தில் எதையும் காட்டாது பரம அமைதியாக சசியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க...

இது எதுவும் அறியாத பரணி, சசி என்ன சொல்ல போகிறாளோ என்ற பீதியில் நின்றிருக்க... அவளோ,

“முகுந்த் கணிப்பு என்னைக்கும்  தப்பாகாது! இவர் ஒரு எக்லேன்ட் ரிசோர்ஸ்ன்னு கூடிய சீக்கிரமே நீங்களே சொல்வீங்க ஆர்யமன்!!”, என்று ஸ்திரமாக சொல்ல... இருவரும் பேசிக் கொள்வதை பார்த்துக் கொண்டிருந்த பரணிதரன்,

‘இந்தம்மா எனக்கு பில்டப் கொடுத்து கிடைக்கிற வேலையையும் கெடுத்திடும் போலவே’, என்று பயந்து கொண்டிருக்க ... 

“yes! Ofcourse!!! that is the beauty of your mentorship !”, என்று புன்னகையுடனே அதை எதிர் கொண்டான் ஆர்யமனின் அலைபேசி வைப்ரேட் ஆக.... பேசிய வாக்கிலே அதை எடுத்துப் பார்த்தவனின் திரையில் “கர்னல்”, என்று மின்ன..

அது வரை சலமின்றி இருந்தவன் பரபரப்பானான்! அந்த அழைப்பை ஏற்கும் பரபரப்பில்,

“ஓகே சசி! உங்களுக்கு திருப்தின்னா ஹச். ஆர் மீட் பண்றதுக்கு கோ-ஆர்டினேட் பண்ணுங்க”, என்று அங்கிருந்த கிளம்பிய படியே அந்த அழைப்பை எடுத்தான்.

“ஹலோ கர்னல்!!!”, என்றதும்,

“எக்ஸ் கர்னல்ன்னு சொல்லுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்!”, என்று கண்டித்தது அந்த முதிய குரல்!

சிறு முறுவல் இவன் முகத்தில்! அவன் நடையின் வேகம் தளர்ந்தது.

“அதை விடுங்க கர்னல்! கிறிஸ்மஸ் வரைக்கும் ஆஸ்திரேலியாவில் இருக்கப் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரமா வந்து இருக்கீங்க?”

“இருக்கணும்னு ஆசை தான்! இருக்க முடியலையே!!! அஹமதாபாத்தை விட்டு எங்க சொந்த ஊர்லே இருக்க முடியலை! வேற நாட்டிலே எப்படி இருக்க முடியும்?”, என்றார் அவர் சோர்வுடன்!

“ம்ம்ம்... இந்த டயலாக் நீங்க சொல்லாம இருந்தா தான் ஆச்சர்யம்!!!”, என்றான் ஆர்யமன்!

“இந்த முறை அதுக்காக மட்டும் இல்லை!! பப்பிக்காகவும் அவசர அவசரமா வர வேண்டியதாகி போச்சு! ”,

என்று இடைவெளி விட்ட அந்த சில மணித் துளிகள் இவன் மனம் பதைபதைப்பில் பாடாபட்டு போனது!!

“எல்லாம் நல்ல விஷயமா தான்!. அவளுக்கும் கல்யாண வயசு வந்திடுச்சுல்ல!!”

என்றதும்... பதைபதைப்பு அடங்கினாலும்.... வேறு ஒரு கவலை வந்து அமர்ந்து கொண்டது - பப்பியை உரிமை கொண்டாட ஒருவன் வரப் போகிறான் என்பது புரிபட! இது எதிர்பார்த்தது தானே!!! தன்னைத் தானே தேற்றினாலும்...தன்னிடம் ஒன்றிப் போனதை பறித்து செல்வது போல... மனதில் வெறுமை!

“பப்பியை என் சகலை பேரனுக்கு தான் கேட்கிறாங்க! எனக்கும் பேரன் மாதிரி தான்! தங்கமான பையன்”, என்று தொடங்கி அவர் பேசியதெல்லாம் இவன் காதிலே விழவில்லை.... முடிவில்,

“யோகா தான் வாழ்க்கையை அவசரபட்டு தான் அழிஞ்சுகிட்டா! பப்பியாவது..”

என்று குரல் தழுதழுத்த பொழுது தான் இவன் நிகழ்வுக்கே வந்தான்.. அவர் கலக்கத்தை கண்டவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.